புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

நதிநீரில் இருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாக சரியாகும்! பிரகாஷ் ராஜ் யோசனை!

நதிநீரில் இருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாக சரியாகும்! பிரகாஷ் ராஜ் யோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழக விவசாடிகளை கதறி அழ வைத்து விட்ட காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை ஏதோ சில தசாப்தப் பிரச்னை அல்ல; அது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலச் சிக்கல். 1807-ம் ஆண்டே காவிரி நதி நீரைப் பங்கீட்டுக் கொள்வதில் சிக்கல் துவங்கிவிடுகிறது. பேச்சு வார்த்தையும் அதே காலக்கட்டத்தில் துவங்கிவிடுகின்றன. பேச்சு வார்த்தை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க 1866-ம் ஆண்டு மைச்சூருக்கான பிரித்தானிய நிர்வாகத்தைச் சேர்ந்த கர்னல் ஆர்.ஜே. சாங்கி மலைச்சரிவில் விழும் மழைநீரை முழுமையாகப் பயன்படுத்தும் நோக்கத்தோடு ஒரு பெருந்திட்டத்தைத் தீட்டுகிறார். இதற்கு முதலில் மெட்ராஸ் மாகாண அரசு ஒத்துக்கொண்டாலும், நாட்கள் செல்லச் செல்ல... இதனால் மெட்ராஸ் மாகாணத்துக்கு வரும் நீரின் அளவு குறையுமே என்று அச்சம் ஏற்படுகிறது. மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. பலசுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின் 1892 பிப்ரவரி 18-ம் தேதி ஒரு ஒப்பந்தம் தயராகிறது....
இயக்குநர் மஜீத்தை வைத்து  படம் தயாரிக்கும் சதா !

இயக்குநர் மஜீத்தை வைத்து படம் தயாரிக்கும் சதா !

CINI NEWS, சினி நிகழ்வுகள்
கதாநாயகி நடிகைகளுக்குக் கதை பிடித்திருந்தால் அவர்களே அப்படத்தை த் தயாரிக்கவும் தயங்குவதில்லை . இதற்கு அண்மை உதாரணம் நயன்தாரா. ‘அறம் ‘ வெற்றிப் படத்தின் கதை பிடித்து அதை நயன்தாராவே தயாரித்தார். படமும் பேசப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது . அவரைப் போல நடிகை சதாவும் தன்னை நாயகியாக வைத்து ‘டார்ச் லைட் ‘ என்கிற படத்தை எடுத்து வருகிற இயக்குநர் மஜீத்தின் திறமையில் நம்பிக்கை வைத்து அவரது இயக்கத்தில் அடுத்த படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளார்.  அதற்கு முழு முதற் காரணம் மஜீத் இயக்கியுள்ள ‘டார்ச் லைட் ‘ படம் தான். அப்படி என்ன அந்தப் படத்தில் உள்ளது? பெண்களுக்கான விழிப்புணர்வுப் படமாக ‘டார்ச் லைட்’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குபவர் விஜய்யை வைத்து ‘தமிழன் ‘படத்தை இயக்கிய அப்துல் மஜீத். கான்பிடன்ட் பிலிம் கேஃப் நிறுவனம் ஆர்.கே ட்ரீம் வேர்ல்டு , ஒயிட் ஸ்க்ரீன் எண்டர்டெய்ன்மெண்ட் ஆகி...
தமிழ் திரையில் 40 ஆண்டு வாழ்க்கையை நிறைவு செய்த ‘விஜயகாந்த்’-க்கு விழா!

தமிழ் திரையில் 40 ஆண்டு வாழ்க்கையை நிறைவு செய்த ‘விஜயகாந்த்’-க்கு விழா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
 நூறாண்டு  கடந்த நம் நம் தமிழ் திரைப்படத் துறையில் தனது 40 ஆண்டு கால பயணத்தை நிறைவு செய்துள்ள நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த்-க்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாராட்டு விழா நடத்தப்பட இருக்கிறது. தமிழ் திரையின் மூத்த நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளரு மான விஜயகாந்த் தனது 40 ஆண்டு கால சினிமா பயணத்தை நிறைவு செய்கிறார்.  அதனைக்  கொண்டாடும் விதமாக சென்னையை அடுத்த கரசங்கள் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இதில் பல அரசியல் கட்சி பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர். முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில் ,'எனது அன்பான சகோதரர் விஜயகாந்த் அவர்களை வெறுக்கிறவர்கள் கூட ஒரு கட்டத்தில்  நேசிப்பார்கள்'.  இவ்வாறு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
மீண்டும் வரலாறு படைத்த “நாடோடி மன்னன்”!

மீண்டும் வரலாறு படைத்த “நாடோடி மன்னன்”!

MOVIES, திரைப்படங்கள்
1958 -ஆம் ஆண்டு “பொன்மனச் செம்மல்”, “புரட்சித் தலைவர்” எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “நாடோடி மன்னன்”. அந்தக் காலகட்டத்தைப் பொறுத்த வரையில் வசூலில் இமாலய சாதனை செய்த திரைப்படமாக பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கியவரும் எம்.ஜி.ஆர் தான். இப்படத்திற்கான கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி ஆகியோரும்.. திரைக்கதையை சி.கருப்புசாமி, கே.ஸ்ரீனிவாசன் மற்றும் ப.நீலகண்டன் ஆகியோரும் இணைந்து எழுதினார்கள். இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பானுமதி,  சரோஜா தேவி  மற்றும்  எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்தார்கள். அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூபாய் 1 கோடியே 80 லட்சம் பட்ஜெட்டில்,  எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன்  இணைந்து “எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ்” சார்பில் தயாரித்தார்கள். இப்படம் எம்.ஜி.ஆருக்கு 1...
தமிழ் புத்தாண்டு வாழ்த்து ; நொந்து போய் ட்விட் போட்ட ரஜினி !

தமிழ் புத்தாண்டு வாழ்த்து ; நொந்து போய் ட்விட் போட்ட ரஜினி !

HOME SLIDER, NEWS, செய்திகள்
நம் உரிமைகள் கிடைக்காமல்  வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது என  ட்விட்டரில் தெரிவித்துள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். சித்திரை 1-ஆம் தேதி நாடு முழுவதும் அவரவர் பாரம்பரிய முறைப்படி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தமிழர்கள் தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடுகின்றனர். இந்நிலையில், ரஜினிகாந்த் டுவிட்டரில் தமிழ் மக்களுக்கு புத்தாண்டு தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில், உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள வேண்டும்; புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்....
‘கண்ணே கலைமானே’ –  பேத்தி பாடிய பாடலை ரசித்த கருணாநிதி !

‘கண்ணே கலைமானே’ – பேத்தி பாடிய பாடலை ரசித்த கருணாநிதி !

HOME SLIDER, NEWS, செய்திகள்
வயது முதிர்வினால் ஓய்வில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியிடம் அவரது பேத்தி பாடல் பாடிக்காட்ட, அதை கேட்டு கருணாநிதி ரசித்து மகிழ்ந்த வீடியோ வெளியாகியுள்ளது. வயது முதிர்வின் காரணமாக அரசியலிலிருந்து ஒதுங்கி திமுக தலைவர் கருணாநிதி, அவரது கோபாலபுரம் வீட்டில் ஓய்வு எடுத்துவருகிறார். எனினும் அவ்வப்போது அண்ணா அறிவாலயத்துக்கு சென்றுவருகிறார். மேலும் கருணாநிதியை அவரது வாரிசுகள் சந்திக்கும் வீடியோ அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. அண்மையில் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதியை சந்தித்த வீடியோ ஒன்று வெளியானது. பேரக்குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், கருணாநிதியின் பேத்தியும், மு.க.தமிழரசுவின் மகளுமான பூங்குழலி கருணாநிதியை சந்தித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது, கண்ணே கலைமானே பாடலை பூங்குழலி, கருணாநிதியிடம் பாடி காட்டுகிறார். அதை கே...
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை

NEWS, செய்திகள்
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 128-பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கும் உருவப்படத்திற்கும் அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்தியாவின் சரித்திர நாயகன், ஜனநாயக இந்தியாவின் அடிநாதமான சட்டத்தை இயற்றிவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து அயராமல் குரல் கொடுத்து வந்தவர், சமத்துவத்தை போற்றிய டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 128-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது சிலைக்கும், உருவ படத்திற்கும் இந்தியா முழுவதும் அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதேபோல் பிரதமர் மோடியும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செல...
தமிழ் ரசிகர்களுக்கு மட்டு, ‘மெர்குரி’ படத்தைக் காண்பிக்க இயலவில்லையே! – கார்த்திக் சுப்புராஜ் வேதனை!

தமிழ் ரசிகர்களுக்கு மட்டு, ‘மெர்குரி’ படத்தைக் காண்பிக்க இயலவில்லையே! – கார்த்திக் சுப்புராஜ் வேதனை!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
கடந்த 45 நாட்களுக்கும் மேலாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், சினிமா ஸ்டிரைக்கின் ஒரு பகுதியாக புதுப்படங்களை வெளியிடக்கூடாது என அறிவித்துள்ள நிலையில்   மெர்க்குரி' என் தாயகம்... தமிழகம் அல்லாமல் உலகெங்கும் 1000 திரையரங்குகளில் பெரிய ரிலீஸை சந்தித்திருக்கிறது என்று பெருமையும் வருத்தமும் தெரிவித்திருக்கிறார்  இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜ் பிரபுதேவா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 30 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் வெளியாகியுள்ள சைலன்ட் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள திரைப்படம் மெர்க்குரி'. மார்ச் மாதம் வெளிவந்த டீசரில் படம் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர். இதற்கிடையில் ஆரம்ப நிலையில் இருந்த தமிழ் சினிமா ஸ்டிரைக் வலுத்தது. பல பேச்சுவார்த்தைக்குப் பிறகும் படத்தை ஸ்டிரைக் முடியாமல் ரிலீஸ் செய்வது ஏற்புடையதாய் இருக்காது எனத் தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டம...
தேசிய விருது பெற்றோரின் முழு விபரம்!

தேசிய விருது பெற்றோரின் முழு விபரம்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
நம் அரசின் சார்பில்  திரைப்படங்களுக்கு வழங்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழில் மிகவும் எதிர்பார்த்த படங்களுக்கு விருது கிடைக்காததும் , தகுதி இல்லாத சில படங்களுக்கு விருது அரிவிக்கப்பட்டிருப்பதும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 65வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. சேகர் கபூர் தலைமையிலான தேர்வுக் குழு பிராந்திய மொழி படங்களின் தரத்தை பார்த்து மிரண்டு போயுள்ளதாம். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது. தேசிய விருது பெற்றோரின் விபரம் இதோ, தாதா சாகேப் பால்கே விருது- வினோத் கன்னா சிறந்த நடிகை- ஸ்ரீதேவி (மாம்) சிறந்த நடிகர்- ரித்தி சென்( நகர் கிர்தான்) சிறந்த இயக்குனர்- ஜெயராஜ் (பயானகம்) சிறந்த சண்டை அமைப்பு - பாகுபலி 2 சிறந்த நடன இயக்குனர்- கணேஷ் ஆச்சார்யா(டாய்லெட் ஏக் பிரேம் கதா) சிறந்த ஸ்பெஷல் எஃ...