
”விலையில்லா விருந்தகம்”, தெருவோர ஏழைகளுக்கு இலவச உணவு என அசத்தல் செயல்களுடன் களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கம்!
அரசியலை தனக்கு அணுக்கமான துறையாக விஜய் கருதுகிறார்.
தன் படங்களிலிருந்தே அரசியலுக்கான விதைகளை தூவி வரும் விஜய்,
அண்மையில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 'விஜய் மக்கள் இயக்கத்தை' களமிறக்கி அரசியல் ஆழம் பார்த்தார்.
அதில் விஜய்க்கு நல்ல பலனும் கிடைத்தது.
இத்தனைக்கும் அந்த தேர்தலில் விஜய்யின் புகைப்படமோ,
விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சி கொடியோ பயன்படுத்த கூடாது என்ற அறிவிப்பு இருந்தபோதிலும் 169 இடங்களில் களமிறங்கி 121 இடங்களை தட்டி தூக்கினர்.
இதில் அரசியல் தளத்தில் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையேயும் கவனம் ஈர்த்தது.
இந்த தேர்தல் வெற்றி விஜய்க்கு உற்சாகத்தை அளித்திருக்க கூடும்.
அடுத்தடுத்த தேர்தல்களில் களம் காண இந்த தேர்தல் பலமான கடைக்கால் அமைத்துள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை நேரில் சந்தித்து விஜய் வாழ்த்தியதாக ச...