அகதிகளாக தமிழகத்திற்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்!
இலங்கையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டு மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதையடுத்து, அங்கு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் கிடுகிடுவென விலை உயர்ந்ததை அடுத்து பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் சத்திரத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக ஆறு நபர்கள் நிற்பதாக கியூ பிராஞ்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, கியூ பிராஞ்ச் போலீஸார் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து கடலோர காவல் படையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் இலங்கை தலைமன்னார், யாழ்பாணத்தில் இருந்து அகதிகளாக தமிழகத்துக்கு வந்தது தெரியவந்துள்ளது.
...

