புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

நடிகர் அஜெய்ரத்னத்தின் பேட்மிட்டன் அகாடமியை நடிகர் ஆர்யா துவக்கி வைத்தார்

நடிகர் அஜெய்ரத்னத்தின் பேட்மிட்டன் அகாடமியை நடிகர் ஆர்யா துவக்கி வைத்தார்

NEWS, செய்திகள்
சினிமா கலைஞர்கள் சினமாவை தவிர விளையாட்டு துறையிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான அஜெய்ரத்னினமும் விளையாட்டு துறையில் அதிகம் ஆர்வம் கொண்டவர். அவர் தற்போது அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் எனும் இடத்தில் வி ஸ்கொயர் என்ற பேட்மிடன் அகாடமியை தொடங்கி இருக்கிறார். அதன் திறப்புவிழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார். விழாவில் அஜெய்ரத்னம் மற்றும் அவரது மகன்களான தீரஜ்விஷ்ணு ரத்னம், விஷ்வேஷ் ரத்னம் ஆகியோரும் பங்குபெற்றனர்....
தாஜ்மஹால் யாருக்கு சொந்தம்? – உச்சநீதிமன்றம் புது உத்தரவு!

தாஜ்மஹால் யாருக்கு சொந்தம்? – உச்சநீதிமன்றம் புது உத்தரவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தாஜ் மஹாலை சொந்தம் கொண்டாடும், உத்தர பிரதேச மாநில, சன்னி வக்ப் வாரியம், ஷாஜஹானின் கையெழுத்துடன் கூடிய ஆவணங்களை, ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை, மொகலாய அரசர் ஷாஜஹான், தன் மனைவி, மும்தாஜுக்காக கட்டினார். இதன்பின், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கட்டுப்பாட்டில், தாஜ் மஹால் சென்றது. சுதந்திரத்துக்கு பின், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. தற்போது, இந்திய தொல்லியல் துறை, தாஜ் மஹாலை பராமரித்து வருகிறது. இந்நிலையில், தாஜ் மஹால், தங்களுக்கு சொந்தம் என்றும், அதன் பராமரிப்பு பணியை, மொகலாய வம்சாவளியினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், உ.பி., மாநில, சன்னி வக்ப் வாரியம் உரிமை கோரியது. கடந்த, 2010ல், வக்ப் வாரியத்தின் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி, இந்திய தொல்லியல் துறை, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொ...
ஏவி.எம்.சரவணன் எழுதிய ‘நானும் சினிமாவும்’ என்ற நூல் வெளியீடு!

ஏவி.எம்.சரவணன் எழுதிய ‘நானும் சினிமாவும்’ என்ற நூல் வெளியீடு!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
பழம்பெரும் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன்  எழுதிய ‘நானும் சினிமாவும்’ என்ற நூல்  வெளியிடப் பட்டது. திரையுலகில் ‘அடக்கம்’, ‘அமைதி’, ‘அன்பு’ மூன்றுக்கும் உதாரணமாக காட்டப்படுபவர் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் . எப்போதும் வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட்டில் கைகளை கட்டியபடியே அடக்கத்தின் மறு உருவமாக இருக்கும் ஏவி.எம்.சரவணன்  ஏவி.எம். நிறுவனத்தை ஸ்தாபித்த அமரர் ஏவி மெய்யப்பன் – இராஜேஸ்வரி அம்மையாரின் மகன்களில் ஒருவராவார். ஏவி.எம். சரவணன் 1939-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ம் தேதியன்று பிறந்தார். கல்லூரி படிப்பை படிக்காமலேயே அதற்கு முன்னதாக தனது 18-வது வயதிலேயே ஏவி.எம். ஸ்டூடியோவில் வேலைக்கு வந்துவிட்டார். மிகச் சரியாக 1958-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ம் தேதியன்று ஏவி.எம்.சரவணன் அவர்கள் ஏவி.எம். நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இன்று 2018 ஏப்ரல் 9-ம் தேதியன்று ஏவி.எம்.சரவணன் அவர்கள் சினிமா துறைக்கு வந்து 60...
‘கதம் கதம்’ தயாரிப்பாளர் உருவாக்கும் ‘எ ஸ்டோரி’ வெப் சீரிஸ்..!

‘கதம் கதம்’ தயாரிப்பாளர் உருவாக்கும் ‘எ ஸ்டோரி’ வெப் சீரிஸ்..!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
சினிமா, சீரியல் இவற்றை தாண்டி குறும்படங்கள் ஒருபக்கம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. தற்போது இவற்றின் இன்னொரு வடிவமாக வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பரவலாக வரவேற்பை பெற ஆரம்பித்துள்ளன.. இனிவரும்  காலங்களில் வெப் சீரிஸ்கள் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என்பது உறுதி. அந்தவகையில் ‘எ ஸ்டோரி’ (A Story) என்கிற வெப் சீரிஸ் விரைவில் வெளியாக இருக்கிறது.. நிமேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் நாயகியாக ஸ்ரீனிகா என்பவர் நடித்துள்ளார்.  இந்த படத்தின் இயக்குனர் நிமேஷ் 'மல்லி' என்ற குறும்படத்திற்காக மாநில மற்றும் தேசிய விருதுளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  'அப்பு மூவிஸ்' நிறுவனம் சார்பில் பாபு தூயவன் இந்த வெப் தொடரை தயாரித்துள்ளார். இந்த நிறுவனம் ஏற்கனவே நட்டி நடராஜ் நடித்த கதம் கதம் மற்றும் இட்லி ஆகிய படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவ...
குமாரி மதுமிதாவின் அபார நாட்டிய அரங்கேற்றம்….வியந்து போன வி.ஐ.பி.கள்..!!.

குமாரி மதுமிதாவின் அபார நாட்டிய அரங்கேற்றம்….வியந்து போன வி.ஐ.பி.கள்..!!.

NEWS, செய்திகள்
பிரபல தொழிலதிபர் ஜி.வினோத்குமார்-அனந்தநாயகி தம்பதியரின் மகள் குமாரி மதுமிதா வின்(வயது 13) பரத நாட்டிய அரங்கேற்றம் சென்னை முத்தமிழ் பேரவை டி .என். ராஜரத்தினம்  கலையரங்கில் சமீபத்தில் வெகு விமர்சையாக நடந்தது. மதுமிதாவின் நாட்டிய குரு .ஸ்ரீமதி வெங்கட் தலைமையில் திருமதி.ரோஷினி கணேஷ் ஏழு விதமான பாடல்களைப் பாடியதற்கு மதுமிதாவின் நாட்டியம் ஒவ்வொன்றும் ரசிகர்களை மெய்மறக்க வைத்தது. சிறப்பு விருந்தினர்களாக பாடகர் சீர்காழி சிவசிதம்பரம்,ஜட்ஜ் திரு.ஹரி பரந்தாமன் ,நடிகை சுலக்ஷனா, நட்டுவாங்க வித்வான் குத்தலாம் செல்வம்,கீழ்க்கட்டளை ரவீந்திரபாரதி பள்ளி நிர்வாகி ஹேமலதா போன்றவர்கள் கலந்து கொண்டார்கள்.அனைவரும்  மதுமிதாவின் நாட்டியத்திக் கண்டு வியந்து போனார்கள். நிகழ்சியில் பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் பேசுகையில்”குமாரி மதுமிதா விற்கு இது அரங்கேற்றம் போல் தெரியவில்லை .பல மேடைகளில் ஆடி அனுபவம் பெற்றவர...
சென்னையில் ஐபிஎல்! முடிந்தால் நடத்திப்பார் !வேல் முருகன் ஆவேசம்!.

சென்னையில் ஐபிஎல்! முடிந்தால் நடத்திப்பார் !வேல் முருகன் ஆவேசம்!.

HOME SLIDER, NEWS, செய்திகள்
காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கவே ஐபிஎல் நடத்தப்படுகிறது.எங்க ஸ்லீப்பர் செல்கள் சிதம்பரம் ஸ்டேடியத்துக்குள் புகுந்து போட்டிகளை நடத்தவிட மாட்டார்கள் அத்துடன்  சென்னை அணி வீரர்கள் வெளியே செல்லும்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. விவசாயிகள், அரசியல் கட்சியினர், மாணவர்கள் என பல தரப்பினரும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், போராட்டங்களும் வலுத்துள்ளன. இந்நிலையில், ஐபிஎல் 11வது சீசன் நேற்று முன் தினம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. சென்னை கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. ...
தமிழ் திரையுலகினர் சார்பில் மவுன போராட்டம்! – ஹை லைட்ஸ்!

தமிழ் திரையுலகினர் சார்பில் மவுன போராட்டம்! – ஹை லைட்ஸ்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நியாயமாக போராடும் மக்களின் உணர்வுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்க வேண் டும் என்று தமிழ் திரையுலகினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர் லைட் ஆலையை மூடக் கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத் தில் நேற்று மவுன போராட்டம் நடந்தது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில் தென்னிந் திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி அமைப்பு, இயக்குநர் கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, சின்னத்திரை நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட திரைப்பட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தை தொடங்கி வைத்த நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசியதாவது: மக்களுக்கான தே...
மான்வேட்டையாடி ஜெயிலுக்கு போன சல்மான்கானுக்கு ஜாமீன்!

மான்வேட்டையாடி ஜெயிலுக்கு போன சல்மான்கானுக்கு ஜாமீன்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அரியவகை மான்களை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் உள்பட 5 பேர் மீது ஜோத்பூர் முதன்மை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் துஷ்யந்த் சிங் என்ற உள்ளூர்வாசியும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்ட நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் நீலம், சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் உள்ளூர்வாசியான துஷ்யந்த் சிங் ஆகிய அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து சல்மான்கான் உடனடியாக ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் அவருக்கு ஜாமீன் கேட்டு அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று வ...
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதிய வண்ணச் சீருடை! செங்கோட்டையன் தகவல்

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதிய வண்ணச் சீருடை! செங்கோட்டையன் தகவல்

NEWS, செய்திகள்
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதிய வண்ணச் சீருடைகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறை அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் சீருடையில் மாற்றம் செய்த தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி அரசுப் பள்ளிகளில் பயிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சாம்பல் நிற முழுக்கால் சட்டை, இளஞ்சிவப்பு நிறக் கோடிட்ட மேல் சட்டை அணிய வேண்டும். 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் கருநீல முழுக்கால் சட்டையும், கருநீலக் கோடிட்ட மேல் சட்டை அணிய வேண்டும். அதேசமயம் மாணவிகள் கருநீலக் கோடிட்ட மேல் கோட்டு கூடுதலாக அணிய வேண்டும். 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச...