புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

ஆர்யாவை திருமணம் செய்ய கனடாவிலிருந்து வந்த இலங்கை பெண் கொடுத்த ஷாக்..!

ஆர்யாவை திருமணம் செய்ய கனடாவிலிருந்து வந்த இலங்கை பெண் கொடுத்த ஷாக்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஆர்யா விரைவில் திருமணம் செய்யவுள்ளார். இதற்காக நவீன சுயம்வர நிகழ்ச்சியாக எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் எல்லா தரப்பு பின்னணியிலுமிருந்து 16 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் கனடாவிலிருந்து சூசனா என்ற ஒரு இலங்கை பெண் வந்துள்ளார். இவர் கதிர்வீச்சு சிகிச்சை நிபுணராக உள்ளாராம். இவர் ஆர்யாவிடம் பேசுகையில், உங்களிடம் ஒரு விஷயம் சொல்லனும். அதாவது நான் விவாகரத்தானவர், எனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்ற தகவலை கூறியுள்ளார். இதைக்கேட்ட ஆர்யா கொஞ்சம் ஷாக்காகியுள்ளார். இனி எந்த மாதிரியான முடிவு எடுப்பார் என அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்....
ஏன் தமிழ் படங்களில் நடிக்க இவ்வளவு நாள் ஆனது – விளக்கம் கொடுத்த சாய்பல்லவி

ஏன் தமிழ் படங்களில் நடிக்க இவ்வளவு நாள் ஆனது – விளக்கம் கொடுத்த சாய்பல்லவி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
பிரேமம் படத்தின் மூலம் மிக பிரபலமானவர் நடிகை சாய்பல்லவி. மலர் என்ற ஒரு சின்ன டீச்சர் கதாபாத்திரத்தில் மூலம் அனைவரையும் கவந்தவர். இவர் அடிப்படையில் ஒரு தமிழ்நாட்டு பெண், ஆனால் பல தமிழ் படங்களில் நடிக்க தவிர்த்து மற்ற மொழிகளில் நடித்து வந்தார். அதன் பிறகு ஏ. எல் விஜய் சொன்ன கரு படத்தில் மட்டும் நடிக்க சம்மதித்தார். இந்நிலையில் இன்று கரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது, சாய்பல்லவி பேசுகையில் " உண்மையில் தமிழ் நல்ல கதைக்காக காத்திருந்தேன், இயக்குனர் விஜய் சொன்ன கரு கதை எனக்கு மிகவும் பிடித்தது, அதனால் நடித்தேன் என்று ஆங்கிலத்திலே கூறினார்....
ரஜினி படம் கார்த்திக் சுப்புராஜுக்கு தனுஷ்  விட்டுக்கொடுத்தார்..!

ரஜினி படம் கார்த்திக் சுப்புராஜுக்கு தனுஷ் விட்டுக்கொடுத்தார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷ் தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, மாரி-2 ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இதற்கு அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால், கார்த்திக் சுப்புராஜ் அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளதால், கார்த்திக் சுப்புராஜுக்கு இது நல்ல வாய்ப்பு என தனுஷ் விட்டுக்கொடுத்தார் என கூறப்படுகின்றது. அது மட்டுமின்றி கார்த்திக் சுப்புராஜ் தனுஷிற்கு சொன்ன கதையில் ஒரு காட்ஃபாதர் போல் ஒரு கதாபாத்திரம் உள்ளது, ஒருவேளை அந்த கதாபாத்திரத்தின் விரிவான பகுதி தான் ரஜினி படமா? என்று கேள்வி எழுந்துள்ளது....
 Karu movie ready to release on March 9

 Karu movie ready to release on March 9

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
Karu movie audio launch function happen today. Actress Sai Pallavai,  Director A. L. Vijay, Naga Shourya participating. In Audio function, Sai Pallavai appearing her normal and simple gorgeous look. Sai Pallavi attended as traditional look also.  Karu movie ready to release on March 9. karu trailer  already released, Karu reached so many people's, and a got good response from the audience. Sai Pallavi acted different style compared with her previous movies. For the first time, Sai Pallavi acted as Thriller based movie. In audio function, Sai Pallavai, A.L Vijay, and other Karu movie casting participated in the function. Earlier in his interviews, while promoting Chalo movie, Shourya opened up some things about "Kanam" movie where he criticising Sai Pallavi's craze and unneces...
நம்ப மறுத்த விவேக் ஓபராய் – சாதித்து காட்டிய ஆர்கே

நம்ப மறுத்த விவேக் ஓபராய் – சாதித்து காட்டிய ஆர்கே

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் ஆர்கே, வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறார் ஆர்கே. இந்த நிகழ்ச்சி, இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் நிறுவன தூதராக இணைந்துள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கலந்துகொண்டு இந்த புதிய ஷாம்பூவை அறிமுகப்படுத்தினார். இவர்களுடன் பாலிவுட் நடிகரும் விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் விளம்பர மாடலும் சமீபகாலமாக ஐபிஎல் மேன் என அழைக்கப்படுபவருமான சமீர் கோச்சரும் கலந்துகொண்டார். பாலிவுட் நடிகர் சமீர் கோச்சர் பேசியதாவது, “ஆர்கே என்னை சந்தித்து இந்த தயாரிப்பு பற்றி விளக்கியபோது ஆச்சர்யமாக இருந்தது. நம்புவதற்கு கொ...
ஜெயலலிதா உருவச்சிலை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் திறப்பு

ஜெயலலிதா உருவச்சிலை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் திறப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழாவை இன்று தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கி ஜெயலலிதா படத்திற்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செய்தனர். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் ஜெயலலிதா முழு உருவ சிலை அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி ஜெயலலிதாவின் சிலை ஆந்திராவில் தயாரிக்கப்பட்டது. அந்த சிலை முழு உருவ வெண்கல சிலையாகும். ஜெயலலிதா இரட்டை விரலை உயர்த்தி காண்பிப்பது போன்று 7 அடி உயரத்தில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அந்த சிலை சென்னை கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே ஜெயலலிதா சிலையை நிறுவ முடிவு செய்யப்பட...
தமிழ் பாரம்பரியத்திற்கும் தமிழுக்கும்  தலைவணங்குகிறேன் – பிரதமர் மோடி

தமிழ் பாரம்பரியத்திற்கும் தமிழுக்கும் தலைவணங்குகிறேன் – பிரதமர் மோடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளான இன்று, தமிழ்நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்கள் இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் ’அம்மா ஸ்கூட்டர் திட்டம்’ அறிமுக விழாவில் பிரதமர் மோடி பயனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை வழங்கினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:- தமிழுக்கும், தமிழ் பாரம்பரியத்திற்கும் நான் தலைவணங்குகிறேன். அன்புமிக்க சகோதர சகோதரிகளே வணக்கம். மகாகவி பாரதியாரின் மண்ணில் நிற்பதற்கு பெருமைபடுகிறேன். ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதாவின் கனவு திட்டமான மானிய ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்துக்கு காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டதைவிட இப்போது கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஏராளமான நிதி வழங்கப்பட்டுள்ளது. மகளிருக்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செ...
பிரதமர் மோடி தொடங்கி வைத்த அம்மா ஸ்கூட்டர் திட்டம்..!

பிரதமர் மோடி தொடங்கி வைத்த அம்மா ஸ்கூட்டர் திட்டம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சென்னை மற்றும் புதுவையில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இன்று மாலை விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மைத்ரேயன் எம்.பி. உள்ளிட்டோர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட மோடி, மெரினா கடற்கரையில் உள்ள ஐ.என்.எஸ். விமானப்படை தளத்தில் வந்து இறங்கினார். அங்கு அவரை தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வரவேற்றார். பிரதமரின் வருகையையொட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் கலைவாணர் அரங்கதுக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்க கலைவாணர் அரங்க வளாகத்தி...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  ரஜினி..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினி நடிப்பில் தற்போது ‘காலா’ படம் உருவாகியுள்ளது. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தவிர ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘2.O’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படமும் விரைவில் வெளியாக உள்ளது இப்படங்களில் நடித்த முடித்த பிறகு ரஜினி, தனது ரசிகர்களை சந்தித்து அரசியலில் களமிறங்க இருப்பதாக அறிவித்தார். தற்போது கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரஜினியின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஜினியின் அடுத்த படத்தை ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருக்கிறார்...
எனக்கும் கமலுக்கும் பாதைகள் வேறு, நோக்கம் ஒன்று- ரஜினி

எனக்கும் கமலுக்கும் பாதைகள் வேறு, நோக்கம் ஒன்று- ரஜினி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
அரசியல் கட்சி தொடங்குவதற்கான கட்டமைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவ்வகையில், இன்று நெல்லை மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, நிர்வாகிகளை சந்தித்து பேசினார். ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அனைத்துக்கட்சி கூட்டம்  குறித்து கேட்டபோது, காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது வரவேற்கத்தக்கது என்றார் ரஜினி. கமலின் அரசியல் பயணம் குறித்து கேட்டபோது, ‘நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் எங்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வதே. கமலின் அரசியல் பொதுக்கூட்டம் நன்றாக இருந்தது. முழுவதும் பார்த்தேன்’ என்றார். கமல் கட்சி பொதுக்கூட்டத்தை நடத்தியது போன்று எப்போது பொதுக்கூட்டம் நடத்தி கட்சியை அறிவிப்பீர்கள்? என்று நிருபர்கள்...