பிரமாண்ட படைப்பில் மீண்டும் நானி; ஸ்ரீகாந்த் ஒடேலாவுடன் கைகோர்க்கிறார்
காதல் மற்றும் ஆக்ஷன் டிராமா ஜானரில் வெளியான தசரா திரைப்படம் கடந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக மாறியது. மேலும் நானி நடிப்பில் வெளியாகி அதிக வசூல் செய்த படமாகவும் தசரா அமைந்தது. இந்த நிலையில், தசரா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலாவுடன் புதிய படத்தில் இணைகிறார். நானி 33 என தற்காலிக தலைப்புடன் துவங்கப்பட்டு இருக்கும் இந்த படத்தை ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் (எஸ்.எல்.வி. சினிமாஸ்) சார்பில் சுதாகர் செருக்குரி தயாரிக்கிறார்.
தசரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஸ்ரீகாந்த் ஒடேலா, முதல் படத்திலேயே அதிக வசூலை குவித்து நல்ல வரவேற்பை பெற்றார். தனது முதல் படத்திலேயே நானியை இதுவரை யாரும் பார்த்திராத அளவுக்கு வித்தியாசமாக வெளிப்படுத்தி இருந்தார்.
புதிய படம் தொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரில் ரத்தம் தெறிக்க சிவப்பு நிறம் கொண்டிருக்கிற...









