நான் போயஸ்கார்டன் செல்வது உங்கள் கைகளில் உள்ளது: தொண்டர்கள் மத்தியில் தீபா பரபரப்பு பேச்சு
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கட்சி தொண்டர்கள், முன்னாள் நிர்வாகிகள் பலர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை சந்தித்து அரசியலுக்கு வரும்படி வற்புறுத்தி வருகிறார்கள்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் தீபா வீட்டுக்கு தினமும் வருகிறார்கள். வீட்டின் முன்பு திரளும் தொண்டர்கள் மத்தியில் தீபாவும் பேசுகிறார்.
நேற்று கோவை, திருச்சி, தூத்துக்குடி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் குவிந்திருந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் தீபாவை சந்தித்து பேசினார்கள்.
எனக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் அனைவருக்கும் நன்றி. சிலர் வேண்டும் என்றே வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அதை நம்ப வேண்டாம். வதந்திகளுக்கு நீங்களே முற்றுப்புள்ளி வையுங்கள். என்னை நம்பி வருபவர்களை கைவிட மாட்டேன்.
மக்களால் நான், மக்கள...
