நான் முதலமைச்சராக ரசிகர்கள் விரும்புகிறார்கள் : பவர் ஸ்டார் சீனிவாசன்
நான் முதலமைச்சராக ரசிகர்கள் விரும்புகிறார்கள் : பவர் ஸ்டார் சீனிவாசன்
பவர் ஸ்டார் சீனிவாசன் தற்போது ‘சிரிக்க விடலாமா’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை காவியன் என்பவர் இயக்கியுள்ளார். நிதின் சத்யா, மகாநதி சங்கர், சந்தான பாரதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.
இதில் பங்கேற்று பேசிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும்போது, இன்று முதலமைச்சராவதற்கு எவ்வளவு கஷ்டம், எவ்வளவு அடிதடி, எவ்வளவு சண்டையெல்லாம் நடக்கிறது. இப்படியெல்லாம் நடக்கும்போது நானும் ஒரு படத்தில் முதலமைச்சராக நடித்திருக்கிறேன். பாக்யராஜ் சாருடன் அந்த படத்தில் நான் நடித்தேன். எல்லோருக்கும் முதலமைச்சர் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கும். நான் அந்த படத்தின்மூலம் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன். இப்படித்தான், நிஜத்தில் சாதிக்க முடியாததை நாங்கள் ...
