செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

இலங்கை – போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றை வாங்க முடியாததால் அந்தப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
மின்சார தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி அவரது அலுவலகம் எதிரே ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நீடித்து வருகிறது.
பல இடங்களில் தெருமுனைப் போராட்டங்களும் அதிபருக்கு எதிராக நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையின் கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  இதில் ஒருவர் பலியாகினார். மேலும், பலர் காயமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
335 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன