இந்தியாவில் முதன் முறையாக YouTube இணையதளத்திற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் திரைப்படம்!
இந்தியாவில் முதன் முறையாக YouTube இணையதளத்திற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பிரத்யேகமாக உருவாகும் திரைப்படம்!
பேசும் படமாக ஆரம்பமான இந்திய சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் பல விதமான பரிணாம வளர்ச்சியை கண்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக திரைப்படங்கள் திரையரங்கு மட்டுமல்லாமல் OTT எனப்படும் டிஜிட்டல் தளங்களிலும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் முதன் முறையாக, முதல் முயற்ச்சியாக YouTube இனையதளத்திற்காக பிரத்யேகமாக படம் தயாரிக்கும் முயற்ச்சியில் இறங்கியிருக்கிறது NextGen எனும் நிறுவனம். Crowd Funding எனப்படும் கூட்டு தயாரிப்பில் இப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கிறது.
இதன் ஒருங்கினைப்பாளரான அரவிந்த் ஸ்ரீனிவாசன் இந்த முயற்சி குறித்து கூறுகையில் "YouTube இணையதளம் இன்று திரையுல...









