சனிக்கிழமை, மே 30
Shadow

நம்ப மறுத்த விவேக் ஓபராய் – சாதித்து காட்டிய ஆர்கே

தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் ஆர்கே, வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறார் ஆர்கே.
இந்த நிகழ்ச்சி, இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் நிறுவன தூதராக இணைந்துள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கலந்துகொண்டு இந்த புதிய ஷாம்பூவை அறிமுகப்படுத்தினார்.
இவர்களுடன் பாலிவுட் நடிகரும் விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் விளம்பர மாடலும் சமீபகாலமாக ஐபிஎல் மேன் என அழைக்கப்படுபவருமான சமீர் கோச்சரும் கலந்துகொண்டார்.
பாலிவுட் நடிகர் சமீர் கோச்சர் பேசியதாவது, “ஆர்கே என்னை சந்தித்து இந்த தயாரிப்பு பற்றி விளக்கியபோது ஆச்சர்யமாக இருந்தது. நம்புவதற்கு கொஞ்சம் சிரமமாகவும் இருந்தது. ஆனால் இதை நானே அனுபவப்பூர்வமாக பயன்படுத்தியபோது அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை. நிச்சயம் ஆர்கேவின் இந்த தயாரிப்பு உலக அளவில் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை” என கூறினார்.
நடிகர் விவேக் ஓபராய் பேசும்போது, “இன்று உலகம் முழுதும் காலை உணவாக ரசித்து சாப்பிடும் இட்லி சாம்பாராகட்டும், இன்று உலகம் முழுதும் அறியப்படும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகட்டும், தென்னிந்தியா எப்போதுமே மிகச்சிறந்த தயாரிப்புகளைத் தந்துள்ளது. ஏன் என்னுடைய அம்மா, மனைவி எல்லோருமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான். ஆர்கே என்னிடம் வந்து இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை பற்றி சொன்னதும் ஆரம்பத்தில் நான் நம்ப மறுத்தேன். நான் நம்பும் விதமாக எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்து, அது சாத்தியம் தான் என நிரூபித்து காட்டினார் ஆர்கே.
இந்த நிகழ்வில் வி கேர் நிறுவனத்தின் சேர்மனும் நடிகருமான ஆர்கே பேசியதாவது,
இந்த ஷாம்பூ பற்றி சொன்னதும் அவரும் மற்றவர்களை போல ஆரம்பத்தில் நம்பவில்லை.. ஒருமுறைக்கு இருமுறையாக அவரிடம் தொடர்ந்து மணிக்கணக்கில் விவாதித்தேன்..
இதன் நம்பகத்தன்மையை அவர் உணர்ந்தபின்னர், இதை உலகெங்கிலும் கொண்டு செல்லும் தூதராக மட்டுமல்ல, இதோ இந்த நிறுவனத்தின் பங்குதாரராக தன்னை இணைத்துக்கொள்கிறேன் என இப்போது சொன்னாரே, அந்த அளவுக்கு இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ அவரை ரொம்பவே ஈர்த்துவிட்டது.
இதற்காக ஒரு வருடம் படத்தில் கூட நடிக்கவில்லை. இனி இதை மக்களிடம் சேர்த்துவிட்டு மிகப்பெரிய  பட்ஜெட்… மிகப் பிரம்மாண்டமான படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன். அந்த படம் பலரின் கண்களை திறக்கும் படமாக இருக்கும்.. அதன் அறிவிப்பு ஓரிரு மாதங்களில் வரும் என்றார் ஆர்கே.
315 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன