ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன் 2ம் தேதி ரிலீஸ்!
*சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும், ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன் 2, 2023 அன்று வெளியாகிறது*
ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கும் ’வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன்2, 2023 அன்று வெளியாக இருப்பதை தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
மிக அரிதாக, படம் குறித்தான அறிவிப்பிலேயே வெற்றியைப் பதிவுசெய்யும் சில கூட்டணி உள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ், யூத் ஐகான் ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் ‘மரகத நாணயம்’ புகழ் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் ஆகியோர் ஒன்றிணைந்திருக்கும் ‘வீரன்’ பட வெளியீடும் இந்த வெற்றியை முன்கூட்டிய தெளிவாக காட்டியுள்ளது. சரியான திட்டமிடல் மற்றும் சரியான நேரத்தில் படத்தை முடித்தது என ஒட்ட...









