புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: Ukraine Russia Clash

பெலாரஸ் எல்லையில் ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது!

பெலாரஸ் எல்லையில் ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள உக்ரைன் படைகள், ரஷியாவை முன்னேற விடாமல் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின. ஆனால் ரஷியாவின் அழைப்பை உக்ரைன் முதலில் ஏற்கவில்லை. பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துவதை உக்ரைன் விரும்பவில்லை. மீண்டும் ரஷியா அழைப்பு விடுத்தபோது, பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தது. அதன்படி, ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்பியது. அந்த குழுவினர், ரஷிய பிரதிந...
உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார்- ரஷியா!

உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார்- ரஷியா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனுடன் 2-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அடக்குமுறையில் இருந்து உக்ரைனை மீட்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக...
உக்ரைன் தலைநகரில் நுழைந்தது ரஷிய படை… சண்டையில் ஏராளமானோர் பலி!

உக்ரைன் தலைநகரில் நுழைந்தது ரஷிய படை… சண்டையில் ஏராளமானோர் பலி!

HOME SLIDER, NEWS, அரசியல், உலக செய்திகள், செய்திகள்
ரஷியா- உக்ரைன் இடையே இன்று போர் தொடங்கியது. ரஷிய அதிபர் தொலைக்காட்சியில் தோன்றி உக்ரைன் மீதான போர் அறிவிப்பை வெளியிட்டதையடுத்து உக்ரைன் மீது ரஷிய நாட்டுப்படைகள் தாக்குதல் நடத்கின்றன. ரஷிய விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழி தாக்குதலை நடத்தியது. அங்குள்ள விமானத்தளங்கள் மற்றும் வான் பாதுகாப்புத் தளங்களையும் தாக்கியது. பதிலுக்கு உக்ரைன் ராணுவம், ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள். இரு நாடுகளுக்கும் இடையே முதல் நாளிலேயே கடும் போர் நடந்தது. ரஷிய போர் விமானங்கள் உக்ரைனில் உள்ள முக்கிய பகுதிகளை தாக்கி அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதனால் போர் தொடங்கிய முதல் நாளிலேயே உக்ரைன் பெரும் அழிவை சந்தித்தது. ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டதால் சேதம் அதிகமாகக் காணப்பட்டது. துல்லிய ஆயுதங்கள் மூலம் விமான தளங்களையும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் அழித்துவிட்டதாக ரஷிய ப...
ரஷ்யாவுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் கண்டனம்!

ரஷ்யாவுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் கண்டனம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறும்போது, ‘புதினின் இந்த அறிவிப்பை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இது உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்தியத்தின் ஒருமைப்பாடு மீதான தெளிவான தாக்குதல் ஆகும். பிரான்ஸ் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிபர் மெக்ரான் ரஷ்யாவின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தினார். ரஷ்யா மீது ஐரோப்பா பொருளாதார தடைகளை விதிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த ஒருதலைபட்சமான மீறல் ரஷ்யாவின் சர்வதேச உறவை மீறுவது ஆகும். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, கிளர்ச்சியாளர் பகுதிகளை ரஷ்யா அங்கீகரிப்பதன் மூலம் போர் பதற்றத்தை தணிக்க நடத்தப்படும் அமைதி பேச்சுவார்த்தை முயற்சிகளை ரஷ்யா அழித்துள்ளது. ஆனால் எங்கள் நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்றார். ...
உக்ரைன் விவகாரம்: பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா-ரஷியா அதிபர்கள் சம்மதம்!

உக்ரைன் விவகாரம்: பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா-ரஷியா அதிபர்கள் சம்மதம்!

HOME SLIDER, NEWS, அரசியல், உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள்
உக்ரைன் - ரஷியா இடையேயான பதற்றம் குறித்து பிரான்ஸ் அதிபர்  இம்மானுவேல் மேக்ரோன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன்  தொலைபேசி மூலம் தனித்தனியாக விவாதித்தார். ரஷியா படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கை குறித்து இரு தலைவர்களுடன் அவர் பேசினார் உக்ரைன் சூழலால் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து அமெரிக்கா, ரஷியா அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் அப்போது கேட்டுக் கொண்டார்.  இதை ஜே பைடனும், விளாடிமிர் புதினும் ஏற்றுக் கொண்டதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்புத்துறை செயலாளர் ஜென்சாகி தெரிவித்துள்ளார். இதையடுத்து அமெரிக்கா, ரஷியா அதிபர்கள் சந்திக்கும் உச்சி மாநாடு குறித்தும், அதில் விவாதிக்கப்படும் பொருள் குறித்த அறிக்கைகைளை தயாரிப்பது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் ரஷ்ய வெளியுறவு மந்...
கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதிகளில் தாக்குதல் – போர் பதற்றம் தீவிரம் அடைகிறது!

கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதிகளில் தாக்குதல் – போர் பதற்றம் தீவிரம் அடைகிறது!

HOME SLIDER, NEWS, அரசியல், உலக செய்திகள், செய்திகள்
ரஷியா-உக்ரைன் நாடுகள் இடையே போர் பதற்றம் இருந்து வருகிறது. எல்லையில் ரஷியா ஒரு 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனும் எல்லையில் போர் பயிற்சி செய்து வருகிறது. இவ்விவகாரத்தில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆதரவாக உள்ளன. உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அதனை ரஷியா மறுத்துள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பஸ் மாகாணத்தில் ஒரு பகுதி அரசு கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலும் உள்ளன. இப்பகுதியில் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகள் ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது. இங்கு சில நாட்களாக அரசு படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. மேலும் கிளர்ச்சியாளர்கள் பகுதிகளில் ...
உக்ரைன் மீது போர் தொடுக்க  ரஷ்யா தயார்- வெளிப்படுத்தும் செயற்கைக்கோள் படங்கள்!

உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா தயார்- வெளிப்படுத்தும் செயற்கைக்கோள் படங்கள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும், அதன் அண்டை நாடான ரஷ்யாவும் நீண்ட காலமாகவே மோதி வருகின்றன. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. ஆனாலும், ரஷ்யா எந்நேரத்திலும் வான்வழி தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் உக்ரைனில் இருந்து உடனே வெளியேறும்படி தங்கள் குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளன. இந்த நெருக்கடி குறித்து விவாதிக்க 48 மணி நேரத்துக்குள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என ரஷ்யாவுக்கு கெடு விதித்துள்ள உக்ரைன், இதில் பங்கேற்க ஐரோப்பிய பாது...