தமிழ் ரசிகர்களுக்கு மட்டு, ‘மெர்குரி’ படத்தைக் காண்பிக்க இயலவில்லையே! – கார்த்திக் சுப்புராஜ் வேதனை!
கடந்த 45 நாட்களுக்கும் மேலாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், சினிமா ஸ்டிரைக்கின் ஒரு பகுதியாக புதுப்படங்களை வெளியிடக்கூடாது என அறிவித்துள்ள நிலையில் மெர்க்குரி' என் தாயகம்... தமிழகம் அல்லாமல் உலகெங்கும் 1000 திரையரங்குகளில் பெரிய ரிலீஸை சந்தித்திருக்கிறது என்று பெருமையும் வருத்தமும் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
பிரபுதேவா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 30 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் வெளியாகியுள்ள சைலன்ட் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள திரைப்படம் மெர்க்குரி'. மார்ச் மாதம் வெளிவந்த டீசரில் படம் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர். இதற்கிடையில் ஆரம்ப நிலையில் இருந்த தமிழ் சினிமா ஸ்டிரைக் வலுத்தது. பல பேச்சுவார்த்தைக்குப் பிறகும் படத்தை ஸ்டிரைக் முடியாமல் ரிலீஸ் செய்வது ஏற்புடையதாய் இருக்காது எனத் தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டம...









