புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த மற்ற துறையுடன் வணிகத் துறையும் இணைய வேண்டும் -நடிகர் கமல்ஹாசன்

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த மற்ற துறையுடன் வணிகத் துறையும் இணைய வேண்டும் -நடிகர் கமல்ஹாசன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 35-வது வணிகர் தினம், இந்திய வணிகர் உரிமை மீட்பு மாநாடாக சென்னை வேலப்பன்சாவடியில் இன்று தொடங்கியது. இதற்காக திருவேற்காடு சாலையில் உள்ள 100 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் இந்த மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன்    முன்னிலையில் பேசியதாவது, நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் வணிகர்கள். அவர்களது உரிமை மீட்பு மாநாட்டில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. தேவையின்றி வணிகர்கள் கடையடைப்பு செய்யமாட்டோம் என்ற அறிவித்திருப்பது வரவேற்புக்கு உரியது. மக்களுக்கு இடையூறு இன்றி போராட்டங்கள் நடத்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கையாகும். கிராமசபைக் கூட்டத்தில் வணிகர்கள் அன...
ஸ்ருதியின் படபிடிப்பு தளத்திற்கு வருகை தந்த சரிகா

ஸ்ருதியின் படபிடிப்பு தளத்திற்கு வருகை தந்த சரிகா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர்களின் உலகத்தைப் பற்றிய இந்த படத்தில் ஸ்ருதிஹாசனின் பற்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை அமைத்திருக்கிறாராம் இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர். இதன் படபிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு ஸ்ருதிஹாசனின் அம்மாவும், நடிகையுமான சரிகா வருகை தந்து, மகளின் நடிப்பை பார்வையிட்டிருக்கிறார். இதைப் பற்றி படக்குழுவினர்களிடம் விசாரித்தபோது, ‘‘மகேஷ் மஞ்சரேக்கர் போன்ற திறமையான கதை சொல்லிகளின் படைப்பில் உருவாகும் படத்தில் நடிக்க ஸ்ருதி ஒப்புக்கொண்டதை கேள்விப்பட்ட சரிகா உண்மையிலேயே சந்தோஷமடைந்தார். இயக்குநரின் வழிகாட்டலை ஸ்ருதி பின்பற்றினால் அவரின் திறமை மேலும் பளிச்சிடும் என்றார். அத்துடன் ஸ்ருதியை இது போன்ற தேசிய விருது பெற்...
மோடியை விமர்சிப்பதால் இந்திப்பட வாய்ப்பு பறிபோனது – பிரகாஷ்ராஜ்

மோடியை விமர்சிப்பதால் இந்திப்பட வாய்ப்பு பறிபோனது – பிரகாஷ்ராஜ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
நடிகர் பிரகாஷ்ராஜ் தனது நண்பரும், சமூக ஆர்வலமான கவுரி லங்கேஷ் கொலைக்குப் பின் அரசியலில் ஈடுபட்டு பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். தற்போது கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை எதிர்த்து பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்துக்கு நடுவே அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:- நான் இப்போதைய தேர்தல் அரசியலில் இல்லை. ஆனால் நான் கர்நாடகத்தில் அரசியலில் இருக்கிறேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எதிர்காலத்தில் தீவிர அரசியலில் ஈடுபடும் திட்டம் இருக்கிறது. எனது பிரசாரம் இன்னும் 10 வருடங்களுக்கு நீடிக்கும். அது கர்நாடகத்திலும் இந்த நாட்டிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும். இப்போதைய நிலையில் கர்நாடகத்திலும், நாட்டின் மற்ற இடங்களிலும் பிராந்திய அளவில் புதிய கட்சி தேவைப்படுகிறது. அதற்கான நேரம் வந்தால் புதிய கட்சி தொடங்குவேன். ஆனால் கொள்கையே இல்லாமல் கட்சிகள் உதயமாகின்றன....
டிக் டிக் டிக் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

டிக் டிக் டிக் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் சார்பில் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் `டிக் டிக் டிக்'. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிங்கப்பூரை சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் ஜனவரியில் ரிலீசாக இருந்தது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளர். அதன்படி படம் வருகிற ஜூன் 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். `டிக் டிக் டிக்' இமானின் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது...
அதர்வாவின் செம போத ஆகாதே – ரிலீஸ் தேதி அறிவிப்பு

அதர்வாவின் செம போத ஆகாதே – ரிலீஸ் தேதி அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் அதர்வா. அவரது நடிப்பில் `செம போத ஆகாதே' மற்றும் `இமைக்கா நொடிகள்' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. இதில் `செம போத ஆகாதே' படம் வருகிற மே 18-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடித்துள்ளனர். அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்தை கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. `பானா காத்தாடி' படத்திற்கு பிறகு பத்ரி வெங்கடேஷ் - அதர்வா மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் இந்த பட...
முதல்வர் பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

முதல்வர் பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழகத்தின் முதல்வராக இருந்து வருபவர் எடப்பாடி பழனிசாமி. இவரது வீடு கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று தகவல் கிடைத்தது. விசாரணையில், கடலூரை சேர்ந்த பிரதீப் என்பவர் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு தீவிர  சோதனை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதேபோல், போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. முதல்வர் வீட்டுக்கு மிரட்டல் விடுத்த அதே நபரே இவரது வீட்டுக்கும் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்....
இந்தோ-இத்தாலிய உறவைக் கொண்டாடும் விதமாக டெல்லியில் A.P.ஸ்ரீதரின் ஓவியக் கண்காட்சி!

இந்தோ-இத்தாலிய உறவைக் கொண்டாடும் விதமாக டெல்லியில் A.P.ஸ்ரீதரின் ஓவியக் கண்காட்சி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
உலக அளவில் ஓவியங்களின் மீது காதல் கொண்டவர்களுக்கு அன்று முதல் இன்று வரை எப்போதுமே நீங்காத வியப்பைத் தந்திருப்பவர் லியானர்டோ டா வின்சி. அவரது தூரிகையிலிருந்து பிறந்த “மோனாலிசா” தான் இன்றளவிலும் இந்தப் பிரபஞ்சத்திற்கான கனவு அழகி. சற்று ஏறக்குறைய டா வின்சியின் ஓவியங்களுக்கு நிகராக ஒருவரது ஓவியங்கள் பேசுகிறது என்றால் அது நிச்சயம் ரவி வர்மாவின் ஓவியங்கள் தான். உலகோர் மத்தியில் இந்தியாவின் கலைப் பண்பாட்டை எடுத்துக் கூறும் ஒப்பற்றச் சான்றுகளாக நிலைத்திருக்கின்றன அவர் தீட்டி வைத்து விட்டுப் போன அத்தனை ஓவியங்களும். இப்படி உலகையே தன் வயப்படுத்தியிருக்கும் இரு துருவங்களின் ஓவியங்களைக் குழைத்து, புதியதோர் சித்திர மாக்கினால் அது எப்படி இருக்கும்?. இருவேறு நேரெதிர் கலாச்சாரம் ஒன்றாய் சேர்ந்து உயிர் பெருகையில் அது தரும் பிரமிப்பு எத்தகையதாய் இருக்கும்?. நினைக்கவே விழிகளை விரியச் செய்யும் இச்சிந்தனைக்க...
‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’- ரூ.5 ஆயிரம் கோடி வசூல்

‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’- ரூ.5 ஆயிரம் கோடி வசூல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
உலக சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ ஹாலிவுட் படம் கடந்த வெள்ளியன்று திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் உலக அளவில் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. கடந்த 5 நாட்களில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது. இந்தியாவில் முதல் நாளில் ரூ.40.13 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.39.1 கோடியும், 3-வது நாளில் ரூ.46.67 கோடியும் வசூலித்து இருந்தது. 5 நாட்களில் மொத்த வசூல் ரூ.150 கோடியை தாண்டி இருப்பதாக கூறப்படுகிறது. ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களின் மிரட்டலான அதிரடி சாகசங்கள் நிரம்பிய படமாக வந்துள்ளது. இதில் ராபர்ட் டவுனி, கிறிஸ் கெம்ஸ்வொர்த், பார்க் ரூபலா, கிறிஸ் வெனஸ், ஸ்கேர்லட் ஜான்சன், டாம் ஹாலன்ட், எலிசபெத் ஆல்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆன்டனி ரஸோ, ஜோ ரஸோ ஆகியோர் டைரக்டு செய்துள்ளனர்....
விஷால் வில்லனாக நடிக்க ஆசைப்பட்ட இரும்புத்திரை..!

விஷால் வில்லனாக நடிக்க ஆசைப்பட்ட இரும்புத்திரை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இரும்புத்திரை படத்தில் விஷால்-சமந்தாவுடன், சக்தி வாய்ந்த வில்லன் வேடத்தில் அர்ஜுன் நடித்து இருக்கிறார். அர்ஜுன் வில்லனாக நடித்தது எப்படி? என்பது பற்றி டைரக்டர் மித்ரன் கூறியதாவது:- ‘‘முதலில், இந்த படத்தை வேறு ஒரு கதாநாயகனை வைத்து எடுப்பது என்றும், விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பது என்றும் முடிவு செய்திருந்தோம். விஷாலிடம் கதை சொன்னபோது, ‘‘அந்த வில்லன் வேடத்தில் நானே நடிக்கிறேன்’’ என்றார். அவ்வளவு கனமான வேடம், அது. நான்தான் விஷாலை வற்புறுத்தி கதாநாயகனாக நடிக்க வைத்தேன். சமந்தா கதாபாத்திரம் பற்றி இப்போது கூற முடியாது. ‘சஸ்பென்ஸ்’ ஆன கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். சமூக வலைதளங்களினால் ஏற்படும் பாதிப்பை பற்றி பேசும் படம், இது.’’...
எம்.ஐ.டி யின் டிரோன் ஆலோசகராக நடிகர் அஜித்குமார் நியமனம்

எம்.ஐ.டி யின் டிரோன் ஆலோசகராக நடிகர் அஜித்குமார் நியமனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி பல துறைகளில் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மோட்டார் பைக் பந்தயங்களில் ஆர்வம் உண்டு. இதற்காக நடிப்பதை ஒத்திவைத்து விட்டு வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று போட்டிகளில் பங்கேற்று வந்தார். விமானம் ஓட்டுவதிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. விமானம் ஓட்டும் லைசென்சும் வாங்கி வைத்துள்ளார். சமீபத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியும் எடுத்துள்ளார். ருசியாக பிரியாணி சமைப்பார். படப்பிடிப்பின் கடைசி நாளில் தனது கையால் பிரியாணி சமைத்து படக்குழுவினருக்கு பரிமாறுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப கல்லூரியில் அஜித்குமாருக்கு புதிய பதவி வழங்கப்பட்டு உள்ளது. அந்த கல்லூரியின் ஹெலிகாப்டர் சோதனை விஞ்ஞானி மற்றும் ஆளில்லா விமான பயிற்சி ஆலோசகராக அவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆளில்லா வி...