
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நடந்த பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு பணியில் சுமார் 1 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப் 2 தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படுகிறது.
குரூப் 2 -வில் மொத்தம் 5 ஆயிரத்து 831 காலிப்பணியிடங்கள் இருப்பதாக ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்திருந்தார்.
இந்த காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் சட்டசபை தேர்தல் 20-ம் தேதி நடக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு காங்கிரஸ் எப்போதும் துரோகம் செய்து வந்துள்ளது எனக் குற்றம் சாட்டினார்.
நதிகள் இணைப்புத்திட்டம் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 5 மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் மத்திய அரசு இன்று அவசர ஆலோசனை மேற்கொள்கிறது.
தேர்தல் பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த நபர்கள், அத்தியாவசியமின்றி விடுதிகளில் தங்கக்கூடாது என சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, திருவல்லிக்கேணி, பெரியமேடு, தியாகராயநகரில் உள்ள விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
உத்தரப்பிரதேசத்தில் திருமண சடங்கின்போது கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுமிகள், பெண்கள் என 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தியா-மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்றிரவு நடைபெறுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோயிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார்.தனது வருங்கால கணவர் விக்னேஷ் சிவனுடன் சோட்டாணிக்கரைக்கு சென்றவர் அங்கு சில மணி நேரம் காத்திருந்த நயன்தாரா, கோயில் நடை திறக்கப்பட்டதும் பகவதி அம்மனை தரிசித்தார்.
கோவையில் திமுகவிற்கு ஆதரவாக வெளிநாட்டைச் சேர்ந்தவர் ஓட்டு கேட்ட விவகாரத்தில், உரிய விளக்கமளிக்க குடியுரிமை துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தொழில் நிமித்தமாக ருமேனியாவிலிருந்து கோவைக்கு வந்த ஸ்டெஃபன் என்பவர், பொதுமக்களிடம் திமுகவிற்காக வாக்கு சேகரித்தார்.
கர்நாடகாவில் மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையை 5-வது நாளாக கர்நாடக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஹிஜாப் அணிய தடை விதிப்பது குரானை தடை செய்வது போலானது என மாணவிகள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது
