சென்னையில் ஏன் பாலியல் தொழிலை சட்டப்படி அனுமதிக்கக் கூடாது?: புரியாத புதிர் தயாரிப்பாளர்
மும்பையில் பாலியல் தொழில் சட்டப்படி செல்லும் என்கிறபோது சென்னையில் மட்டும் அப்படி ஏன் இல்லை என பட தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் கேள்வி எழுப்பியுள்ளார். செக்ஸ் கல்வியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சிவப்பு எனக்கு பிடிக்கும் படம் இன்னும் ரிலீஸாகாமலேயே உள்ளது. யுரேகா இயக்கத்தில் சான்ட்ரா ஏமி நடித்துள்ள இந்த படத்தை விஜய் சேதுபதியின் புரியாத புதிர் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் தயாரித்துள்ளார். இது குறித்து சதீஷ் கூறுகையில்,
பிற பட வேலைகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் சிவப்பு எனக்கு பிடிக்கும் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. செக்ஸ் கல்வி மற்றும் நகரில் உள்ள சிவப்பு விளக்கு பகுதிகளை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு எனக்கு பிடிக்கும் படம் குறித்து பலர் என்னை கேள்வி கேட்டார்கள். சிவப்பு என்பதில் ஒரு கருத்து உள்ளது என்று அவர்களுக்கு நான் விளக்கம் அளிக்க வேண்டியதாகிவிட்டது.
படத்தில் சான்ட்ர...
