
கேரளாவில் பிரசித்தி பெற்ற சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலில் பல மணி நேரம் காத்திருந்து, கோவில் நடை திறந்தவுடன் நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவன் இருவரும் தரிசனம் செய்தனர்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சோட்டானிக்கரை கோவிலில் மகம் நட்சத்திர தினம் முக்கியத்துவம் வாய்ந்தது.

இதையொட்டி, சோட்டானிக்கரை தேவி கோவிலில் ஏழாம் நாள் திருவிழாவையொட்டி மகம் தொழுதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதனைக்காண கேரளா மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பெண்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர்.

இந்நிலையில், இன்று சோட்டானிக்கரையில் தரிசனம் செய்ய வந்த தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை நயன்தாரா,
நடிகர் ஜெயராமின் மனைவி பார்வதி ஜெயராம் ஆகியோர் பல மணி நேரம் காத்திருந்து, கோவில் நடை திறந்தவுடன் தரிசனம் செய்தனர்.
நயன்தாராவுடன் அவரது காதலரும் தமிழ் திரைப்பட இயக்குனருமான விக்னேஷ் சிவனும் வந்திருந்தார்.
நடிகை நயன்தாரா வருகை தந்துள்ளதை அறிந்த பக்தர்கள் அவரை காண்பதில் ஆர்வம் காட்டினர்.

