வியாழக்கிழமை, செப்டம்பர் 17
Shadow

Tag: Srilankan Protest

இலங்கை – போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

இலங்கை – போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றை வாங்க முடியாததால் அந்தப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். மின்சார தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி அவரது அலுவலகம் எதிரே ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நீடித்து வருகிறது. பல இடங்களில் தெருமுனைப் போராட்டங்களும் அதிபருக்கு எதிராக நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இலங்கையின் கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  இதில் ஒருவர் பலியாகினார். மேலும், பலர் காயமடைந்த...
அதிபர் கோத்தபய உடனே பதவி விலகவேண்டும்-இலங்கையில்  மக்கள் போராட்டம்!

அதிபர் கோத்தபய உடனே பதவி விலகவேண்டும்-இலங்கையில் மக்கள் போராட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசிய மற்றும் உணவு பொருட்கள் விலை உயர்வால் கடும் அவதிப்படும் அந்நாட்டு மக்கள் அதிபர் கோத்தபய அலுவலகத்திற்கு வெளியே தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் அதிபர் மாளிகை முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிபர் கோத்தபய உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்ப்பாளர்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்று கோத்தபய அறிவித்ததால் பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டம் நடத்தியவர்களில் பலர் கைது செய்யப்பட்டிருப்பதாக முன்னணி பல்கலைக்கழகமான என்யுஎஸ் தெரிவித்துள்ளது. மாணவர்கள், விவசாயிகள் மற்றும் நீதித்துறையினர் அனைவரும் ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு "இனி ராஜபக்சேக்கள் ...