Author: Kodanki
விஷ்னு மஞ்சுவின் குறள் 388 படத்தின் முதல் பார்வை..!
பரபரப்பை ஏற்படுத்திய விஷ்னு மஞ்சுவின் குறள் 388 படத்தின் முதல் பார்வை .
விஷ்னு மஞ்சு நடிக்கும் குறள் 388படத்தின் கிளர்ச்சியூட்டும் முதல் பார்வை .
விஷ்னு மஞ்சு நடிக்கும் குறள் 388-ன் முதல் பார்வை நவம்பர் 23,புதன்கிழமை அன்று வெளியானது. படத்தின் கதாநாயகன் விஷ்ணு மஞ்சுவின் பிறந்த நாளை முன்னிட்டு,இப்படத்தின் முதல் பார்வை வெளியானது. ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படித்தின் முதல் பார்வையை விஷ்ணு மஞ்சு ட்விட்டரில் வெளியிட்டார். பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வை சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், முதல் பார்வையில் பல தலைவர்களின் படங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர், கருணாநிதி,ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் உள்பட பல தேசிய கட்சிகளின் தலைவர்கள் படம் இடம் பெற...
ஹாலிவுட் படங்களை மிஞ்சும் இந்திரஜித் – இயக்குனர் கலா பிரபு
ஹாலிவுட்லகூட இந்த அளவுக்கு ஒரு பியூர் அட்வெஞ்சர் படம் வந்திருக்காது!- இந்திரஜித் இயக்குநர் கலாபிரபு
கலாபிரபு... தமிழ் சினிமாவின் தலையாய தயாரிப்பாளரின் மகன். நினைத்திருந்தால் முதலாளியாகவே இருந்திருக்கலாம். ஆனால் பிடிவாதமாக இயக்குநர் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் சாதித்துக் காட்டும் முனைப்புடன் இரண்டாவது படத்தை இயக்கி முடித்து விட்டார்.
படம் நாளை வெளியாகிறது. அதற்கு முன் கலாபிரபுவிடம் பேசியதில் இருந்து...
இந்திரஜித் ட்ரெய்லர் பார்த்தாலே பெரிய பட்ஜெட்னு தெரியுதே?
என்ன கேட்க வர்றீங்கன்னு புரியுது. இந்தக் கதை எழுதும்போதே இவ்வளவு செலவு ஆகும்னு தெரியும். அட்வென்சர் படம்கறப்போ அந்த செலவு நியாயமானதா இருக்கும். டெக்னிக்கலா நிறைய விஷயங்கள் தேவைப்பட்டுச்சு. டெய்லி மூணு, நாலு கேமரா செட்டப்ல ஷூட் பண்ணினோம். ஆனா ஒரு படத்தோட வெற்றியை பட்ஜெட் மட்டுமே நிர்ணயிக்காதுனு ஒரு இயக்குநரா நம்புறேன். அதன...
விஜய் யேசுதாஸ் படைவீரன் படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ்
இவோக் சார்பாக மதிவாணன் தயாரிப்பில் பாரதிராஜா மற்றும் விஜய் யேசுதாஸ் நடித்து மணிரத்னம் உதவியாளர் தனா இயக்கும் படைவீரன் படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
முன்னதாக படைவீரன் படத்தை பிரத்தியேகமாக தனுஷிற்காக படக்குழுவினர் போட்டுக் காட்டியுள்ளனர். படம் தனுஷிற்கு மிகவும் பிடித்திருந்ததால் அவர் படைவீரன் படத்திற்காக கார்த்திக் ராஜா இசையில், ப்ரியன் வரிகளில் உருவான "லோக்கல் சரக்கா பாரின் சரக்கா... ஊத்திக்குடிச்சா எல்லாம் ஒன்னுடா... " எனத் தொடங்கும் பாடலை தனுஷ் பாடி கொடுக்க, படம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தனுஷ் பாடிய பாடலை காட்சிப்படுத்தி படக்குழுவினர் படத்தை நிறைவு செய்துள்ளனர்.
படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ் பாடல் படமாக்கப்பட்ட விதத்தை மிகவும் பாராட்டினார். படைவீரன் படம் டிசம்பரில் வெளியாகிறது....
ராஜுமுருகன் கதை, வசனத்தில் ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’புதிய படம்
ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் பெயரிடப்படாத புதிய படமொன்றை தயாரிக்கிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜுமுருகன் கதை, வசனத்தை எழுதுகிறார்.திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் சரவணன் ராஜேந்திரன். இவர் பாலு மகேந்திரா, கமல்ஹாசன், ராஜுமுருகன் ஆகியோரிடம் பணியாற்றியவர். இந்த படத்தில் கோவையைச் சேர்ந்த ரங்கா நாயகனாக அறிமுகமாகிறார்.
இப்படம் குறித்து ராஜுமுருகனிடம் பேசிய போது ரங்கா எப்படி இந்த படத்திற்குள் வந்தார் என்கிற விஷயத்தை சுவாரஷ்யமாக சொன்னார்.
“எதிர்பாராத நேரத்தில் மழை பெய்வது போலத்தான் வாழ்க்கையிலும் சில ஈரமான சம்பவங்கள் நிகழ்ந்து விடுகிறது. அடர்த்தியான கதை, எளிமையும் அழகியலுமான திரைக்கதை, நல்ல தயாரிப்பாளர் எல்லாம் அமைந்துவிட்டது. இதன் பிறகு தொடர்ந்து கதாநாயகனுக்கான தேடலில் இருந்தோம். பலரையும் பார்த்து எதுவும் சரியாக அமையாமல் சலித்து போன நேரத்தில் நண்பர் ...
கந்துவட்டி விவகாரம் தொடர்ந்தால் புரட்சி வெடிக்கும்: விஷால்
பிரபல பைனான்சியர் அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர். அவரின் உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் இன்று அசோக்குமார் உடலுக்கு ஏராளமான திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் இன்று மதுரையில் நடந்த அசோக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார். மேலும், அசோக்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த விஷால் கூறுகையில், ''கந்துவட்டி பிரச்சினை அனைவரையும் பாதித்துள்ளது. கந்துவட்டியால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் நான், கவுதம் மேனன், பார்த்திபன் ஆகியோர் இருக்கிறோம்.
கந்துவட்டி கொடுமையால் அசோக்குமார் மரணமே கடைசியாக இருக்க வேண்டும். அசோக்குமாருக்கு தொல்ல...
திருப்பதியில் நடந்த நமீதா திருமண நிச்சயதார்த்தம்
இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான மல்லிரெட்டி வீரேந்திர சவுத்ரி என்பவருக்கும், நடிகை நமீதாவுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு திருப்பதியில் உள்ள இஸ்கான் கோவிலில் திருமணம் நடக்க உள்ளது.
அதையொட்டி இருவரும் நேற்று மாலை ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்டு ரேணிகுண்டா வந்தனர். ரேணிகுண்டாவில் இருந்து கார் மூலம் திருப்பதிக்கு வந்தனர்.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் எதிரே உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இருவருக்கும் நேற்று இரவு 8 மணியளவில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் முக்கியமான நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. திருமண நிச்சயதார்த்தத்தில் ஒருசிலர் மட்டுமே பங்கேற்றனர்...
பங்களாவை விற்று கடனை அடைத்தேன்: பார்த்திபன்
கடனை அடைத்தது பற்றி பார்த்திபன் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
நான் சினிமா பைனான்சியர் பல பேர் கிட்ட வட்டிக்கு பணம் வாங்கி இருக்கேன். அதுல அன்பும் ஒருவர். வாங்குன பணத்தை ஒத்துக்கிட்ட வட்டியோட சொன்ன தேதியில் கொடுக்க, நான் முதன் முதலாக வாங்குன பங்களாவை கூட வித்திருக்கிறேன்.
ஆனால் யார்கிட்டயும் தலைகுனிஞ்சி நின்றதில்ல. அந்த திமீர் என்னைப் பிடிச்சிருக்கு. எனக்கும் பிடிச்சிருக்கு. நாலு படத்தில் நடிச்சி கடனை அடிச்சிட்டு மறுபடியும் படம் எடுப்பேன். அது தான் எனக்கு ஏற்படுகிற விடுமுறை.
நான் ஆதங்கப்பட்டு குரல் கொடுக்கிறது சக நண்பர்களின் பிரச்சினைகளுக்கு மற்றபடி நான் சந்திக்கிற பிரச்சினைகளை சவாலாகத்தான் எதிர்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்....
தடயவியல் பரிசோதனைக்கு செல்கிறது ஜெ., கைரேகை: திமுக கோரிக்கையை ஏற்றார் நீதிபதி
2-வது நாளாக விசாரணை கமிஷனில் ஆஜராகி ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான ஆவணங்களை வழங்கினேன். அதோடு ஜெயலலிதாவின் கையெழுத்திட்ட ஒரு போர்ஜரி கடிதத்தையும் வழங்கினேன். இந்த கடிதம் அன்றைய கவர்னருக்கு ஜெயலலிதாவால் அனுப்பப்பட்டதாகும்.
என்னுடைய விசாரணை முடிந்து விட்டது. தேவை என்றால் விசாரணைக்கு அழைப்பதாக கூறி உள்ளனர்.
அறிக்கையில் உள்ளதை எடுத்து சொல்லி உள்ளேன். விசாரணை கமிஷன் அதை தேவைப்படும் போது பெற்றுக் கொள்வதாக கூறி உள்ளனர்.
ஜெயலலிதாவின் கைரேகையையும் அவரது கடிதத்தில் உள்ள கையெழுத்தையும் அரசு தரப்பில் தடய அறிவியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.
ஜெயலலிதாவின் பழைய கையெழுத்துக்கும், ஆஸ்பத்திரியில் இருந்த போது போடப்பட்டதாக கூறப்படும் கையெழுத்துக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதால் நாங்கள் சந்தேகத்தை எழுப்பி உள்ளோம்.
போர்ஜரிக்கான முகாந்திரம் இருக்கிறது என்றோம்....
ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு கிடைத்தது இரட்டை இலை சின்னம்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக கட்சியின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது அனைவரும் அறிந்ததே.
சசிகலா சிறைக்கு சென்ற பிறகு தினகரன் தலைமையிலும் ஓபிஎஸ் தலைமையிலும் அணிகள் செயல்பட்டன. அப்போது இரட்டை இலை சின்னத்தைப் பெற எடப்பாடி - ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா - தினகரன் தரப்பினர்களும் தங்களது ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நடந்த விசாரணையில் எடப்பாடி - ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா - தினகரன் ஆகிய இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இதுதொடர்பான தீர்ப்பைத் தேர்தல் ஆணையம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்தநிலையில், இரட்டை இலை சின்னம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர...

