செவ்வாய்க்கிழமை, ஜூலை 14
Shadow

Author: Kodanki

மகனின் முகத்தில் மிளகாய்ப் பொடி பூசி தண்டித்த தாய் – வைரலாகும் வீடியோ!

மகனின் முகத்தில் மிளகாய்ப் பொடி பூசி தண்டித்த தாய் – வைரலாகும் வீடியோ!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள கோடாட் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது 15 வயது மகன் கஞ்சாவுக்கு அடிமையானது தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த பெண் தன் மகனை கம்பத்தில் கட்டி வைத்து, போதைக்கு அடிமையானதற்காக அவனை தண்டிக்க கண்களில் மிளகாய் பொடியை தூவியுள்ளார். மேலும் மற்றொரு பெண்ணின் உதவியுடன், முகம் முழுவதும் மிளகாய்ப் பொடியை பூசினார். கண்களில் ஏற்பட்ட எரிச்சலால் சிறுவன் அலறித்துடித்தான். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதை கைவிடுமாறு பெண்ணிடம் கேட்டுள்ளனர். ஆனால், தனது மகன் கஞ்சா பழக்கத்தை கைவிடுவதாக உறுதி அளித்தால்தான் தண்டனையை கைவிடுவேன் என்று காட்டமாக தெரிவித்துள்ளார். தான் கஞ்சா புகைக்கும் பழக்கத்தை கைவிடுவதாக சிறுவன் உறுதியளித்ததை அடுத்து அந்த பெண் தனது மகனின் கைகட்டுகளை அவிழ்த்துவிட்டார். இந்த காட்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக...
பீஸ்ட் திரைப்படதிற்கு தடை!

பீஸ்ட் திரைப்படதிற்கு தடை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் வெளியீட்டிற்கு தயாராகவுள்ள பீஸ்ட் திரைப்படத்தை குவைத் அரசு தடை செய்துள்ளது. வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி தடை விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்ச...
இயக்குனர் RK செல்வமணிக்கு சென்னை கோர்ட் திடீர் பிடிவாரண்ட்!

இயக்குனர் RK செல்வமணிக்கு சென்னை கோர்ட் திடீர் பிடிவாரண்ட்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பிரபல சினிமா இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே.செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தனர். அப்போது, பைனான்ஸ்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை போத்ரா தொடர்ந்தார். போத்ரா இறந்த பின்னர், இந்த வழக்கை அவரது மகன் ககன் போத்ரா நடத்தி வருகிறார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஆர்.கே.செல்வமணி மற்றும் அருள் அன்பரசு ஆகியோர் ஆஜராக வில்லை. அவர்கள் தரப்பு  வழக்கறிஞர்களும் ஆஜராக வில்லை. இதையடுத்து அவர்கள் இருவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வ...
டி.இமான் அவருடைய முன்னாள் மனைவி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்!

டி.இமான் அவருடைய முன்னாள் மனைவி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான். இவர் இசையில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல படங்களுக்கு இமான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் அவருடைய மனைவி மோனிகாவை பிரிந்து விட்டதாக அறிவித்தார். 2008-ஆம் ஆண்டு மோனிகா என்பவரை இமான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே விவாகரத்து செய்ததாக கூறப்பட்டு பிறகு டிசம்பர் இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில், டி.இமான் அவருடைய முன்னாள் மனைவி மோனிகா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக இமான் தாக்கல் செய்துள்ள மனுவில், "எனது இரண்டு மகள்களுடைய பாஸ்போர்டுகள் தன்னிடம் இருக்கிறது. ஆனால் மோனிகா அதை மறைத்து முறைகேடாக புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளா...
இளையராஜாவுக்கு விருது.. குவியும் பாராட்டுக்கள்!

இளையராஜாவுக்கு விருது.. குவியும் பாராட்டுக்கள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
இளையராஜா எ பியூட்டிபுல் பிரேக்கப் என்ற ஆங்கில படத்துக்கு இசையமைத்து இருந்தார். இந்தப் படத்தை பிரபல கன்னட பட டைரக்டர் அஜித் வாசன் உஜ்ஜினா இயக்கியுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த பட நிறுவனம் தயாரித்துள்ளது. இளையராஜாவுக்கு அவரது இசையில் 1422-வது படமாக இது தயாராகி உள்ளது. இந்தப் படத்தில், நாயகனாக கிரிஷ் நாயகியாக மாட்டில்டா ஆகியோர் நடித்துள்ளனர். லண்டனில் இருந்து ஒரு காதல் ஜோடி இந்தியா வருகிறது. இங்கு ஒரு வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்து விட்டு பிரிந்து விட நினைக்கின்றனர். அந்த வீட்டில் பேய் இருக்கிறது. அதன்பிறகு, அவர்கள் முடிவில் என்ன மாற்றங்கள் நடக்கிறது என்பது கதை. இரு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து தயாராகி உள்ளது. இந்தப் படம் நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்த படத்தின் பின்னனி இசைக்காக இளையராஜாவுக்கு சிறந்த இசைக்கான விருது கிடைத்து...
கிராமி விருது வென்ற இந்திய இசைக் கலைஞர் ரிக்கி கேஜ்ஜிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கிராமி விருது வென்ற இந்திய இசைக் கலைஞர் ரிக்கி கேஜ்ஜிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சர்வதேச இசை உலகின் உயரிய விருதாக கிராமி விருதுகள் கருதப் படுகின்றன. 2022-ம் ஆண்டுக்கான 64-வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்தது. இதில் இந்திய இசைக்கலைஞர்  ரிக்கி கேஜ் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பாடகி ஃபால்குனி ஷா  ஆகியோர் கிராமி விருதுகளை வென்று உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுக்கு பெருமை சேர்த்துள்ளனர். சிறந்த நியூ ஏஜ் ஆல்பம் பிரிவில் 'டெவைன் டைட்ஸ்'க்காக ஸ்டீவர்ட் கோப்லேண்டுடன் இணைந்து  இந்திய இசைக்கலைஞர் ரிக்கி கேஜ் கிராமி விருதை வென்றுள்ளார். சிறந்த குழந்தைகள் ஆல்பம் பிரிவில் கலர்புல் வேர்ல்ட் ஆல்பத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பாடகி ஃபால்குனி ஷா கிராமி விருதை வென்றுள்ளார். இந்நிலையில் டிவைன் டைட்ஸ் ஆல்பத்திற்காக கிராமி விருது பெற்ற ரிக்கி கேஜ்-க்கு பிரதமர்  மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ரிக்கி கேஜ் வெளியிட்...
பாலிவுட் நடிகர் வருண் தவான் வெளியிட்ட பீஸ்ட் பட இந்தி ட்ரைலர்

பாலிவுட் நடிகர் வருண் தவான் வெளியிட்ட பீஸ்ட் பட இந்தி ட்ரைலர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பீஸ்ட் படத்தின் இந்தி ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ’அதிரடியான #BeastHindiTrailer-ஐ அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. எப்போதும் விஜய் சாரின் தீவிர ரசிகன் நான்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.   https://youtu.be/0q7bKjLa0Nc
EX. மனைவிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பிரபல இசையமைப்பாளர் திடீர் வழக்கு!

EX. மனைவிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பிரபல இசையமைப்பாளர் திடீர் வழக்கு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை மறைத்து புதிய பாஸ்போர்ட் வாங்கிய முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரபல இசையமைப்பாளர் டி.இமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு மனைவி மோனிகாவிடமிருந்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற இசையமைப்பாளர் இமானுக்கு, குழந்தைகளைச் சந்திக்க குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. அப்போது இரு குழந்தைகளின் பாஸ்போர்ட்களையும் இமான் வைத்திருந்தார். இந்நிலையில், குழந்தைகளின் பாஸ்போர்ட்கள் தொலைந்து விட்டதாக தவறான தகவலை கூறி, புதிய பாஸ்போர்ட் பெற்ற முன்னாள் மனைவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி இமான் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அந்த மனுவில், ஏற்கெனவே பாஸ்போர்ட் உள்ள நிலையில், புதிய பாஸ்போர்ட் வாங்கியது சட்டவிரோதம் என்பதால், தனது மனைவிக்கு எதிராக நடவடிக...
நடிகர் ஆர்யா நடிக்கும் “கேப்டன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

நடிகர் ஆர்யா நடிக்கும் “கேப்டன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் ஆர்யா நடிக்கும் “கேப்டன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! நடிகர் ஆர்யா, டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை போன்ற தொடர்ச்சியாக அழுத்தமான கதையம்சங்கள் கொண்ட, பிளாக்பஸ்டர் திரைப்படங்களை வழங்கியதன் மூலம் புகழின் உச்சத்தை எட்டியுள்ளார். அவரது நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் கேப்டன் படத்திற்கு வர்த்தக வட்டாரங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன. “டெடி” என்ற பிரமாண்டமான படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர், இந்த ஃபர்ஸ்ட் லுக், பார்வையாளர்களை ஆச்சர்யத்தின் உச்சிக்கு இட்டு செல்லும் வகையில், அனைவரையும் ஈர்க்கும் படி அமைந்துள்ளது. நம்பமுடியாத ஆச்சர்யமான உண்மை என்னவென்றால், இந...
இலங்கையில் புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச உத்தரவு!

இலங்கையில் புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச உத்தரவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள். போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் அமல்படுத்தப்பட்ட 36 மணி நேர ஊரடங்கு இன்று காலை முடிவுக்கு வந்தது. இதற்கிடையே, இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இலங்கை அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நேற்று பதவி விலகினர். இதையடுத்து, இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்தார். அமைச்சர் பதவிகளை ஏற்று பொருளாதார நெருக்கடியை தீர்க்க உதவ வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். இதில்,  நிதி அமைச்சராக அலி சப்ரியும், கல்வி அமைச்சரா...