சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

MP தேர்தல் – கூட்டணி உடன்பாடு பேச, தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுகவில் குழுக்கள் அமைப்பு..!

பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகின்றன.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் தொகுதி உடன்பாடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 6 பேர் கொண்ட குழுவை நியமித்து திமுக பொது செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.


திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் இ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோல், தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக 8 பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. டி.ஆர். பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் ராமசாமி ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்

657 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன