செவ்வாய்க்கிழமை, ஜூலை 7
Shadow

Author: Kodanki

காதலித்த நடிகர் சிவகுமாரை மணந்தார் சுஜா வருணி

காதலித்த நடிகர் சிவகுமாரை மணந்தார் சுஜா வருணி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  ப்ளஸ் டூ என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய சுஜா வருணி, மிளகா, இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆண் தேவதை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான சுஜா வருணியும், சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவகுமாரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், அவர்களது திருமணம் சென்னையில் இன்று நடந்தது முடிந்தது. திருமணத்தில் நடிகர் சிவக்குமார், அஸ்வின், எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் விஷ்ணு வர்தன், சினேகன், ஸ்ரீப்ரியா, வடிவுக்கரசி, லிசா, சுஹாசினி, ராதிகா சரத்குமார், விஜி சந்திரசேகர், கணேஷ் வெங்கட்ராம், சந்தியா உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் துர்கா ஸ்டாலின் பங்கேற்றனர். சிவகுமாரை திருமணம் செய்துகொள்ள தான் அதிர்ஷ்டம் செய்தவள் என்று நடிகை சுஜா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
அமலாபாலின் அதோ அந்த பறவை போல

அமலாபாலின் அதோ அந்த பறவை போல

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  அமலா பால் நடிக்கும் அட்வெஞ்சர் த்ரில்லர் படம், அதோ அந்த பறவை போல! செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம், அதோ அந்த பறவை போல. அட்வெஞ்சர் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் அமலா பால் கதைநாயகியாக நடித்துள்ளார். கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற உயிரை உறைய வைக்கும் அட்வென்ஞ்சர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது, ‘அதோ அந்த பறவை போல’. அமலாபால் கதைநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் என்னவென்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்...
கஜா புயல் பாதிப்பு… கால் கோடி ரூபாய்க்கு நிவாரணப் பொருள் அனுப்பும் விஜய் சேதுபதி!

கஜா புயல் பாதிப்பு… கால் கோடி ரூபாய்க்கு நிவாரணப் பொருள் அனுப்பும் விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  ‘கஜா’வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லட்ச ரூபாய் மதிப்பிலான உடனடி நிவாரணப் பொருட்கள் ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி அறிவிப்பு கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லட்ச ரூபாய் மதிப்பில், உடனடியாக தேவைப்படும் அத்தியாவசிய நிவாரண பொருட்களை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வழங்குகிறார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,”கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வசதி முழுமையாக திரும்பவதற்கு பத்து தினங்கள் ஆகும் என்பதால், அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் சார்ஜிங் டார்ச்லைட் ஆயிரக்கணக்கில் வழங்கப்படும். லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து நாசமாகிவிட்டதால், அதற்கு முன்னுரிமைக் கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் தோப்புகளை முழுவதுமாக புனரமைத்து தரப்படும். அவர்கள் தங்களின் பிள்ளைகள் போல் வளர்த்து வந்த தென்னை, பலா போன்ற மரங்களின் கன்றுகளை, மீண்டும் அவ்விடத்தில் புதிதாக நட்டு வைக்கப்படும். இதற...
(அ)நீதி சொன்ன நீதி… கண்ணை மூடிக் கொண்ட ஜி.வி.பிரகாஷ்!

(அ)நீதி சொன்ன நீதி… கண்ணை மூடிக் கொண்ட ஜி.வி.பிரகாஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      நீட் தேர்வால் பலியான அனிதாவின் மரணத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அவரின் துயரக்கதையை மையமாக வைத்து ‘அநீதி’ எனும் குறும்படம் உருவாகி இருக்கிறது. இதில் ’ராஜா ராணி’ பாண்டியன், பிரதீப் கே.விஜயன், லல்லு, கேப்ரிலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.சி.பால சாரங்கன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஸ்வா, ஹரி பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அநீதிக்கு தீர்வு மரணம் அல்ல என்பதை வலியுறுத்தும் படமாக அமைந்து இருக்கிறது இப்படம். ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் என்ற இளைஞர் இயக்கி இருக்கும் இப்படத்தின் திரையிடல் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், கதிர், சமூகப்போராளி திருமுருகன் காந்தி, இயக்குநர் இளன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்தைப்பார்த்த பின் பேசிய இயக்குநர் பாலாஜி சக்திவேல், "இன்றை...
போலீஸ் அதிகாரியான ஆண்ட்ரியா !

போலீஸ் அதிகாரியான ஆண்ட்ரியா !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
*போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஆண்ட்ரியா* பவானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்கும் புரொடக்ஷன் நம்பர் 2. இதில் ஆண்ட்ரியா, ஜேகே, அஷ்தோஷ் ராணா, கே எஸ் ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ராஜேஷ் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை தில் சத்யா இயக்குகிறார். இவர் கன்னடத்தில் ‘தில்’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கியவர். மேலும் பல படங்களை இயக்கிய இவர், ‘ராஜ் பகதூர்’ உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். கன்னடத்தில் 150 படங்களுக்கு மேல் நடன இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். ஆண்ட்ரியா இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆக்‌ஷன், திரில்லர், பேண்டஸி என வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்...
விக்னேஷ் சிவனுடன் பிறந்த நாள் கொண்டாடிய நயன்தாரா

விக்னேஷ் சிவனுடன் பிறந்த நாள் கொண்டாடிய நயன்தாரா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்த செய்தி. இருவரும் லிவிங் டுகெதர் பாணியில் தனிக்குடித்தனம் நடத்துவதாகவும் செய்தி பரவுகிறது. இருவரும் அதை மறுக்காத நிலையில் ஜோடியாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். நயன்தாரா தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். விக்னேஷ் சிவனுடன் நள்ளிரவு லேடி சூப்பர் ஸ்டார் நயன் என்று எழுதப்பட்டிருந்த கேக்கை வெட்டி பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார். மேலும் அலங்கரிக்கப்பட்ட ‘தங்கமே’ என்ற பெயர் பலகையும் இடம் பெற்றிருந்தது. நயன்தாராவின் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகிறார்கள். ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படக்குழுவினர் நயன்தாராவின் பர்ஸ்லுக் போஸ்டரையும் வெளியிட்டு வாழ்த்து கூறியிருக்கிறார்கள்...
படுகவர்ச்சியான படத்தை வெளியிட்ட ராதிகா ஆப்தே

படுகவர்ச்சியான படத்தை வெளியிட்ட ராதிகா ஆப்தே

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  ராதிகா ஆப்தே இந்தி சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கபாலியில் நடித்த அவருக்கு மீண்டும் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் ஆசை உள்ளது. இந்நிலையில் மேக்சிம் பத்திரிகைக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். மேக்சிம் பத்திரிகையின் அட்டைப் படத்தில் ராதிகா ஆப்தேவின் கவர்ச்சி புகைப்படம் வெளியாகி உள்ளது. லெதர் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். ராதிகா ஆப்தேவின் புகைப்படங்களை மேக்சிம் இந்தியா டுவிட்டரில் வெளியிட்டு வருகிறது. பாலிவுட் நடிகைகள் இது போன்று கவர்ச்சி போஸ் கொடுப்பது சாதாரணம். மேக்சிம் பத்திரிகை வெளியிட்டுள்ள புகைப்படங்களை ராதிகாவும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேக்சிம் போட்டோஷூட் வீடியோவையும் ராதிகா ஆப்தே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்....
தமிழக முதலமைச்சர் பழனிசாமி நவம்பர் 22ம் தேதி டெல்லி பயணம்

தமிழக முதலமைச்சர் பழனிசாமி நவம்பர் 22ம் தேதி டெல்லி பயணம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கஜா புயல் நேற்று முன்தினம் அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை மறுநாள் (20-ம் தேதி) பார்வையிட உள்ளேன் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 22ம் தேதி டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி, கஜா புயல் குறித்த சேத விவர அறிக்கையை மத்திய அரசிடம் அளித்து நிவாரண நிதி கோர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது...
வரவேற்பை பெற்ற பிரசாந்தின் ஜானி டிரைலர்

வரவேற்பை பெற்ற பிரசாந்தின் ஜானி டிரைலர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
90-களில் முக்கியமான கதாநாயகனாக வலம் வந்தவர் பிரசாந்த். சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். இந்நிலையில் நீண்ட இடை வெளிக்குப் பிறகு பிரசாந்த் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ஜானி. இயக்குனர் ஜீவா சங்கரின் உதவியாளர் வெற்றிச்செல்வன் இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரசாந்துடன் இணைந்து சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் தியாகராஜன் தயாரித்துள்ளார். ஜானி படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் பெற்றுள்ள நிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை பிரசாந்த் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது வரை படத்தின் டிரைலரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். கள்ள நோட்டை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக ஜானி உருவாகி இருப்பதை டிரெய்லரை பார்க்கும்போது அறிய...
மீடூ புகாரில் பிரபலமான சின்மயிக்கு செக் வைத்த ராதாரவி..!

மீடூ புகாரில் பிரபலமான சின்மயிக்கு செக் வைத்த ராதாரவி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
தமிழ் திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடி வருபவர் பாடகி சின்மயி. இவர் பல படங்களுக்கு பின்னணி வசனங்களையும் பேசியுள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் நடிகை திரிஷாவுக்கு பின்னணி வசனம் பேசினார். இவர் மீடூ விவகாரத்தில் கடந்த அக்டோபரில், கவிஞர் வைரமுத்து தனக்கும், சில பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். இந்த நிலையில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான நடிகர் ராதாரவிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்த 2 பெண்களுக்கு பாடகி சின்மயி ஆதரவாக பேசினார். இதனால் தனது டப்பிங் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கி உள்ளனர் என தெரிவித்து உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக...