மீண்டும் நாடக மேடை
1980-90கள் வரை பெரும்பாலும் நாடகங்கள் திரைப்படங்களை போல் வெளிவந்து அதுவும் சனி மற்றும் ஞாயிறுகளில் சபாக்களில் கூட்டம் நிரம்பி வழிந்து வந்தது. ஆர்.எஸ்.மனோகர், சோ, எஸ்.வி.சேகர், விசு, காத்தாடி ராமமூர்த்தி, கிரேசி மோகன் இன்னும் பிற நாடக கலைஞர்களால் நாடகங்கள் மேடை ஏறிவந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர், காலம் செல்ல செல்ல ரசிகர்களும் குறைந்து கலைஞர்களும் வயது மூப்பின் காரணமாக நடிப்பது குறைய தொடங்கியது.அப்படியும் அங்கொன்றும், இங்கொன்றுமாக நாடகங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. தனியார் தொலைக்காட்சிகளின் வருகை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் அபரிதமான வளர்ச்சியின் காரணமாக நாடக தொழில் நலிவடைந்து விட்டது. தொலைக்காட்சிகளிலும் மெகா, மகா என சீரியல்கள் படையெடுத்து இன்றைய பெண்கள், முதியோர் என அனைவரும் டிவி முன்பு அமர்ந்து சீரியலே கதி என்றாகிவிட்டது.
இதிகாச புராணங்கள் முன்பெல்லாம் மேடையேறி அதற்கென்று கலை...
