இன்றைய முக்கியச் செய்திகள்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நடந்த பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு பணியில் சுமார் 1 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப் 2 தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படுகிறது.
குரூப் 2 -வில் மொத்தம் 5 ஆயிரத்து 831 காலிப்பணியிடங்கள் இருப்பதாக ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்திருந்தார்.
இந்த காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் சட்டசபை தேர்தல் 20-ம் தேதி நடக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு காங்கிரஸ் எப்போதும் துரோகம் செய்து வந்துள்ளது எனக் குற்றம் சாட்டினார்.
நதிகள் இணைப்புத்திட்டம் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 5 மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் மத்திய அரசு இன்று அவசர ஆலோசனை ம...

