புதன்கிழமை, ஜூலை 8
Shadow

Author: Kodanki

நெடுநல்வாடை விமர்சனம்

நெடுநல்வாடை விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
சிங்கிலிபட்டி கிராமத்தில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வருபவர் செல்லையா (பூ ராம்). வீட்டை விட்டு ஓடிப் போன மகள் இரண்டு குழந்தைகளோடு மீண்டும் தனது அப்பாவை(பூ ராமை) நாடி வருகிறார். மகனின் எதிர்ப்பையும் மீறி தனது மகளையும் பேரப்பிள்ளைகள் இருவரையும் வீட்டிற்குள் தங்க வைக்கிறார் பூ ராம். எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கும் தாய் மாமன் முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று சொல்லி தனது பேரனை வளர்க்கிறார். படிப்பில், படு சுட்டியாக இருக்கும் நாயகன் இளங்கோவிற்கு நாயகி அஞ்சலி நாயர் மீது காதல். தாத்தா அறிவுரையின்படி தனது குடும்பத்திற்காக தனது காதலை தியாகம் செய்கிறார் இளங்கோ. ஒரு கட்டத்தில், காதலால் பல பிரச்சனைகள் ஏற்பட, இறுதியில் இளங்கோ வேலைக்காக வெளிநாடு சென்று விடுகிறார். பல வருடங்கள் வெளிநாட்டிலேயே தங்கி விடுகிறார். இளங்கோவின் காதல் ஜெயித்ததா..?? தனது இறுதி காலத்தில் பேரனை பூ ராம் கண்டாரா இல்...
300 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘ரெளடி பேபி பாடல்!

300 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘ரெளடி பேபி பாடல்!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யுடியூபில் 71 நாட்களில் 300 மில்லியன் பார்வைகளை பெற்று புதிய சாதனை. இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மாரி'. இப்படத்தின் இரண்டாம் பாகம் "மாரி 2". இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்தின் ரவுடிபேபி பாடல் இன்றும் இணையத்தில் டிரெண்டிங்கி வருகிறது. இந்த பாடலின் வீடியோ யூடியூப்பில் தற்போது வரை 300 மில்லியன் பார்வகைளை பெற்றுள்ளது மேலும் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தப் பாடல் 71 நாட்களில் 300 மில்லியன் பார்வகைளை பெற்று சாதனையைப் படைத்திருக்கிறது. தென்னிந்திய சினிமா பாடல் ஒன்று 300 மில்லியன் சாதனையைப் படைப்பது இதுவே முதல் முறை. &n...
கார்த்தி 19 பூஜையுடன் தொடங்கியது..!

கார்த்தி 19 பூஜையுடன் தொடங்கியது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
  கார்த்தி-யின் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம். - "கார்த்தி 19" வித்தியாசமான கதை அம்சமான 'கைதி' என்ற படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார். 'கார்த்தி 19' என்ற பெயரில் அழைக்கப்படும் இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது. தொடர்ந்து சென்னை மற்றும் பல பகுதிகளில் நடைபெறும். இதற்காக சென்னையில் சில இடங்களில் பெரிய செட் போடப்படுகிறது. அதிகபொருள் செலவில் இப்படத்தை 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' சார்பில் S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு தயாரிக்கிறார்கள். எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையான இப்படத்தில், கார்த்தி ஜோடியாக ரஷ்மிகா மண்டன்னா தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு...
“ஹீரோ” மூலம் இயக்குனராகும் “காக்கா முட்டை” வசனகர்த்தா..!

“ஹீரோ” மூலம் இயக்குனராகும் “காக்கா முட்டை” வசனகர்த்தா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள்
காக்கா முட்டை' படத்திற்கு வசனம் எழுதியதற்காக பல விருதுகளை குவித்தவர் ஆனந்த் அண்ணாமலை. 'குற்றம் தண்டனை' படத்தில் மணிகண்டனுடன் திரைக்கதை எழுதினார். இதுதவிர பல நாவல்களை எழுதியுள்ளார். தமிழ் எழுத்தாளரான இவர், மைத்திரி மூவி மேக்கர்ஸ்-ன் ஒன்பதாவது தயாரிப்பில், விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, 'ஹீரோ' என்ற படத்தை இயக்குகிறார். நேரடி தமிழ் படமாக உருவாகும் 'ஹீரோ' அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகும்.   'பாகுபலி', 'கே.ஜி.எஃப்' பாணியில்  விளையாட்டு த்ரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி புதுதில்லியில் ஆரம்பமாகும்.    இப்படத்தின் கதாநாயகியாக 'பேட்ட' படத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடிக்கிறார். 'காலா', 'கபாலி' புகழ் முரளி ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும்....
2 கோடி செலவில் கென்னடி கிளப் கிளைமாக்ஸ்..!

2 கோடி செலவில் கென்னடி கிளப் கிளைமாக்ஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
  சசிகுமார், இயக்குனர் பாரதிராஜா, இணைந்து  நடிக்க பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் கென்னடி கிளப். சசிகுமார் இதுவரை நடித்ததிலேயே இந்த படம் தான் அதிக பட்ஜெட் கொண்ட படம். 15கோடி செலவில் உருவாகி வரும் இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. தற்போது விழுப்புரத்தில் உள் விளையாட்டு அரங்கில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக இந்தியாவில் இருந்து 16 குழுக்கள் வந்துள்ளது. ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, பூனே, கேரளா, ஆந்திரா, மங்களூர், போன்ற இடங்களிலிருந்து கபடி குழுக்கள் வந்துள்ளது. நிஜ வீரர்களை கொண்டே படப்பிடிப்பு நடந்து வருகிறார்கள் . ஏறத்தாழ 300 வீரர்கள் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள். படப்பிடிப்பு விழுப்புரத்தில் நடந்தாலும் வடஇந்தியாவில் நடப்பது போல் பிரத்யேகமாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ள...
ஏப்ரல் 12ல் ரிலீஸ் ஆகி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க உள்ள பிரபுதேவாவின் “தேவி 2”

ஏப்ரல் 12ல் ரிலீஸ் ஆகி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க உள்ள பிரபுதேவாவின் “தேவி 2”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
  ஏப்ரல் 12 முதல் உலகமெங்கும் வெளியாகும் 'தேவி 2'! பொதுவாக 'திகில்' படங்கள் எப்போதும் குடும்ப பார்வையாளரகளின் விருப்ப படமாக  இருந்ததில்லை. அவர்கள் ஓய்வு நேரங்களில் ஜாலியாக ஏதாவது படத்தை பார்க்க வேண்டும் என்றே விரும்புபவர்கள். இயக்குனர் விஜய் மிகவும் புத்திசாலித்தனமான ஒரு அணுகுமுறையை தேவி படத்தில் கையாண்டிருந்தார். அதனாலேயே குடும்ப ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது. 'பேய்' படங்களிலேயே சற்று வித்தியாசமாக உருவானது தேவி. பயமுறுத்துவதை தாண்டி நம்மை விலா நோக சிரிக்க வைத்தது தேவி. இப்போதும் கூட, டிஜிட்டல் தளங்கள் மற்றும் டிவி சேனல்களில் பார்க்கும் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கிறது. இந்த படத்திற்கான ஆர்வம் இன்னும் அப்படியே இருக்கும் நிலையில், நம்மை இன்னும் உற்சாகப்படுத்த இருக்கிறது தேவி 2 படக்குழு. ஆம், வரும் ஏப்ரல் 12ஆம் தேதி அன்று தே...
ராகவா லாரன்ஸ்-ன் காஞ்சனா 3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ராகவா லாரன்ஸ்-ன் காஞ்சனா 3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'முனி'. இதன் இரண்டாம் பாகம் காஞ்சனா என்ற பெயரில் வெளிவந்தது. இந்த நிலையில், `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், சத்யராஜ், கிஷோர், மனோபாலா, சூரி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஏப்ரல் 19-ம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது....