புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

கதாநாயகி ஆக நீச்சல் உடையில் வாய்ப்பு தேடும் டாப்சி தங்கை..!

கதாநாயகி ஆக நீச்சல் உடையில் வாய்ப்பு தேடும் டாப்சி தங்கை..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
ஆடுகளம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் பட உலகில் பிரபலமானவர் டாப்சி. வந்தான் வென்றான், காஞ்சனா-2, வைராஜா வை படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு இந்தி திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். பிங்க், நாம் சபானா இந்தி படங்கள் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டும் பெற்றுள்ளார். டாப்சிக்கு ஷாகன் பன்னு என்ற தங்கை இருக்கிறார். இவர் 2016-ல் நடந்த இந்திய அழகி போட்டியில் பங்கேற்றவர். ஷாகன் பன்னுவும் நடிக்க வருகிறார். இதற்காக நடிப்பு, நடனங்களை கற்கிறார். தங்கைக்காக டாப்சி கதை கேட்டு வருவதாகவும் விரைவில் புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகமாவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. சினிமா வாய்ப்பு பிடிப்பதற்காக ஷாகன் பன்னு நீச்சல் உடையில் இருப்பது போன்ற தனது கவர்ச்சி படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த படம் வைரலாகி வருகிறது....
புழுதி புயல், இடி–மின்னலுடன் மழை: 5 மாநிலங்களில் 124 பேர் சாவு

புழுதி புயல், இடி–மின்னலுடன் மழை: 5 மாநிலங்களில் 124 பேர் சாவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முன்பெல்லாம் பாலைவன நாடுகளில்தான் புழுதி புயல் குறித்து கேள்வி பட்டிருப்போம். அல்லது ஹாலிவுட் படங்களில் இப்படி காட்சிகளை பார்த்திருப்போம்.  ஆனால் பருவ நிலை மாற்றங்களால் இப்போது நமது நாட்டிலும் இதுபோன்ற இயற்கை சீற்றங்களை பார்க்கும் அதிர்ச்சிகள் நடை பெறுகிறது. சமீபத்தில் வட மாநிலங்களில் கடுமையான புழுதி புயல் தன் கோர முகத்தை காட்டியது. தெலுங்கானா, உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் இதைப்போல இடியுடன் கூடிய பெருமழை பெய்தது. இந்த 5 மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை மற்றும் புழுதி புயலில் சிக்கியும், மின்னல் தாக்கியும் கடந்த 2 நாட்களில் 124 பேர் உயிரிழந்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 73 பேரும், ராஜஸ்தானில் 35 பேரும் பலியாகி இருப்பதாக உளதுறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மாவட்ட...
அவதூறு வழக்கு: நடிகர் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக நெல்லை கோர்ட்டு உத்தரவு

அவதூறு வழக்கு: நடிகர் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக நெல்லை கோர்ட்டு உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
நடிகர் எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியது தொடர்பாக சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் எஸ்.வி.சேகர் மீது நெல்லையை சேர்ந்த பத்திரிகையாளர் கோபால்சாமி சார்பில், நெல்லை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு ராமதாஸ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட்டு ராமதாஸ் இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூன் மாதம் 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் எஸ்.வி.சேகர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அதற்கு அவருக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டார்....
மே 9 ஆம் தேதி காலா இசை..!

மே 9 ஆம் தேதி காலா இசை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினிகாந்த் நடித்தவுள்ள 'காலா 'படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 9 ஆம் தேதி சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இப்படத்தினை தனுஷ் தனது 'வுண்டர்பார் பிலிம்ஸ்' மூலம் தயாரித்துள்ளார். கபாலி மற்றும் மெட்ராஸ் பட புகழ் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். சந்தோஷ் நாராயணன் தனது இசைக்குழுவினருடன் இணைந்து காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார். இந்த இசை வெளியீட்டு விழாவானது நேரலையாக டுவிட்டர், பேஸ்புக், யூடியூபில் ஒளிபரப்பப்பட உள்ளது. வுண்டர்பார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் அதன் டிஜிட்டல் பங்குதாரரான டிவோ (DIVO) நிறுவனமும் இணைந்து காலா படத்தின் பாடல்களையும், இசை நிகழ்ச்சியினை நேரடியாக இணையதளங்களில் வெளியிட உள்ளனர். இசை வெளியீட்டு விழாவின் நேரலையை கீழ்கண்ட லிங்க்-களில் க...
சினிமா இசை மட்டும் தான்  மக்களுக்கான இசை என்ற பிம்பத்தை  “மெட்ராஸ் மேடை” உடைக்கும் – இயக்குநர் பா.இரஞ்சித்

சினிமா இசை மட்டும் தான் மக்களுக்கான இசை என்ற பிம்பத்தை “மெட்ராஸ் மேடை” உடைக்கும் – இயக்குநர் பா.இரஞ்சித்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
இந்தியாவில் முதன்முறையாக 7 பேண்ட்ஸ் இசைக்கலைஞர்கள் பங்குபெறும் “மெட்ராஸ் மேடை - 2018” பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி. தமிழகத்தில் சினிமா தவிர்த்த இசையும் இசைக்கலைஞர்களும் கொண்டாடப்படுவதில்லை. ஆனால் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் நடத்திய “THE CASTELESS COLLECTIVE” திறந்தவெளி இசை நிகழ்ச்சி அதை மாற்றியது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிய கேஸ்ட்லெவ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு விவாதங்களையும் உருவாக்கியது. https://youtu.be/RbwZhHjjbQI அதைத்தொடர்ந்து இந்தியாவில் முதன்முறையாக 7 பேண்ட்ஸ் மற்றும் பல தனியிசைக்கலைஞர்கள் பங்குபெறும் மெட்ராஸ் மேடை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறது மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனம். சென்னை கீழ்ப்பாக்கம் சி.எஸ்.ஐ. பெயின் பள்ளி வளாகத்தில் மே மாதம் 19ம் தேதி (19.05.2018) சன...
இயக்குனர் T.ராஜேந்தர் வெளியிட்ட பூர்ணாவின் “ குந்தி “ பட டிரைலர்..!

இயக்குனர் T.ராஜேந்தர் வெளியிட்ட பூர்ணாவின் “ குந்தி “ பட டிரைலர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
அன்னை  திரைக்களம் சார்பில்  மே.கோ.உலகேசு குமார், மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இணைந்து தயாரிக்க SFF  TV   வழங்கும் படம் “ குந்தி “.  இந்த படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பூர்ணா ஜோடியாக அபினவ் நடித்திருக்கிறார். ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபிமன்யூ சிங் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் பேபி தன்வி, பேபி கிருத்திகா இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பலர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலரை இயக்குனரும், நடிகருமான T.ராஜேந்தர் வெளியிட்டார்....
சுமார் 200 திரைகளில் ரிலீசாகும் அல்லு அர்ஜுன் படம்

சுமார் 200 திரைகளில் ரிலீசாகும் அல்லு அர்ஜுன் படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இவரது நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அல்லு அர்ஜுன் தற்போது வம்சி இயக்கத்தில் நடித்துள்ள தெலுங்குப் படம் ‘நா பேரு சூர்யா நா இல்லு இண்டியா’. இதில் அல்லு அர்ஜுன் ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் சரத்குமார், அர்ஜுன், நதியா, தாகூர் அனூப்சிங், ஹரீஷ் உத்தமன், கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர். விஷால் - சேகர் இசையமைக்க, ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் ராணுவ வீரராக அல்லு அர்ஜுன் நடிக்கிறார். என் பேரு சூர்யா என் வீடு இந்தியா என்ற தலைப்பில் தமிழில் வெளியாகும் இந்த படம்  ரிலீசாக இருக்கிறது. இதுவரை 207 காட்சிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடும் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தலைவர் பி சக்திவேலன் கூற...
“சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்தது பெருமை” -, கீர்த்தி சுரேஷ்

“சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்தது பெருமை” -, கீர்த்தி சுரேஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சாவித்திரியின் வாழ்க்கை, தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் சாவித்திரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேசும், ஜெமினிகணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். சமந்தாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது:- “பெண் என்பவள் பலம் பொருந்தியவள் என்பதற்கும், நினைத்ததை சாதித்து காட்டுவாள் என்பதற்கும் உதாரணமாக வாழ்ந்தவர் நடிகை சாவித்திரி. அவரது கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியுமா? என்று தயங்கினேன். இது எனது சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்று பலரும் உற்சாகம் அளித்ததால் ஒப்புக்கொண்டேன். சாவித்திரி சம்பந்தமான புத்தகங்களை படித்தும், அவரது மகள் சாமுண்டீஸ்வரியிடம் விவரங்கள் சேகரித்தும் பல விஷயங்கள...
“தலைகீழாக நிற்கும் யோகாசனம் உடலுக்கு வலிமை தரும்” -நடிகை அமலாபால்

“தலைகீழாக நிற்கும் யோகாசனம் உடலுக்கு வலிமை தரும்” -நடிகை அமலாபால்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல், ரட்சகன் படங்களிலும் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடிக்கும் அமலாபால் சமீப காலமாக யோகாசன பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். விசேஷ பயிற்சியாளரை வைத்து யோகாசனம் கற்கிறார். ஒரு மரத்தின் அருகில் தலைகீழாக நின்று சிரசாசனம் செய்யும் படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அமலாபால் கூறியிருப்பதாவது:- “கஷ்டமான வேலைகளை செய்யும்போது தலைகீழாக நின்றாலும் நடக்காது என்று சொல்ல கேட்டு இருக்கிறோம். தலைகீழாக நிற்பது உடலுக்கு எவ்வளவு முக்கியமானது, பயன் அளிக்க கூடியது என்பதை இப்போது உணர்ந்து இருக்கிறேன். யோகாவில் தலைகீழாக நிற்கும் சிரசாசனம் போடுவது மிகவும் கஷ்டமானது. எல்லோராலும் எளிதாக அதை செய்ய முடியாது. கடும் பயிற்சிகள் மூலம் மட்டுமே செய்ய முடியும். இந்த ஆசனத்தை நான் ரொம்ப நாட்களாக கற்றேன். இதற்காக பயிற்சியாளர் வைத்து இருந்தேன். முதலில் சுவரை தாங்கலாக வைத்து தலைகீழாக நின்...
கலிபோர்னியா இசைத் திருவிழாவில் நயன்தார- விக்னேஷ் சிவன் செல்பி

கலிபோர்னியா இசைத் திருவிழாவில் நயன்தார- விக்னேஷ் சிவன் செல்பி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன்பு ரொம்பவே யோசிக்கிறார். ஒரு பிரபல கதாநாயகன் அளவுக்கு ‘மார்க்கெட்’ உருவாகி விட்டதால், இந்த எச்சரிக்கை. தென்னிந்திய திரையுலகின் முதன்மை கதாநாயகி என்ற அந்தஸ்துடன் இருக்கும் அவர், அந்த அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறார். வருகிற பட வாய்ப்புகளை எல்லாம் அவர் ஏற்பதில்லை. தனக்கு பொருந்துகிற கதைகளையே தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அவர் இப்படி கதைகளை தேர்வு செய்து நடிப்பதால், “நயன்தாரா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்” என்று செய்தி பரவுகிறது. அதை நிரூபிப்பது போலவே நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவருமே தங்கள் காதலை ஒவ்வொரு மேடையிலும் உறுதி செய்து வருகிறார்கள். ஒவ்வொரு மேடையிலும் ஒருவரையொருவர் புகழ்ந்து வருகிறார்கள். வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றிய படங்களை சமூகவலை தளங்களில் பதிந்து வருகிறார்கள் நயன்தாராவின் ஒரே பயம், திருமணம் செய்து...