செவ்வாய்க்கிழமை, ஜூலை 7
Shadow

Author: Kodanki

சர்கார் பட வசூலை முந்திய  ரஜினியின் 2.0

சர்கார் பட வசூலை முந்திய ரஜினியின் 2.0

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. சுமார் ரூ.550 கோடி பொருட்செலவில் உருவான இப்படம் வசூலில் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரிலீசான பெரும்பாலான தியேட்டர்களில் முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. 2.0 படம் சென்னையில் மட்டும் ரூ. 2.64 கோடி வசூல் செய்துள்ளது. இது சர்கார், மெர்சல், விவேகம், காலா ஆகிய படங்களைவிட அதிகம். இதன்மூலம் சர்காரின் முதல் நாள் வசூல் சாதனையை 2.0 முறியடித்துள்ளது. விஜய் நடித்த சர்கார் படம் சென்னையில் முதல் நாள் ரூ. 2.37 கோடி வசூலித்தது. சென்னையில் ரிலீசான அன்றே அதிகம் வசூல் செய்த படமாக சர்கார் இருந்தது. அந்தப்படம் தீபாவளி அன்று ரிலீஸாகி அதிகம் வசூலித்தது. 2.0 பண்டிகை இல்லாத வார நாளில் வெளியாகி அந்த சாதனையை முறியடித்துவிட்டது. 2.0 படம் இந்தியில் சுமார் ரூ. 25 கோடி வரை வசூல...
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை – சிவா

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை – சிவா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படம் விஸ்வாசம். அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வந்தது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இரண்டு அஜித் இருந்ததால் இந்த தகவல் பரவியது. ஆனால் விஸ்வாசம் படத்தில் ஒரு அஜித் தான் என்று இயக்குனர் சிவா கூறி இருக்கிறார். படத்தின் கதை பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் ‘தேனி மாவட்டத்தில் கொடுவிலார்பட்டி என்கிற கிராமத்தில் நடக்கும் கதை இது. வெளியே வீரமாகவும், உள்ளுக்குள்ளே வெள்ளந்தியாகவும் வாழும் மனிதர்களின் உணர்வுபூர்வமான சம்பவங்கள்தான் `விஸ்வாசம்’. படத்தில் அஜித்துக்கு ஒரே ஒரு வேடம்தான். முரட்டு மீசையோடு அலப்பறையான தடாலடி ஆசாமி ‘தூக்குதுரை’ அஜித். முதல்பாதியில் தேனி கிராமத்துத் திருவிழாக் கொண்டாட்டத்தில் அதிரடி செய்கிறார். இடைவேளைக்குப் பிறகு நகரத்தில் தூள் கிளப்...
வீடுகட்டி கொடுத்த பின் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவேன் – லாரன்ஸ்

வீடுகட்டி கொடுத்த பின் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவேன் – லாரன்ஸ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கஜா புயலால் வீடு இழந்தவர்களுக்கு 50 வீடுகள் கட்டி தருவதாக அறிவித்த லாரன்ஸ் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். ஆலங்குடி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட ராகவா லாரன்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வளமாக வாழ்ந்தவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டு நிவாரணம் கிடைக்குமா என்று சாலையில் நிற்பது வேதனை அளிக்கிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு வீடு கட்டிக்கொடுக்க திட்டமிட்டுள்ளேன். அதன் ஒரு பகுதியாக சமூகசேவகர் கணேசன் இல்லத்துக்குச் சென்று அவரைப் பார்த்தேன். அவரிடம் பணத்தை கொடுக்கவில்லை. ஆனால், வீடு கட்ட திட்டம் வரையப்பட்டு வருகிறது. இதைப்பார்த்து பலரும் முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும். நான் வாழ்வது ரசிகர்கள் கொடுத்த பணத்தில்தான், தற்போது அவர்கள் துன்பமான நிலையில் இருக்கிறார்கள். என்னிடம் இருப்பதில் ஒரு பகுதியை அவர்களுக்குக் கொ...
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கும் ரியோ

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கும் ரியோ

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிவகார்த்திகேயன் டிவியிலிருந்து வந்து சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகராக வளர்ந்து இருக்கிறார். 12 படங்களில் மட்டுமே இதுவரை நடித்துள்ள சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அதிக வசூல் புரியும் டாப் 5 முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்துவிட்டார். படத்தில் நடிப்பதுடன், எஸ்.கே.புரொடக்‌‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி கனா என்ற படத்தை தயாரித்துள்ளார். கனா படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் எஸ்.கே.புரொடக்‌‌ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கார்த்திக் வேணுகோபால் இயக்கும் இந்தப் படத்தின் மூலம் தொலைக்காட்சி புகழ் ரியோ நாயகனாக அறிமுகமாக உள்ளார். அவருக்கு ஜோடியாக சிரின் கஞ்சவாலா நடிக்கிறார். இவர்களுடன் ராதா ரவி, விக்னேஷ்காந்த் உள்ளிட்டோரும் பலரும் நடிக்க யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இப்படத்திற்...
திருப்பதியில் அட்டை பெட்டிகளில் பக்தர்களுக்கு லட்டு வினியோகம்

திருப்பதியில் அட்டை பெட்டிகளில் பக்தர்களுக்கு லட்டு வினியோகம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திருப்பதி ஏழுமலையான் கோவில் வளாகம் மற்றும் மலையில் கடந்த 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தேவஸ்தானம் தடைவிதித்தது. திருமலையில் உள்ள கடைகளில் கற்கண்டு, பேரீச்சம்பழம், கடவுள் படங்கள், பைகள் உள்ளிட்டவை பிளாஸ்டிக் கவர்கள் சுற்றி விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். உணவகங்களிலும் தேநீர், காபி, பால் அருந்துவதற்கு பிளாஸ்டிக்கினால் ஆன கப்புகள், கவர்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர். திருப்பதிக்கு வரும் பக்தர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். சுற்றுசூழல் மாசுபாட்டைத் தவிர்ப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், புற்றுநோயைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் லட்டுகளை போட்டுத்தரும் கவருக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை லட்டுகள் பிளாஸ்டிக் கவர்களில் வழங்கப்படும் என கூறினர். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா...
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க முயற்சிப்பேன் – பொன்.மாணிக்கவேல்

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க முயற்சிப்பேன் – பொன்.மாணிக்கவேல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஐஜி பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிவடைந்து அவர் இன்று பணி ஓய்வுபெறுகிறார். வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனு மீது இன்று நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்தது. சிபிஐக்கு வழக்குகளை மாற்றும் தமிழக அரசின் அரசாணை சட்டவிரோதம். இன்றுடன் ஓய்வுபெறும் பொன். மாணிக்கவேல் மேலும் ஒரு ஆண்டு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாநில போலீசும், சிபிஐயும் தேவையான உதவிகளை செய்ய வேண்டும். விசாரணை தொடர்பான அறிக்கையை வேறு எந்த ஒரு அதிகாரியிடமும் அவர் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர் நேரடியாகவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவரை சிறப்பு அதிகாரியாக ஓராண்டு நியமனம் செய...
பொன் மாணிக்கவேலுவின் பதவிக்காலத்தை ஒரு ஆண்டுக்கு நீடித்து  நீதிபதிகள் உத்தரவு

பொன் மாணிக்கவேலுவின் பதவிக்காலத்தை ஒரு ஆண்டுக்கு நீடித்து நீதிபதிகள் உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து வந்தது. அந்த விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில், தமிழகத்தில் தொடரப்பட்டுள்ள சிலைக் கடத்தல் வழக்குகளில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ விசாரிக்கும்படி தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. இதற்கிடையே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.  ஐஜி பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிவடைந்து அவர் இன்று பணி ஓய்வுபெறுகிறார். இந்நிலையில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனு  மீது இன்று  நீதிபதிகள் மகாதேவன், ஆதீகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்தது. ச...
முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் – சிகிச்சை தொகை ரூ.5 லட்சமாக உயர்வு

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் – சிகிச்சை தொகை ரூ.5 லட்சமாக உயர்வு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏழை எளிய குடும்பங்கள் ஆண்டு வருவாய் 72,000/- க்கு கீழ் உள்ள பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் தரமான அறுவைச்சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை பதிவுபெற்ற தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து வயதினரும் பயன்பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1016 சிகிச்சை முறைகளுக்கும், 113 தொடர் சிகிச்சை முறைகளுக்கும் மற்றும் 23 அறிதல் கண்டுப்பிடிப்பு முறைகளுக்கும் இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் அதிகபட்ச தொகை 2 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் இந்த அறிவிப்பு நாளை முதல் ...
நாகார்ஜூனா மகன் அகிலுடன்  ஜோடி சேர்ந்த இயக்குனர் மகள்..!

நாகார்ஜூனா மகன் அகிலுடன் ஜோடி சேர்ந்த இயக்குனர் மகள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா – அமலா தம்மபதியரின் மகன் அகில் நடித்து தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்று 50 கோடிக்கு மேல் வசூல்சாதனை செய்த “ ஹலோ “ படம் அதே பெயரில் தமிழிலும் வெளியாகிறது. தமிழிலும் நாகர்ஜூனாவே தயாரிக்கிறார். கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாதவன் நடித்த யாவரும் நலம், சூர்யா நடித்த 24 ஆகிய படங்களை இயக்கிய விக்ரம்.கே.குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். ரம்யாகிருஷ்ணா பாகுபலி படத்திற்கு பிறகு இந்த படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ஜெகபதிபாபு, அஜெய், சத்யகிருஷ்ணா, அனீஸ்குருவில்லா, வெண்ணிலா கிஷோர்  ஆகியோரும் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, இயக்கம்  -  விக்ரம்.K.குமார் . படத்தை உலகமுழுவதும் வெளியிடுகிறார் ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் A.N.பாலாஜி. ...