புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

‘கதம் கதம்’ தயாரிப்பாளர் உருவாக்கும் ‘எ ஸ்டோரி’ வெப் சீரிஸ்..!

‘கதம் கதம்’ தயாரிப்பாளர் உருவாக்கும் ‘எ ஸ்டோரி’ வெப் சீரிஸ்..!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
சினிமா, சீரியல் இவற்றை தாண்டி குறும்படங்கள் ஒருபக்கம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. தற்போது இவற்றின் இன்னொரு வடிவமாக வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பரவலாக வரவேற்பை பெற ஆரம்பித்துள்ளன.. இனிவரும்  காலங்களில் வெப் சீரிஸ்கள் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என்பது உறுதி. அந்தவகையில் ‘எ ஸ்டோரி’ (A Story) என்கிற வெப் சீரிஸ் விரைவில் வெளியாக இருக்கிறது.. நிமேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் நாயகியாக ஸ்ரீனிகா என்பவர் நடித்துள்ளார்.  இந்த படத்தின் இயக்குனர் நிமேஷ் 'மல்லி' என்ற குறும்படத்திற்காக மாநில மற்றும் தேசிய விருதுளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  'அப்பு மூவிஸ்' நிறுவனம் சார்பில் பாபு தூயவன் இந்த வெப் தொடரை தயாரித்துள்ளார். இந்த நிறுவனம் ஏற்கனவே நட்டி நடராஜ் நடித்த கதம் கதம் மற்றும் இட்லி ஆகிய படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவ...
குமாரி மதுமிதாவின் அபார நாட்டிய அரங்கேற்றம்….வியந்து போன வி.ஐ.பி.கள்..!!.

குமாரி மதுமிதாவின் அபார நாட்டிய அரங்கேற்றம்….வியந்து போன வி.ஐ.பி.கள்..!!.

NEWS, செய்திகள்
பிரபல தொழிலதிபர் ஜி.வினோத்குமார்-அனந்தநாயகி தம்பதியரின் மகள் குமாரி மதுமிதா வின்(வயது 13) பரத நாட்டிய அரங்கேற்றம் சென்னை முத்தமிழ் பேரவை டி .என். ராஜரத்தினம்  கலையரங்கில் சமீபத்தில் வெகு விமர்சையாக நடந்தது. மதுமிதாவின் நாட்டிய குரு .ஸ்ரீமதி வெங்கட் தலைமையில் திருமதி.ரோஷினி கணேஷ் ஏழு விதமான பாடல்களைப் பாடியதற்கு மதுமிதாவின் நாட்டியம் ஒவ்வொன்றும் ரசிகர்களை மெய்மறக்க வைத்தது. சிறப்பு விருந்தினர்களாக பாடகர் சீர்காழி சிவசிதம்பரம்,ஜட்ஜ் திரு.ஹரி பரந்தாமன் ,நடிகை சுலக்ஷனா, நட்டுவாங்க வித்வான் குத்தலாம் செல்வம்,கீழ்க்கட்டளை ரவீந்திரபாரதி பள்ளி நிர்வாகி ஹேமலதா போன்றவர்கள் கலந்து கொண்டார்கள்.அனைவரும்  மதுமிதாவின் நாட்டியத்திக் கண்டு வியந்து போனார்கள். நிகழ்சியில் பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் பேசுகையில்”குமாரி மதுமிதா விற்கு இது அரங்கேற்றம் போல் தெரியவில்லை .பல மேடைகளில் ஆடி அனுபவம் பெற்றவர...
சென்னையில் ஐபிஎல்! முடிந்தால் நடத்திப்பார் !வேல் முருகன் ஆவேசம்!.

சென்னையில் ஐபிஎல்! முடிந்தால் நடத்திப்பார் !வேல் முருகன் ஆவேசம்!.

HOME SLIDER, NEWS, செய்திகள்
காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கவே ஐபிஎல் நடத்தப்படுகிறது.எங்க ஸ்லீப்பர் செல்கள் சிதம்பரம் ஸ்டேடியத்துக்குள் புகுந்து போட்டிகளை நடத்தவிட மாட்டார்கள் அத்துடன்  சென்னை அணி வீரர்கள் வெளியே செல்லும்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. விவசாயிகள், அரசியல் கட்சியினர், மாணவர்கள் என பல தரப்பினரும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், போராட்டங்களும் வலுத்துள்ளன. இந்நிலையில், ஐபிஎல் 11வது சீசன் நேற்று முன் தினம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. சென்னை கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. ...
தமிழ் திரையுலகினர் சார்பில் மவுன போராட்டம்! – ஹை லைட்ஸ்!

தமிழ் திரையுலகினர் சார்பில் மவுன போராட்டம்! – ஹை லைட்ஸ்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நியாயமாக போராடும் மக்களின் உணர்வுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்க வேண் டும் என்று தமிழ் திரையுலகினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர் லைட் ஆலையை மூடக் கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத் தில் நேற்று மவுன போராட்டம் நடந்தது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில் தென்னிந் திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி அமைப்பு, இயக்குநர் கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, சின்னத்திரை நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட திரைப்பட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தை தொடங்கி வைத்த நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசியதாவது: மக்களுக்கான தே...
மான்வேட்டையாடி ஜெயிலுக்கு போன சல்மான்கானுக்கு ஜாமீன்!

மான்வேட்டையாடி ஜெயிலுக்கு போன சல்மான்கானுக்கு ஜாமீன்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அரியவகை மான்களை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் உள்பட 5 பேர் மீது ஜோத்பூர் முதன்மை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் துஷ்யந்த் சிங் என்ற உள்ளூர்வாசியும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்ட நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் நீலம், சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் உள்ளூர்வாசியான துஷ்யந்த் சிங் ஆகிய அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து சல்மான்கான் உடனடியாக ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் அவருக்கு ஜாமீன் கேட்டு அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று வ...
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதிய வண்ணச் சீருடை! செங்கோட்டையன் தகவல்

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதிய வண்ணச் சீருடை! செங்கோட்டையன் தகவல்

NEWS, செய்திகள்
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதிய வண்ணச் சீருடைகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறை அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் சீருடையில் மாற்றம் செய்த தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி அரசுப் பள்ளிகளில் பயிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சாம்பல் நிற முழுக்கால் சட்டை, இளஞ்சிவப்பு நிறக் கோடிட்ட மேல் சட்டை அணிய வேண்டும். 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் கருநீல முழுக்கால் சட்டையும், கருநீலக் கோடிட்ட மேல் சட்டை அணிய வேண்டும். அதேசமயம் மாணவிகள் கருநீலக் கோடிட்ட மேல் கோட்டு கூடுதலாக அணிய வேண்டும். 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச...
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தல ரசிகர்!

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தல ரசிகர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கடந்த 4-ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் 71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 41 பதக்கங்களை வென்று முதலிடத்திலும், 23 பதக்கங்களை பெற்று இங்கிலாந்து இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா, இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கங்களை பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இந்தியா ஒரு தங்க பதக்கத்தை வென்றுள்ளது. இந்த போட்டியில் ஆடவர் 77கிலோ பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்ட தமிழகத்தின் வேலூரை சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம், முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு மூன்றாவது தங்கத்தை சதீஸ்குமார் பதிவு செய்துள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்க பதக்கத்தை வென்றுள்ளார். தமிழக வீரரின் இந்த சாதனைக்கு நமது இந்தியாவின்...
நடிகையர் திலகம் படத்தில் ’மதுரவாணி’யாக சமந்தா!

நடிகையர் திலகம் படத்தில் ’மதுரவாணி’யாக சமந்தா!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
நடிகையர் திலகம் படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் குறித்த தகவலுடன் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாராகிவருகிறது. இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துவருகின்றனர். பத்திரிகை நிருபராக நடிக்கும் சமந்தா, தனக்கான படப்பிடிப்புக் காட்சிகள் முடிவடைந்துவிட்டதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “மகாநதியில் எனக்கான படப்பிடிப்புக் காட்சிகளில் நடித்துமுடித்துவிட்டேன். சாவித்திரியின் வாழ்க்கை சம்பந்தபட்ட படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். நன்றி நாக் அஸ்வின் சார்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். தற்போது இந்தப் படத்தில் சமந்தா மதுரவாணி...
தமிழ் திரைத்துறை வேலைநிறுத்தம் – 2018!- சில சந்தேகங்களும், பதில்களும்!

தமிழ் திரைத்துறை வேலைநிறுத்தம் – 2018!- சில சந்தேகங்களும், பதில்களும்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
VPF எனும் வார்த்தை இவ்வளவு பிரபலம் ஆகும் என்று ஆரம்பத்தில் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு துறையில் இருக்கும் தொழில்நுட்ப விசயங்கள் அல்லது அதனுள் உள்ள குளறுபடிகளை அதன் பயனீட்டாளர்களுக்கு தெரியப்படுத்தித்தான் போராட வேண்டும் என்பது அவசியம் அல்ல என்றாலும், நாடி நரம்பெல்லாம் சினிமா ஊறிப்போய் உள்ள நமக்கு அது சிறிது காலம் தவிர்க்கப்படும் போது, அதைப் பற்றி தெளிவுபடுத்த பல தளங்கள் முற்பட்டதால் இந்த அளவுக்கு பிரபலம் ஆகி விட்டது. ஆனால் இந்த ஒரு வார்த்தைக்குப் பின் மறைந்திருந்த பல விசயங்கள் இன்று வெளிவந்துள்ளதும் திரைத்துறைக்கு பெரும் நன்மையே. சினிமா உருவான காலகட்டம் முதல் பலதரப்பட்ட வடிவில் வரவு செலவு இருந்ததால் தயாரிப்பாளர், வினியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர் இடையே எந்த வரவு செலவு, யார் யாருக்கு என்ற வரைமுறை இருந்தது. இடையே காலமாற்றத்தில் உருவான தொழில்நுட்ப மாற்றங்களை, முறைப்பட...
தேசியகொடியை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: சென்னை ஆட்சியர் எச்சரிக்கை

தேசியகொடியை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: சென்னை ஆட்சியர் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, செய்திகள்
 தேசியகொடி அல்லது இந்திய அரசமைப்பு சட்டத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொது இடத்தில் தேசிய கொடியை அவமதிப்பது, சேதப்படுத்துவது போன்ற செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பொது இடத்தில் தேசியகொடி அல்லது இந்திய அரசமைப்பு சட்டத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கொடியை அல்லது இந்திய அரசியலைப்புச் சட்டத்துடன் தொடர்புடைய பகுதியை எரிக்கிற, சிதைக்கிற, அழிக்கிற, மிதிக்கிற அல்லது அவமதிக்கிற செயலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று ஆட்சியர் எச்ச...