திங்கட்கிழமை, மே 4
Shadow

Tag: thaipusam festival batu caves

மொளச்சூர் முருகன் கோவிலுக்கு வெள்ளிக் கவசங்கள், தங்கத் கண் மலர்கள் வழங்கிய சசிகலா!

மொளச்சூர் முருகன் கோவிலுக்கு வெள்ளிக் கவசங்கள், தங்கத் கண் மலர்கள் வழங்கிய சசிகலா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள மொளச்சூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரானா பரவல் வழிகாட்டி விதிமுறைகளின்படி, தைப்பூச தினமான நேற்று, கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், இன்று தைப்பூச விழாவை யொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.   சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடைபெற்ற தைப்பூச விழா  சிறப்பு பூஜையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், முன்னாள் அதிமுக பொதுச் செயலாளருமான வி.கே. சசிகலா கலந்துகொண்டு வள்ளி, தெய்வானையுடன் காட்சி அளிக்கும் முருகப்பெருமானுக்கு 35 லட்ச ரூபாய் மதிப்பில் 4 அடி உயரமும் 35 கிலோ எடையும் கொண்ட வெள்ளி கவசத்தையும், தங்க கண் மலர்களையும் காணிக்கையாக வழங்கி சுவாமி தரிசனம் செய்தார்....