செவ்வாய்க்கிழமை, ஜூலை 14
Shadow

Author: Kodanki

‘வாய்தா’ படத்தின் ஆடியோவை இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகி சி மகேந்திரன் வெளியிட்டார்!

‘வாய்தா’ படத்தின் ஆடியோவை இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகி சி மகேந்திரன் வெளியிட்டார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    புதுமுகங்கள் நடிப்பில் தயாரான 'வாய்தா' படத்தின் ஆடியோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி மகேந்திரன் வெளியிட்டார். வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. வினோத்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் 'வாய்தா'. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் ஓம் பிலிம்ஸ் வெளியிடுகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி. மகேந்திரன் அவர்களின் புதல்வன் புகழ் மகேந்திரன் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை பவுலின் ஜெசிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் பேராசிரியர் மு. ராமசாமி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஆர். ஜே. சேது முருகவேல் அங்காரகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சி. லோகேஸ்வரன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீடு இ...
இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள ‘உலகம்மை’, திருநெல்வேலியை மையமாகக் கொண்ட விறுவிறுப்பான வாழ்வியல் திரைப்படம்

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள ‘உலகம்மை’, திருநெல்வேலியை மையமாகக் கொண்ட விறுவிறுப்பான வாழ்வியல் திரைப்படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் பிரகாஷ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள 'உலகம்மை', திருநெல்வேலியை மையமாகக் கொண்ட விறுவிறுப்பான வாழ்வியல் திரைப்படம் 'சாதி சனம்', 'காதல் F.M.புகழ் இயக்குநர் விஜய் பிரகாஷ், தமிழ் எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் பிரபலமான நாவலான 'ஒரு கோட்டுக்கு வெளியே'-வை அடிப்படையாகக் கொண்டு 'உலகம்மை' திரைப்படம் மூலம் தனது தடத்தை ஆழமாக பதிக்கவுள்ளார். மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி பேனரில் டாக்டர் வீ .ஜெயப்பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். நெல்லை மாவட்ட பின்னணியில் 1970-களில் கதை நடக்கிறது. '96' புகழ் கவுரி கிஷன் மற்றும் வெற்றி மித்ரன் முன்னணி வேடங்களில் நடித்துள்ள 'உலகம்மை' படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். நடிகர்கள் மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர்,பிரணவ் அருள்மணி, காந்தராஜ், ஜேம்ஸ்,சாமி,ஜெயந்திஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
  மன்னார் வளைகுடா மற்றும் உள்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் இன்றும் , நாளையும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள வங்க கடல் பகுதிகளில...
இலங்கைக்கு 2,70,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசலை வழங்கியது இந்தியா!

இலங்கைக்கு 2,70,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசலை வழங்கியது இந்தியா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவு பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல மணி நேர தொடர் மின்வெட்டால் மக்கள் துயரங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 36,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டன் டீசல் ஆகியவற்றை இலங்கைக்கு இந்தியா வழங்கி உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. சரக்கு கப்பல் மூலம் இது விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு உதவும் நடவடிக்கையாக இந்தியா இலங்கைக்கு வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டாலர் எண்ணெய்க் கடனின் ஒரு பகுதியாக இந்த எரிபொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமது நாட்டுக்கு இந்தியா பெரிய  அளவில் உதவி செய்துள்ளதாக பிரதமர் மோடிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் அமைச்சருமான, அர்ஜூன ரணதுங்கா பாராட்டு தெரிவ...
வெங்கட் பிரபுவின் அடுத்த படம் ‘என்சி22’!

வெங்கட் பிரபுவின் அடுத்த படம் ‘என்சி22’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் ‘மன்மத லீலை’. வெங்கட் பிரபுவின் 10 வது திரைப்படமான இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்து ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் உள்ளிட் நடிகைகள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் சக கலைஞர்கள் பற்றி விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது....
வைரலாகும் தளபதி 66 பூஜை!

வைரலாகும் தளபதி 66 பூஜை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். விறுவிறுப்பாக இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய்  நடிக்கவுள்ளார். 'தளபதி 66' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள நடிகை குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி இப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். இந்நி...
நானும் விஜய் ரசிகர் தான்.. வைரலாகும் ஷாருக்கான் பதிவு!

நானும் விஜய் ரசிகர் தான்.. வைரலாகும் ஷாருக்கான் பதிவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக திகழும் விஜய் 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். வருகிற ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் திரைப்படம் வெளியாகவுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. அதிரடி சண்டை காட்சிகள் கொண்ட அந்த டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'பீஸ்ட் 'படத்திற்கு பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது, இயக்குனர் அட்லியை போல நானும் விஜய் ரசிகர் தான். 'பீஸ்ட்' படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவி...
விஜயின் பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டும் – போர்க்கொடி தூக்கிய இஸ்லாமிய அமைப்பு

விஜயின் பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டும் – போர்க்கொடி தூக்கிய இஸ்லாமிய அமைப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை, ‘நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பீஸ்ட் திரைப்படம் வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து இருப்பதாக கூறி குவைத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வருவதை வழக்கமாகக் கொண்டு, இஸ்லாமியர்கள் என்ற தீவிரவாதிகள் என்ற தோற்றத்தை திரைத்துறையினர் உருவாக்கி வருகின்றனர். தங்களது சாதி அடையாளம் மற்றும் சாதி தலைவர்களின் பெயர்களைக...
ஆகஸ்ட் 12ல் ரிலீசாகும் சமந்தாவின் “யசோதா”

ஆகஸ்ட் 12ல் ரிலீசாகும் சமந்தாவின் “யசோதா”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  Sridevi Movies தயாரிப்பில் சமந்தா நடிக்கும் ‘யசோதா’ திரைபடம் ஆகஸ்ட் 12 வெளியாகிறது ! தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்ணனி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, தன் தனிச்சிறப்பு மிக்க நடிப்பை வெளிப்படுத்தி “ஃபேமிலிமேன் 2” தொடர் மூலம் இந்திய அளவில் சிறந்த நடிகையாக, நட்சத்திர அந்தஸ்தை அடைந்துள்ளார். நடிகை சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ‘யசோதா’ திரைப்படத்தினை Sridevi Movies சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார். ஹரி-ஹரீஷ் கூட்டணி இப்படத்தில் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். இப்படம் வரும் ஆகஸ்ட் 12 உலகமுழுதும் பிரமாண்டமாக வெளியாகிறது. இது குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ணபிரசாத் கூறியதாவது.., நடிகை சமந்தா “யசோதா” படத்தில் நடிப்பில் மட்டுமின்றி சண்டைக்காட்சிகளிலும் அசத்தியுள்ளார். ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ...
மகனின் முகத்தில் மிளகாய்ப் பொடி பூசி தண்டித்த தாய் – வைரலாகும் வீடியோ!

மகனின் முகத்தில் மிளகாய்ப் பொடி பூசி தண்டித்த தாய் – வைரலாகும் வீடியோ!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள கோடாட் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது 15 வயது மகன் கஞ்சாவுக்கு அடிமையானது தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த பெண் தன் மகனை கம்பத்தில் கட்டி வைத்து, போதைக்கு அடிமையானதற்காக அவனை தண்டிக்க கண்களில் மிளகாய் பொடியை தூவியுள்ளார். மேலும் மற்றொரு பெண்ணின் உதவியுடன், முகம் முழுவதும் மிளகாய்ப் பொடியை பூசினார். கண்களில் ஏற்பட்ட எரிச்சலால் சிறுவன் அலறித்துடித்தான். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதை கைவிடுமாறு பெண்ணிடம் கேட்டுள்ளனர். ஆனால், தனது மகன் கஞ்சா பழக்கத்தை கைவிடுவதாக உறுதி அளித்தால்தான் தண்டனையை கைவிடுவேன் என்று காட்டமாக தெரிவித்துள்ளார். தான் கஞ்சா புகைக்கும் பழக்கத்தை கைவிடுவதாக சிறுவன் உறுதியளித்ததை அடுத்து அந்த பெண் தனது மகனின் கைகட்டுகளை அவிழ்த்துவிட்டார். இந்த காட்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக...