வியாழக்கிழமை, செப்டம்பர் 10
Shadow

முதல்வர் பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

தமிழகத்தின் முதல்வராக இருந்து வருபவர் எடப்பாடி பழனிசாமி. இவரது வீடு கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது.
இந்நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று தகவல் கிடைத்தது. விசாரணையில், கடலூரை சேர்ந்த பிரதீப் என்பவர் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து, முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு தீவிர  சோதனை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
இதேபோல், போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. முதல்வர் வீட்டுக்கு மிரட்டல் விடுத்த அதே நபரே இவரது வீட்டுக்கும் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.
மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1,206 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன