புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதா மரணமடைந்தார். அவரது உடல், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜிஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்திலேயே ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜுன் மாதம்  ஏற்கனவே அறிவித்தது. இந்த மண்டபம்  கட்டுவதற்காக சுமாா் ரூ.50.80கோடியில் அளவில்  டெண்டா் விடப்பட்டன.  இதைத்தொடா்ந்து இன்று காலையில் மொினாவில் ஜெயலலிதாவின் நினைவு இடத்தில்  மண்டபத்திற்கான  அடிக்கல் நாட்டு விழா தொடங்கியது. நினைவு மண்டபம் கட்டுவதற்கான யாகசாலை பூஜைகள்   காலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் பழனிசாமி,  துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்  பங்கேற்றனர். அமைச்சகள் கடம்பூர் ராஜூ, காமராஜ், செங்கோட்டையன், வேலுமணி, சண்முகம், செல்லூர் ராஜு,  மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்....
நடைப்பயிற்சியும், நல்ல கொழுப்பும்

நடைப்பயிற்சியும், நல்ல கொழுப்பும்

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
தினமும் நடைப்பயிற்சி செய்தால் நல்ல கொழுப்பு என அழைக்கப்படுகிற ஹெச்.டி.எல். கொலஸ்ட்ரால் அதிகரிப்பது உறுதி. என்றாலும், நடைப்பயிற்சி மட்டுமே போதாது. உணவிலிருந்து நாம் பெறும் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் கரைவதில்லை, இது புரதத்துடன் இணைந்து ‘கொழுப்புப் புரதமாக‘ மாறி, ரத்தத்தில் பயணம் செய்யும். அப்போது அதன் அளவு சரியாக இருக்க வேண்டும். அதிகரித்தால் ஆபத்து காத்திருக்கும். கொழுப்புப் புரதம் எல்.டி.எல்., ஹெச்.டி.எல்., வி.எல்.டி.எல். என மூன்று வகைப்படும். இவற்றில், எல்.டி.எல்.லும், வி.எல்.டி.எல்.லும் கெட்டவை. இவை இரண்டும் கல்லீரலில் இருந்து கொழுப்பை இதயத்துக்கு எடுத்துச் சென்று, இதயத் தமனிக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்பை ஏற்படுத்தும். ஆகவே இவற்றைக் ‘கெட்ட கொழுப்பு‘ என்கிறோம். அதே வேளையில் ஹெச்.டி.எல். புரதம் இதயத்துக்கு நன்மை செய்கிறது. இதயத்திலிருந்து கொழுப்பை விடுவித்து, கல்லீரலுக்கு எடுத...
இரத்தக்கொழுப்பை குறைக்கும் கிவி பழம்

இரத்தக்கொழுப்பை குறைக்கும் கிவி பழம்

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
  கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட்டு வந்தால் மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும். கிவி மாதிரி வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது. ஆனால் வாழைப்பழங்களை ஒப்பிடுகையில் கிவி பழத்தில் கலோரியின் அளவு குறைவு. கலோரியின் அளவு குறைவாக இருப்பதால் சோடியத்தின் அளவு குறைகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சோடியத்தின் அளவு குறைவதால் இதய நோய் வராமல் தடுக்கிறது. வைட்டமின் ஈ அதிகமாக இருக்கும் உணவில் கொழுப்பும் அதிகமாக இருக்கும். ஆனால் கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இதனால் ‘ஆன்டிஆக்ஸிடன்ட்’ அதிகமாவதால் ஆரோக்கியமான இதயத்தையும் தருகிறது. போலிக் அமிலம் கிவி பழத்தில் அதிகமாக, இருப்பதால் கர்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனென்றால் குழந்தைகளுக்குச் செல்லும் நரம்புக்குழலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதோடு, கர்ப்...
நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள் – விஷால் ஆவேசம்

நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள் – விஷால் ஆவேசம்

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள், நடிகர்கள்
நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவனுக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக நேற்றே மகாலிங்கம் தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் சென்றுள்ளார். இன்று காலை தேர்வெழுத மகாலிங்கம் சென்றுவிட்ட நிலையில், ஓட்டலில் இருந்த அவரது தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்துள்ளார். கிருஷ்ணசாமியின் உடலை சொந்த ஊர் கொண்டு வருவதற்காக தமிழக அதிகாரிகள் குழு கேரளா விரைந்துள்ளதாக திருவாரூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவரது மறைவுக்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இன்று நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவியருக்கும் எனது வாழ்த்துகள். கடும் மன உளைச்சலுக்கும் அலைக்கழிப்புக்கும் இடையிலும் கூட தங்கள் மருத்த...
விரதமிருந்து சந்திர தரிசனம் செய்ய வேண்டிய நாட்கள்

விரதமிருந்து சந்திர தரிசனம் செய்ய வேண்டிய நாட்கள்

HOME SLIDER, NEWS, செய்திகள்
வைகாசி    02 (16.05.2018) புதன் ஆனி    01 (15.06.2018) வெள்ளி ஆனி    30 (14.07.2018) சனி ஆடி    27 (12.08.2018) ஞாயிறு ஆவணி    26 (11.09.2018) செவ்வாய் புரட்டாசி    24 (10.10.2018) புதன் ஐப்பசி    23 (09.11.2018) வெள்ளி கார்த்திகை    22 (08.12.2018) சனி மார்கழி    23 (07.01.2018) திங்கள் தை    23 (06.02.2019) புதன் மாசி    24 (08.03.2019) வெள்ளி பங்குனி    23 (06.04.2019) சனி இந்த நாட்களில் வளர்பிறை ஆரம்பித்து முதன் முதலில் சந்திரன் தோன்றுவதால் இந்நாட்களில் விரதமிருந்து மாலை சூரியன் அஸ்தமனம் அடையும் போது சந்திரோதயத்தை மேற்கு கீழ்வானில் தரிசனம் செய்வோர்க்கு அந்த நாள் தொடங்கி அந்த மாதம் முடிய நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு சுபிட்சம் பெறுவார்கள் என்பது நிச்சயம். மேலும் 1000 பிறைகள் தரிசனம் செய்து 80-க்கும் மேல் ஆயுள் பெறுவதும் நிச்சயம் என்று நவக்கிரக புராணம் கூறுகிறது....
பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்

பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்

HOME SLIDER, NEWS, செய்திகள்
மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. கிறிஸ் லின், ஷுப்மான் கில் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கில் 7 ரன் எடுத்த நிலையிலும், கிறிஸ் லின் 17 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து 3-வது விக்கெட்டுக்கு ராபின் உத்தப்பா உடன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மும்பை இந்தியன்ஸ் இடம் இருந்து போட்டியை தங்கள் பக்கம் இழுத்தது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ராபின் உத்தப்பா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். உத்தப்பா அவுட...
தெற்கு ஆசிய ஜூனியர் தடகளத்தில் 7.74மீ நீளம் தாண்டி உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றார் லோகேஷ்

தெற்கு ஆசிய ஜூனியர் தடகளத்தில் 7.74மீ நீளம் தாண்டி உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றார் லோகேஷ்

HOME SLIDER, NEWS, செய்திகள்
தெற்கு ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்ஸ் தொடர் இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய முதல் நாளில் இந்தியா 11 தங்கப் பதக்கங்களை வென்றது. நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் எஸ். லோகேஷ் கலந்து கொண்டார். இவர் 7.7 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். அத்துடன் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் பங்கேற்பதற்கு தகுதியும் பெற்றார்....
நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது – சூர்யா

நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது – சூர்யா

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
அறம் செய்ய விரும்பு புத்தக வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூலகத்தில் நடைபெற்றது. இதில் நடிகரும் அகரம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான சூர்யா, உதயசந்திரன் ஐஏஎஸ், ராஜகோபாலன், சா.மாடசாமி, பத்ரிகையாளர் சமஸ், கல்விமணி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி கல்வித்துறை செயலர் உதயசந்திரன் ஐஏஎஸ் நூலை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார். விழாவில் நடிகர் சூர்யா பேசும்போது, ‘கல்வி தாகத்தோடு இருப்போருக்கு எல்லாம் வெளிச்சத்தை கொடுப்பது அகரம். 2006ல் பேட்சில் இருந்த அகரம் இதை சேவையாக பார்க்காமல் ஒரு கடமையாக இருக்க வேண்டும் என்று செய்து வருகிறது. முதல் தலைமுறை மாணவர்கள், தன் தாய், தந்தை படிப்பறிவு இல்லாமல், படிக்க தேவையான புத்தகம், பேனா போன்றவற்றை வாங்க முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்காகவே ஆரமிக்கப்பட்டது தான் இந்த அகரம். இது போல் படி படியாக பலவற்றை கூறலாம். பல ஏற்ற தாழ்வுகள் கொண்டது தான் இந்த சமூகம். எல்லா...
பாட புத்தகத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான்

பாட புத்தகத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான்

HOME SLIDER, NEWS, செய்திகள்
11-ம் வகுப்பு சிறப்பு தமிழ் புத்தகத்தில், "இசைத்தமிழர் இருவர்" என்ற தலைப்பில், இசையமைப்பாளர்கள்  இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் பள்ளிப் பாடத்திட்ட நூல்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இந்த நூல்களை கடந்த 4-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்தார். 1,6,9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு மட்டும், வரும் கல்வி ஆண்டில், புதிய பாடத்திட்டத்தின்படி புத்தகங்கள் அறிமுகமாகின. இதில், 11-ம் வகுப்புக்குரிய ‘பொது தமிழ்’ பாடப்புத்தகத்தில் 'இசைத் தமிழர் இருவர்' என்ற தலைப்பில், ஒரு பாடம் உள்ளது. 'சிம்பொனி தமிழர்' என்ற பெயரில் திரைப்பட இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா குறித்த பாடமும் 'ஆஸ்கர் தமிழர்' என்ற பெயரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் குறித்த பாடமும் இடம் பெற்றுள்ளன....
ஆதார் பிரச்சினையை கிளப்பும் விஷால்

ஆதார் பிரச்சினையை கிளப்பும் விஷால்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் விஷால் தயாரித்துள்ள படம் ‘இரும்புத்திரை’. விஷால் நாயகனாக நடிக்கும் இதில், சமந்தா நாயகியாக நடிக்கிறார். அர்ஜுன், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வின்சென்ட் அசோகன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படத்துக்கு, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். திலீப் சுப்பராயன் சண்டை பயிற்சி அளித்துள்ளார். லைகா நிறுவனம் இணைந்து வழங்கும் இந்த படத்தை கிரிஷ் சினிகிரியே‌ஷன் சார்பில் ஸ்ரீதரன் தமிழகம் முழுவதும் வினியோகம் செய்கிறார். “இந்த படத்தில் விஷால் ராணுவ மேஜராக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் தூள் கிளப்பி இருக்கிறார். சமந்தா டாக்டராக முக்கிய வேடத்தில் வருகிறார். அர்ஜுன் அதிரடி வில்லனாக நடித்துள்ளார். இதில் ஆதார் அடையாள அட்டையால் ஒரு சாதாரண குடி மகனுக்கு என்ன என்ன பிரச்சினைகள் வருகிற...