தங்கரதம் – விமர்சனம்
நடிகர்கள் : வெற்றி,அதிதி கிருஷ்ணா, சவுந்தர்ராஜன் , 'ஆடுகளம்' நரேன், 'மொட்டை'ராஜேந்திரன் , சுவாமிநாதன் , சாண்டில்யா மற்றும் பலர்.
இயக்கம் : பாலமுருகன்.
காய்கறி லோடுவேன் டிரைவர்களின் வாழ்க்கை முறையும் அவர்களது காதலும் , கோபமும் , தாபமும் தான் "தங்க ரதம் " படக்கரு.
கதை : தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய மார்க்கெட்டான ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு சுத்துப்பட்டு கிராமங்களில் இருந்து, போட்டி போட்டுக் கொண்டு காய்கறி லோடு அடிக்கும் ஒரே ஊரைச் சேர்ந்த டெம்போ வேன் டிரைவர்கள் செல்வாவும் , பரமனும் .இதில் பரமனின் டெம்போ அவருக்கு சொந்தமானது .செல்வாவின் டெம்போ வேனுக்கு அவரது ஒன்று விட்ட சித்தப்பா உரிமையாளர்.
தொழில் போட்டியால் பகையாளியாக திரியும் பரமனின் தங்கையை செல்வா ., பரமனின் தங்கை அவர்., என்பது தெரிவதற்கு முன்பிருந்தே உயிருக்கு உயிராக காதலிக்கிறார்.
அந்த காதல் பூத்து காய்த்து , கசிந்துருகி ,கனிந்தத...
