வியாழக்கிழமை, ஜூலை 2
Shadow

Author: Kodanki

கேரளாவில் தென்மேற்கு பருவமழை 29-ந்தேதி தொடங்குகிறது

கேரளாவில் தென்மேற்கு பருவமழை 29-ந்தேதி தொடங்குகிறது

HOME SLIDER, NEWS, செய்திகள்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி, வருகிற 29-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதை வானிலை ஆய்வு மையம் கண்டறிந்தது. இத்தகவலை இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர். அந்தமான் கடல் பகுதியிலும் தென்கிழக்கு வங்கக்கடலிலும் மழைக்கான அறிகுறிகள் உருவாக தொடங்கி உள்ளது. 23-ந் தேதிக்கு பிறகு இது தெளிவாக தெரிய வரும். அதன் பிறகு 29-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். வானிலை மைய கணிப்புப்படி இது 4 நாட்கள் முன்னதாக அல்லது 4 நாட்களுக்கு பிறகு பெய்யத் தொடங்கும். இந்த அறிகுறிகள் மூலம் கேரளாவில் 3 நாட்கள் முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய ...
 ஹாரர் திரில்லர் படமாக “கண்மணி பாப்பா”

 ஹாரர் திரில்லர் படமாக “கண்மணி பாப்பா”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
வனஷாக்‌ஷி கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேந்திர பிரசாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர்ஸ்ரீமணி இயக்கியுள்ள திரைப்படம் “கண்மணி பாப்பா” நேரெதிர் எண்ணம் கொண்ட கணவன் - மனைவி மற்றும் அவர்களது செல்ல மகள் இவர்களைச்சுற்றி நடக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பு தான் “கண்மணி பாப்பா” திரைப்படம். கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு, எதிர்பார்த்ததைப் போல் எந்தமுன்னேற்றமும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் கையிருப்பும் கரைந்து போவதால், எதிர்மறைஎண்ணம் தலைதூக்கத் துவண்டு போகிறார். அவரது மனைவி தான் அவருக்கு ஆறுதலாக இருந்துநம்பிக்கை தந்து வருகிறார். ஒருகட்டத்தில் அவருக்கு வர வேண்டிய தொகை முழுதும் கிடைத்துவிட, தனது நீண்ட நாள் கனவான சொந்த வீட்டை வாங்க நினைக்கிறார். அதற்காக அழகான ஒருவீட்டையும் தேர்வு செய்கிறார். எதிர்பாராத விதமாக அந்த நொடியிலிருந்து அவரதுகுழந்தையைச் சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நட...
78 வயது ரசிகையை கவுரவித்த ரஜினி

78 வயது ரசிகையை கவுரவித்த ரஜினி

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது படங்களில் பிசியாக இருந்தாலும், அரசியல் பணியிலும் தீவிரம் காண்பித்து வருகிறார். தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து கட்சி பணிகள் குறித்து ஆலோசித்து வருகிறார். ரஜினி மக்கள் மன்ற காவலர்களுக்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதற்கு இன்னுமொரு உதாரணம் நடந்திருக்கிறது. திருவொற்றியூரைச் சேர்ந்தவர் திருமதி சாந்தா. இவருக்கு வயது 78. தீவிர ரஜினி ரசிகையான சாந்தா, ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை அறிவித்ததுமே மகிழ்ச்சியுடன் களமிறங்கினார். ரஜினி மக்கள் மன்ற கிளை உறுப்பினர் சேர்க்கை களப்பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வரும் சாந்தாவின் ஒரே விருப்பம், ரஜினியைச் சந்தித்து தனது பணிகளைச் சொல்ல வேண்டும் என்பதுதான். இது குறித்த தகவலை ரஜினி மக்கள் மன்றத்தினர் இன்று ரஜினியிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சாந்தாவை தன் இல்லத்துக்கு இன்று வரவழைத்த ரஜினிகாந்த், அவருக்கு பொன்னாடை அண...
சாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

சாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள அந்த மோஷன் வீடியோவின் முடிவில், படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அதன்படி படத்தின் டிரைலர் வருகிற மே 26-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினரின் இந்த அறிவிப்பால் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். `சாமி ஸ்கொயர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு தேவி...
காளி ரிலீசுக்கு நடுவே படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

காளி ரிலீசுக்கு நடுவே படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் காளி. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி 4 வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், மதுசூதன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் தொலைக்காட்சி வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். ரிச்சர்டு எம்.நாதள் ஒளிப்பதிவு ச...
அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜி

அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜி

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் நுழையப்போவதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆர்.ஜே.பாலாஜியும் சமீபத்தில் அவரது டுவிட்டர் படத்தை, கட்சிக் கொடி போல் மாற்றினார். ஆர்.ஜே.பாலாஜி ஏன் இப்படி செய்கிறார்? உண்மையிலேயே அரசியலில் நுழையவிருக்கிறாரா, அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தனது அடுத்த பயணம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று ஆர்.ஜே.பாலாஜி நேற்று அறிவித்திருந்தார். அதன்படி, ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. ஆர்.ஜே.பாலாஜி அடுத்ததாக `எல்கேஜி' என்றபடத்தில் நடிக்கிறார். பிரபு இயக்கும் இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உரிமையாளர் டாக்டர்.ஐசரி கணேஷ் தயாரிக...
காக்கி சட்டை அணியும் பிரபுதேவா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

காக்கி சட்டை அணியும் பிரபுதேவா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் பிரபிதேவா நடிப்பில் கடைசியாக வெளியான மெர்குரி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து. இந்த நிலையில், பிரபுதேவா நடிப்பில் அடுத்ததாக, `யங் மங் சங்', `லக்‌ஷ்மி' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. தற்போது பிரபுதேவா `சார்லி சாப்ளின்-2' படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா அடுத்ததாக இந்தியில் படமொன்றை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. இப்படி இருக்கையில், பிரபுதேவா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நேமிசந்த் ஜெபக் தயாரிக்கிறார். ஏ.சி.முகில் இயக்கும் இந்த படத்தில் பிரபுதேவா முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி ...
மக்களை பிரித்து மோதலை தூண்டுகிறது பாஜக – ராகுல் குற்றச்சாட்டு

மக்களை பிரித்து மோதலை தூண்டுகிறது பாஜக – ராகுல் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக சத்தீஸ்கர் மாநிலம் சென்றுள்ளார். இன்று பிலாஸ்பூர் பகுதியில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுடன் கலந்துரையாடிய அவர், தொண்டர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார். அப்போது பேசிய ராகுல்காந்தி, ‘நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மக்களின் எந்த பிரச்சனை குறித்தும் பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்?’ என கேள்வி எழுப்பினார். ‘எங்கெல்லாம் பாஜக ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள், இளைஞர்கள் தாக்கப்படுகிறார்கள். மக்களை பிரித்து அவர்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொள்ளும்படி பாஜக செய்கிறது. ‘உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ ஒரு பெண்ணை கற்பழித்தார். ஆனால் அதுகுறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை, பிரதமர் வழிகாட்டியாக இருக்க வேண்டும் இல்லையெனில் நாடு திக்கற்று போகும்’ என ராகுல் காந்தி தெரிவித்தார். மேல...
சீனா – உள்நாட்டில் கட்டப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் சோதனை ஓட்டம் நிறைவு

சீனா – உள்நாட்டில் கட்டப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் சோதனை ஓட்டம் நிறைவு

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
சீனாவிடம் ஒரே ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல்தான் இருந்து வந்தது. இதையடுத்து, இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்துக் கட்டி உள்ளது. இந்த கப்பல் கடந்த சில தினங்களுக்கு முன் லயோனிங் மாகாணத்தில் உள்ள டாலியன் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடல் சோதனைகளுக்காக புறப்பட்டது. இந்நிலையில், சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் தனது ஐந்து நாள் கடல் சோதனை ஓட்டத்தை இன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடல் சோதனை, பயிற்சிகளுக்கு பின்னர் இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல், 2020-ம் ஆண்டுக்கு முன்பாக அந்த நாட்டின் கடற்படையில் சேர்த்துக்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனா 3-வதாக ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை ஷாங்காயில் வடிவமைத்து கட்டி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 2030-ம் ஆண்டுக்குள் 4 விமானம் தாங்கி போர்க்கப்பல்களை பெற்றிருக்க வேண்ட...
25 வினாடிகள் முந்திச் சென்றதற்காக மன்னிப்பு கேட்ட ஜப்பான் ரெயில்வே துறை

25 வினாடிகள் முந்திச் சென்றதற்காக மன்னிப்பு கேட்ட ஜப்பான் ரெயில்வே துறை

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
ஜப்பான் நாட்டில் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்பதற்காக அனைத்து போக்குவரத்து வாகனங்களும் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டுச் செல்லும். இதேபோல், குறிப்பிட்ட இடத்தையும் சரியான நேரத்தில் சென்றடைவது வழக்கம். இந்நிலையில், ஜப்பான் நாட்டில் குறிப்பிட்ட நேரத்துக்கு முன் 25 வினாடிகள் முன்னதாகவே ரெயில் புறப்பட்டு சென்றதால் சிரமப்பட்ட பயணிகளிடம் ரெயில்வே நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் நோட்டகவா என்ற ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து தினமும் காலை 7.12 மணிக்கு ரெயில் புறப்பட்டுச் செல்லும். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 7.12 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில், சுமார் 25 வினாடிகள் முன்னதாக 7 மணி 11 நிமிடம் 35 வினாடிக்கு புறப்பட்டு கிளம்பி சென்றது. இதனால் அந்த ரெயிலில் பயணம் செய்ய இருந்த பயணிகள் வழக்கமாக செல்லும் ரெயில் இல்லாததை கண்டு கோபம் அடைந்தனர். பள்ள...