செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

வெப்பம் குளிர் மழை விமர்சனம் 3/5

 

 

 

 

 

 

இயக்கம்: பாஸ்கல் வேதமுத்து

நடிகர்கள்: எம் எஸ் பாஸ்கர், திரவ், இஸ்மத் பானு, ரமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலக்‌ஷ்மி

ஒளிப்பதிவு: ப்ரித்வி ராஜேந்திரன்

இசை: ஷங்கர்

தயாரிப்பு: Hashtag FDFS productions

தயாரிப்பாளர்: திரவ்

 

கதைப்படி,

கிராமத்தில் நடக்கிற கதை. நாயகனாக திரவ். இவரது மனைவியாக வருகிறார் இஸ்மத் பானு. திரவ்வின் அம்மாவாக வருகிறார் ரமா.

திருமணமாகி ஐந்து வருடங்களாகியும் திரவ்-பானு தம்பதியினருக்கு குழந்தை இல்லை. கிராமத்தில் பிறந்தவராக இருப்பதால், மருத்துவமனை சென்று சிகிச்சை பெறுவதெல்லாம் கூடாது என்ற எண்ணத்தில் இருக்கிறார்.

அது தனக்கு அவமானம் என்றும் நினைக்கிறார் திரவ். குழந்தை வரம் வேண்டி கோவில் கோவிலாக செல்கின்றனர்.

அதே நேரம் இவர்களுக்கு குழந்தை இல்லை என்பதை கிராமத்தினரும் குத்திக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

மாமியார் ரமா, குழந்தை இல்லை என்பதால் மருமகள் பானுவை தரக்குறைவாக நடத்துகிறார்.

இதனால் வாழ்க்கையை வெறுத்து போய், தனது கணவனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்று சோதித்து பார்த்த போது, தனது கணவனுக்கு குழந்தை கொடுக்கும் சக்தி இல்லை என்பது பானுவுக்கு தெரிகிறது. இந்த விஷயத்தை கணவனிடம் கூறாமல், சிகிச்சை முறையில் கர்ப்பமடைந்து கொள்கிறார் பானு.

குழந்தையும் பிறக்கிறது. வருடங்கள் உருண்டோட பிறந்த குழந்தை தன்னுடையது இல்லையென்றறிகிறார் திரவ்.

அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் திரவ் மற்றும் நாயகி இஸ்மத் பானு இருவரும் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட, கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

மிகவும் நேர்த்தியாக அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்கு உயிர் கொடுத்து நடித்திருக்கிறார்கள் இருவரும். அதிலும் பானு பல இடங்களில் படம் பார்ப்பவர்களின் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைத்துவிடுகிறார்.

மாமியாராக ரமா, கடுகடுவென இருந்தாலும் படத்தின் இறுதியில் மருமகளின் பக்கம் நிற்பது மனதை உருக வைத்துவிட்டது.

பலரும் தொடாத ஒரு கதையை எடுத்து அதை இயக்கி சாதிக்கவும் செய்திருக்கிறார் இயக்குனர்.

திரைக்கதையில் இன்னும் உயிரோட்டத்தை ஏற்றி வேகமெடுக்க வைத்திருந்தால், கதை சற்று கூடுதலாகவே அனைவரின் மனதையும் சென்றடைந்திருக்கும்.

எம் எஸ் பாஸ்கர் ஊரில் முக்கிய புள்ளியாக வந்து தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்.

பாடல் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம். ஒளிப்பதிவு கிராமத்து வாழ்வியலை கண்முன்னே நிறுத்தியிருக்கிறது. அடிதடி சத்தம் ஆக்‌ஷன் வன்முறைகளுக்கு மத்தியில் வித்தியாசமான முயற்சி இது.

வெப்பம் குளிர் மழை – புதிய முயற்சி.

 

44 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன