புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

கன்னியாகுமரி  மீனவ மக்களுக்கு உதவிய தளபதி  விஜய் ரசிகர்கள்

கன்னியாகுமரி  மீனவ மக்களுக்கு உதவிய தளபதி  விஜய் ரசிகர்கள்

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி  மீனவ மக்களுக்கு உதவிய தளபதி  விஜய் ரசிகர்கள் ! தென்னிந்திய சினிமாவில் முன்னிலை நடிகரான தளபதி விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். தளபதி விஜய் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். தற்ப்போது கன்னியாகுமரி விஜய் ரசிகர்கள் (ACTOR VIJAY  ONLINE WELFARE CLUB ) என்ற நற்பணி இயக்கத்தின் கீழ் புயல் ,வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட குமரி மீனவ மக்கள் குடும்பத்தினர்களுக்கு ஒரு மாதத்திர்ற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளனர்....

கெத்தான விவசாயியாக வலம் வரும் `கடைக்குட்டி சிங்கம்’ கார்த்தி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `கடைக்குட்டி சிங்கம்'. முதல் முறையாக சூர்யா தயாரிப்பில் அவரது தம்பி கார்த்தி நடிக்கும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். நாயகியாக சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் அர்த்தனா நடிக்கின்றனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், கார்த்தியின் அக்காக்களாக மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி என்று 5 பேர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தில் கார்த்தி மாதம் 1½ லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் கெத்தான விவாசாயி வேடத்தில் நடித்துள்ளார். எப்படி பொறியாளர், டாக்டர் என்று எல்லோரும் தங்கள் பெயருக்கு பின் தாங்கள் செய்யும் வேலையை போட்டு பெருமையாக சொல்லிக் கொள்கிறார்களோ அதே போல் கார்த்தி, தான் ஒரு விவசாயி என்பதை பைக் நம்பர் ப்ளேட் முதல் பல இட...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் கடந்த 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் வழங்கிய 192 டி.எம்.சி. தண்ணீருக்கு பதிலாக 177.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீரின் அளவு 14.75 டி.எம்.சி. குறைந்துள்ளது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரகாலத்திற்குள் அமைக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு கர்நாடகா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக முடிவெடுப்பதற்காக தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். சுமார்...
திருச்சியில் அடுத்த பொதுக்கூட்டம்  கமல்ஹாசன் அறிவிப்பு

திருச்சியில் அடுத்த பொதுக்கூட்டம் கமல்ஹாசன் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ராமேஸ்வரத்தில் நேற்று அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ என கட்சியின் பெயரையும், ஆறு கைகள் இணைந்த சின்னத்தை கொண்ட கொடியையும் அறிமுகப்படுத்தினார். இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இடது பக்கமா? வலது பக்கமா? என கேட்காதீர்கள். நடுவில் பயணிக்க விரும்புகிறேன் என தனது நிலைப்பாட்டை தெரிவித்தார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பொதுக்கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி நடக்கும் என தெரிவித்தார். இதற்கிடையே, தனது கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது, நிர்வாகிகளை தேர்வு செய்வது போன்ற பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...
காவிரி விவகாரத்தில் அரசின் முயற்சிகளுக்கு தி.மு.க. துணை நிற்கும் – ஸ்டாலின் பேச்சு

காவிரி விவகாரத்தில் அரசின் முயற்சிகளுக்கு தி.மு.க. துணை நிற்கும் – ஸ்டாலின் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
காவிரி மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் காவிரி நீரை பெறுவதற்காக தமிழக அரசு மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் முதல்வர் விளக்கம் அளித்தார். இதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் தி.மு.க. துணை நிற்கும் என்றார். ‘மேலும், உச்ச நீதிமன்றத்தால் குறைக்கப்பட்ட நீரை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்ட...
காவிரி விவகாரத்தில் அடுத்த நடவடிக்கை என்ன? தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது

காவிரி விவகாரத்தில் அடுத்த நடவடிக்கை என்ன? தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த 16-ந் தேதி தீர்ப்பளித்தது. அதில், தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய நீரின் அளவு குறைக்கப்பட்டது.  இது தமிழக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளும் அதிருப்தி தெரிவித்தன. இந்த தீர்ப்பு குறித்து உடனடியாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது. தீர்ப்பில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் காவிரி பிரச்சனையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், தமிழக காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை பேணிக்காக்கவும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மீது எடுக்கப்பட வேண்டிய மேல்நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கு ஏதுவாக பிப்ரவரி 22-ந் தேதி காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது என்ற...
நல்ல தலைமை, ஊழல் இல்லா ஆட்சி, தரமான கல்வி, தடங்கல் இல்லா மின்சாரம்  கமல் கட்சி கொள்கைகள்..!

நல்ல தலைமை, ஊழல் இல்லா ஆட்சி, தரமான கல்வி, தடங்கல் இல்லா மின்சாரம் கமல் கட்சி கொள்கைகள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
மதுரையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற புதிய கட்சியை கமல் இன்று தொடங்கினார். கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார். பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் கமல் பேசியதாவது:- எல்லா நல்ல முதல்வர்களுக்கும் இருக்கும் கொள்கைகள்தான் மக்கள் நீதி மய்யத்திற்கும் இருக்கிறது. தரமான கல்வி, எல்லா தரப்பினருக்கும் போய் சேர வேண்டும். நல்ல தலைமை, தரமான கல்வி, தடங்கல் இல்லா மின்சாரம் கிடைக்க வேண்டும். சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் சொல்லிச் சொல்லி விளையாடும் விளையாட்டு நிறுத்தப்பட வேண்டும். எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக நின்று காட்டுவோம். ஊழலை குறைப்பதில் நமக்கும் பங்கு உள்ளது. இதுநாள் வரை வேடிக்கை பார்த்தோம். இனி அதை செய்யக்கூடாது. உங்கள் வாக்கின் மதிப்பு தெரியாமல் விற்று விட்டீர்கள். உங்களின் எல்லா பற்றாக்குறையும் பேராசையால்...
டெல்லி மக்களைப் போல் தமிழக மக்களும் வரலாற்றை மாற்றி அமைப்பார்கள்- கமல் கட்சி கூட்டத்தில் கெஜ்ரிவால் பேச்சு

டெல்லி மக்களைப் போல் தமிழக மக்களும் வரலாற்றை மாற்றி அமைப்பார்கள்- கமல் கட்சி கூட்டத்தில் கெஜ்ரிவால் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மதுரையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை கமல் இன்று தொடங்கினார். கட்சி கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். இந்த பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:- இதுவரை நான் கமலின் ரசிகனாக இருந்தேன். இப்போது அவர் நிஜ வாழ்க்கையின் நாயகன். நிஜ வாழ்க்கையிலும் அவரது ரசிகனாக ஆனேன். கமல் நேர்மையானவர் மட்டுமல்ல, துணிச்சலானவரும் ஆவார். கடந்த சில மாதங்களாக கமல் காட்டிய துணிச்சலைப் பார்த்து வியந்தேன். ஊழல் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் இடையே தமிழக மக்கள் சிக்கி கிடந்தனர்.  இப்போது ஊழலுக்கு எதிராக அனைவரும் இங்கே ஒன்றிணைந்ததை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் தற்போது நேர்மையான கட்சி உருவாகி உள்ளது. மக்கள் நேர்மையான கட்சிக்கு வாக்களிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. டெல்லி மக்களைப் போல தமிழக மக்களும் வரலாற்றை மாற்றி அமைப்பா...
தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி

தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது “தண்ணீர்” தான். கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகத்தோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. ஏரி குளங்கள் மாயமாவதும்,  நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருப்பதும் மக்களின் முன்னிற்கும் சவால்களாய் மாறிக் கொண்டிருக்கிறது. இப்படி மக்களின் அடிப்படைத் தேவையாய், அத்தியாவசியமாய் விளங்கக் கூடிய தண்ணீரினை மையமாய் வைத்து உருவாகியிருக்கும் படம் தான் “கேணி”. “காற்று, வானம், நிலம் போல இந்த பூமியில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது தண்ணீர். அந்தத் தண்ணீரை உரிமை கொண்டாட எந்த ஒரு தனி மனிதனுக்கும் உரிமையில்லை” என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்கும் “கேணி” திரைப்படம் வருகிற பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் கூறும் கருத்தின் முக்கியத்துவம் கருதி நடிகை ஜெயப்பிரதா நீ...
மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இலவச திட்டங்கள் இருக்காது- கமல்

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இலவச திட்டங்கள் இருக்காது- கமல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
மதுரை பொதுக்கூட்டத்தில் கட்சி அறிவிப்பை வெளியிட்டு பேசிய கமல்ஹாசன்,  பொதுமக்களின் கேள்விகளுக்கு மேடையிலேயே பதில் அளித்தார். அது வருமாறு:- கேள்வி: அரசியலில் எத்தனை நாட்கள் நீங்கள் தாக்குப் பிடிப்பீர்கள்? பதில்: என் மூச்சு உள்ள வரை தாக்குப்பிடிப்பேன். கேள்வி: உங்களுக்கு ஒரு கஷ்டம் வந்ததால்தான் விஸ்வரூபம் எடுத்தீர்களா? பதில்: மக்களின் நிலையைக் கண்டு இனிமேல்தான் விஸ்வரூபம் எடுக்கவேண்டும். இவர்களுடன் சேர்ந்து(மக்கள்) விஸ்வரூபம் எடுப்பேன். கேள்வி: அரசியலில் உங்கள் வழிகாட்டி யார்? காந்தியா, பெரியாரா, அம்பேத்கரா, காமராஜரா? பதில்: அனைத்து கடவுள்களையும் பிடிக்கும் என்று நாம் சொல்வதை ஏற்றுக்கொள்கிறோம். அதேபோல் எனக்கும் அனைத்து தலைவர்களையும் பிடிக்கும். கேள்வி: ஊழலை ஒழிப்போம் என்கிறீர்கள்? எப்படி ஒழிப்பீர்கள்? பதில்: நான் எப்படி ஒழிப்பேன்? இது நல்ல கதையாக இருக்கிறதே? எல்லாரும் ...