ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: SLVSBAN

கருணரத்னே, ஜெயவிக்ரமா அபாரம் – 2வது டெஸ்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இலங்கை!

கருணரத்னே, ஜெயவிக்ரமா அபாரம் – 2வது டெஸ்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இலங்கை!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
கருணரத்னே, ஜெயவிக்ரமா அபாரம் - 2வது டெஸ்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இலங்கை! வங்காளதேசம் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் நடைபெற்றது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் எடுத்தது. கேப்டன் கருணரத்னே 118 ரன்னும், லஹிரு திரிமானே 140 ரன்னும், ஒஷாடா பெர்னாண்டோ 81 ரன்னும், டிக்வெலா 77 ரன்னும் எடுத்தனர். வங்காளதேசம் அணி சார்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட்டும், மெஹிதி ஹசன், ஷோரிபுல் இஸ்லாம், தஜுல் இஸ்லாம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் அணி முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிம் இக்பால் 92 ரன்னும்,...
2வது டெஸ்டில் கருணரத்னே, திரிமானே சதம் – இரண்டாம் நாள் முடிவில் இலங்கை 469/6!

2வது டெஸ்டில் கருணரத்னே, திரிமானே சதம் – இரண்டாம் நாள் முடிவில் இலங்கை 469/6!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
2வது டெஸ்டில் கருணரத்னே, திரிமானே சதம் - இரண்டாம் நாள் முடிவில் இலங்கை 469/6! வங்காளதேசம் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கருணரத்னே, லஹிரு திரிமானே ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடி அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 209 ரன்னாக உயர்ந்த போது 12-வது சதத்தை அடித்து இருந்த கருணரத்னே (118 ரன், 190 பந்து, 15 பவுண்டரி) கேட்ச் ஆனார். திரிமன்னே 212 பந்துகளில் தனது 3-வது சதத்தை பூர்த்தி செய்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி முதல்...