புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

விரைவில் ‘விஸ்வரூபம்-2’ டிரைலர்

விரைவில் ‘விஸ்வரூபம்-2’ டிரைலர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வரூபம்’. இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு சம்தத் சைனுதீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமல்ஹாசனே இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை மிக விரைவில் கமல்ஹாசன் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கமலின் உதவியாளரும், ‘தூங்காவனம்’ படத்தின் இயக்குனருமான ராஜேஷ் எம்.செல்வா, ‘விஸ்வரூபம்-2’ டிரைலர் ரெடி என்றும் இந்த டிரைலர் மிக விரைவில் வெளியாகும்’ என்றும் அறிவித்துள்ளார்! இது கமலின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ...
ஆர்.கே.நகர் தொகுதியில் கட்சி பெயரை அறிவிப்பேன்: டி.டி.வி.தினகரன்

ஆர்.கே.நகர் தொகுதியில் கட்சி பெயரை அறிவிப்பேன்: டி.டி.வி.தினகரன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வான டி.டி. வி.தினகரன் இன்று தனது தொகுதியில் கொருக்குப்பேட்டை கண்ணகி நகரில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நலிவுற்ற பிரிவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- ஆர்.கே.நகரில் எனது வெற்றியின் மூலம் 3-வது அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்கள். அண்ணா தி.மு.க.வை தொடங்கிய போது ராயபுரம் ராபின்சன் பூங்காவில்தான் தனது அத்தியாயத்தை தொடங்கினார். என் மீது நம்பிக்கை வைத்து 3-வது அத்தியாயத்தை ஆர். கே.நகர் மக்கள் தொடங்கி இருக்கிறார்கள். நான் புதிதாக தொடங்க இருக்கும் கட்சிக்கு 3 பெயர்களை பரிசீலிக்க தேர்தல் கமி‌ஷனில் கொடுத்து இருக்கிறோம். இன்று இதில் தேர்தல் கமி‌ஷன் முடிவு எடுப்பதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் கட்சி பெயர் பற்றி தேர்தல் கமி‌ஷன் முடிவு எடுக்கும். கட்சியின் ப...
மதுரையில் 2 ரவுடிகள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

மதுரையில் 2 ரவுடிகள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

HOME SLIDER, NEWS, செய்திகள்
மதுரையில் ரவுடிகள் அட்டகாசத்தை ஒழிக்க மாநர போலீசார் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இன்று சிக்கந்தர் சாவடி பகுதியில் உள்ள ரவுடிகளை பிடிக்க மாநகர போலீசார் சென்றனர். அப்போது போலீசார் - ரவுடிகள் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து போலீசார் என்கவுண்டர் நடத்தினர். இதில், மந்திரி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு ரவுடி தப்பி ஓடிவிட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. என்கவுண்டரில் பலியானவர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த திடீர் என்கவுண்டர் நடவடிக்கை அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்  ...
புதிய படங்களை வெளியிடுவது இன்று முதல் நிறுத்தம் பட அதிபர்கள் சங்கம்

புதிய படங்களை வெளியிடுவது இன்று முதல் நிறுத்தம் பட அதிபர்கள் சங்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் கியூப், யூஎப்ஒ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் மூலம் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இதற்காக அந்த அமைப்புகள் தயாரிப்பாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்கின்றன. புதிய படங்களை திரையிடுவதற்கு டிஜிட்டல் சேவை அமைப்புகள் ரூ.22 ஆயிரத்தில் இருந்து ரூ.34 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினர். இதுபோல் மலையாளம், தெலுங்கு, கன்னட  திரைப்பட தயாரிப்பாளர்களும் டிஜிட்டல் சேவை கட்டணத்தை குறைக்க வற்புறுத்தினர். இன்று முதல் நிறுத்தம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) முதல் புதிய படங்களை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் வெளியிட மாட்டோம் என்றும் அறிவித்தனர். இந்த போராட்டத்...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரஜினிகாந்த் படத்திற்கு அனிருத் இசை

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரஜினிகாந்த் படத்திற்கு அனிருத் இசை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். தற்போது விஜய் நடிப்பில் அவரது 62-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்நிலையில் தனது அடுத்த பட அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரிக்கிறார். பீட்சா, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்று சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....
வெளிநாட்டிற்கு ஓட்டம் பிடிப்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம்

வெளிநாட்டிற்கு ஓட்டம் பிடிப்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பொதுத்துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி மோசடி செய்து இங்கிலாந்துக்கு தப்பியோடிய விஜய் மல்லையா நாடு திரும்ப மறுத்துவிட்டார்.  அவரை இந்தியாவிற்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டுக்குத் தப்பியோடிய பொருளாதார மோசடி குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டுவரவேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பொருளாதார மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஒடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பாக சட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து ரூ.12,723 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி மற்றும் அவரது தொழில் கூட்டாளியும், உறவினருமான மெகுல் சோக்ஷி ஆகியோர் வெளிநாடு தப்பி சென்று விட்டனர். இதுபோன்று டெல்லியை சேர்ந்த தொழி...
மிக மிக அவசரமாக ஸ்ரீபிரியங்கா படத்தை வாங்கிய வெற்றிமாறன்

மிக மிக அவசரமாக ஸ்ரீபிரியங்கா படத்தை வாங்கிய வெற்றிமாறன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
‘அமைதிப்படை 2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இயக்குனராக அவதாரமெடுத்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. கதாநாயகியை பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், ‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை,’ ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்த ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதையை ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்பைக் காணோம்’ ஆகிய படங்களின் இயக்குனர் ஜெகன்நாத் எழுதியுள்ளார். புகைப்படம், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள அரீஷ் குமார் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார். அவரோடு வழக்கு எண் முத்துராமன், லிங்கா, ஆண்டவன்கட்டளை அரவிந்த், ஈ. ராமதாஸ், சரவண சக்தி, வெற்றிக்குமரன், குணா, வி.கே.சுந்தர், மாஸ்டர் சாமுண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.  மேலும் இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் ...
காலா டீசர் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்..!

காலா டீசர் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ திரைப்படத்தின் டீசர் இன்னும் சில நிமிடங்களில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நேரத்தில் திடீரென ஒரு செய்தி அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. காலா’ படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் சற்றுமுன் தனது டுவிட்டரில் ஒரு தகவலை பதிவு செய்துள்ளார். இதன்படி காஞ்சி பெரியவர் அவர்கள் இன்று காலை காலமானதை அடுத்து நாளை வெளியாகவிருந்த ‘காலா’ படத்தின் டீசர், மார்ச் 2ஆம் தேதி வெளியாகும் என்றும் இதனால் ரசிகர்களுக்கு ஏற்படும் ஏமாற்றத்திற்கு தான் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.தனுஷின் இந்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும் தலைவர் ரஜினிக்காக இன்னும் ஒருநாள் காத்திருப்பதில் தங்களுக்கு த்ரில்தான் என்றும் அவர்கள் டுவிட்...
ஸ்ரீதேவி உடலுக்கு மகாராஷ்டிர மாநில அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

ஸ்ரீதேவி உடலுக்கு மகாராஷ்டிர மாநில அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இந்திய திரையுலகின் கனவுக்கன்னி என்று வர்ணிக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவி, உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள துபாய் சென்றபோது கடந்த 24-ந் தேதி மரணம் அடைந்தார். ஓட்டலில் தங்கி இருந்த அவர் குளியலறைக்கு சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. உடற்கூறு ஆய்வுக்கு பிறகு, ஸ்ரீதேவி மாரடைப்பால் இறக்கவில்லை.  அவர் மது போதையில், குளியல் தொட்டியில் விழுந்து, மூச்சு விடமுடியாமல் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஸ்ரீதேவி உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக விசாரணையை துபாய் காவல்துறை மேற்கொண்டது. ஸ்ரீதேவியின் மரணத்தில் குற்ற நோக்கம் எதுவும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து இந்த வழக்கை துபாய் போலீஸ் முடித்து வைத்தது. இதன்பிறகு, உரிய நடைமுறைகளுக்கு பிறகு ஸ்ரீதேவியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்...
ஒரு ரூபாய் கேட்டு பா.ஜ., எம்.பி. மீது மானநஷ்ட வழக்கு -நடிகர் பிரகாஷ்ராஜ்

ஒரு ரூபாய் கேட்டு பா.ஜ., எம்.பி. மீது மானநஷ்ட வழக்கு -நடிகர் பிரகாஷ்ராஜ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
மைசூரு பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா. இவர் கடந்த ஆண்டு, பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் குறித்து டுவிட்டரில் ஒரு அவதூறான கருத்தை பதிவிட்டார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ், உடனடியாக அதுபற்றி விளக்கம் கேட்டு பிரதாப் சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அந்த நோட்டீசுக்கு பிரதாப் சிம்ஹா இதுவரையில் எந்தவித பதிலும் அனுப்பவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து நேற்று மைசூரு கோர்ட்டில் நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதாப் சிம்ஹா எம்.பி. மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தன்னைப்பற்றி அவதூறான கருத்தை பதிவிட்ட பிரதாப் சிம்ஹா உடனடியாக அதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும், மேலும் தனக்கு நஷ்ட ஈடாக ஒரு ரூபாய் மட்டும் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது....