செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 8
Shadow

Author: Kodanki

AI மூலம் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான ஸ்ருதி ஹாசனின் சட்டப் போராட்டம்!

AI மூலம் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான ஸ்ருதி ஹாசனின் சட்டப் போராட்டம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  AI மூலம் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான ஸ்ருதி ஹாசனின் சட்டப் போராட்டம்: திரைத்துறைக்கான புதிய தொடக்கம் !! செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியால் ஒருவரின் முகம், பேச்சு மற்றும் தோற்றத்தை கணப்பொழுதில் அச்சு  அசலாக உருவாக்கிவிடும் இக்காலகட்டத்தில், ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தையும் அவரது சம்மதத்தையும் பாதுகாப்பது முதன்மையான தேவையாக உருவெடுத்துள்ளது. AI மூலம் உருவாக்கப்படும் டீப்ஃபேக் (Deepfake), உருமாற்றப்பட்ட (Morphed) புகைப்படங்கள், போலியாகத் தொகுக்கப்பட்ட காணொளிகள் மூலம் தனது அனுமதி இல்லாமல் அடையாளம் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன் சட்டரீதியான போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். இவ்வழக்கை விசாரித்த பம்பாய் உயர் நீதிமன்றம், ஸ்ருதி ஹாசனுக்கு சாதகமாக இடைக்காலப் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் தனது மனுவில் ...
செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் ‘அன்பில் அவன்’

செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் ‘அன்பில் அவன்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் ! முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள, இப்படம் காதல் கதைக்களத்துடன், அழகான உணர்வுகளையும் கலந்து, சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். இப்படத்தில் அசோக் செல்வனுடன் ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஆர்.கே. செல்வா படத்தொகுப்பையும், மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ள...
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !! ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படக் குழுவினர் சமீபத்தில் சென்னை அலுவலகத்தில் உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்து சிறப்பான தருணத்தை பகிர்ந்து கொண்டனர். இந்த திரைப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்த கமல்ஹாசன், படக்குழுவினரின் ஒட்டுமொத்த பணியையும் வெகுவாக பாராட்டியதுடன், அவர்களின் முயற்சிகளுக்கும் படத்தின் சுவாரஸ்யமான திரை வடிவமைப்பிற்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் தனது வாழ்த்துகளையும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளையும் அவர் பகிர்ந்து கொண்டது படக்குழுவினருக்கு மறக்க முடியாத தருணமாக அமைந்தது. இந்த சந்திப்பில் திரைப்படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏ.டி., நடிகர்கள் திலீஷ் போத்தன், ஃபகத் பாசில், கிரண் ஜோஸி, சங்கீத் பிரதாப் மற்றும் உன்னிமாயா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், ஃ...
படத்திற்கு கிடைத்த வரவேற்பு பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த ‘ஹாய்’ படக்குழு!

படத்திற்கு கிடைத்த வரவேற்பு பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த ‘ஹாய்’ படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு! நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்து தங்களது நன்றியைத் தெரிவித்தனர். இந்த சந்திப்பில் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டு, ‘ஹாய்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு குறித்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில்… தயாரிப்பாளர்...
ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா !!

ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா !! AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஃபேண்டஸி திரில்லராக உருவாகியுள்ள “இம்மார்டல்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது. படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில், “இம்மார்டல்” திரைப்படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன. படத்தின் உருவாக்கம், கதைக்களம் மற்றும் படக்குழுவினரின் அனுபவங்கள் விழாவை மேலும் சிறப்பாக்கின. தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் பேசியதாவது.., இந்தக் கதையை இயக்குநர் மாரியப்பன் சின்னா முதன்முதலில் என்னிடம் கூறியபோது, ‘இது ஹாலிவுட் படம் போன்று இருக்கிறது. இதை எப்படி சாத்தியப்படுத...
தந்தை, மகன் உறவை பேசும் ஆழமான உணர்வுப்பூர்வ பயணம் ‘ஃபாதர்’ திரைப்பட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!

தந்தை, மகன் உறவை பேசும் ஆழமான உணர்வுப்பூர்வ பயணம் ‘ஃபாதர்’ திரைப்பட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தந்தை, மகன் உறவை பேசும் ஆழமான உணர்வுப்பூர்வ பயணம் ‘ஃபாதர்’ திரைப்பட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு! பிரபல இயக்குநர் R. சந்துரு தயாரிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘ஃபாதர்’. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. தந்தை – மகன் இடையேயான ஆழமானதும், பல நேரங்களில் வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படாததுமான உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டார்லிங் கிருஷ்ணா மற்றும் பன்முகத் திறமை கொண்ட திரை ஆளுமை பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை ராஜ்மோகன் இயக்கியுள்ளார். டீசர், படத்தின் உணர்வுப்பூர்வமான உலகத்தைப் பற்றிய சுவாரஸ்யமான பார்வையை வழங்குவதோடு, கதையின் மையமாக இருக்கும் தந்தை – மகன் உறவு குறித்த ஆர்வத்தையும் ஏற...
சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா! KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் தயாரிப்பில், ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’. ஆக்‌ஷன், கேங்ஸ்டர் உலகம், குடும்ப உறவுகள், துரோகம், அதிகாரப் போட்டி என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகியுள்ள இப்படம், ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ‘டாக்ஸிக்’ படக்குழுவினர் தொடர்ந்து ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழ் ரசிகர்களை நேரடியாகச் சந்தித்து தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் நோக்கில், நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு ...
‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா! மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குநர் தயாரிப்பாளர் இரா சரவணன் பேசியதாவது.., “ஆகஸ்...
“பியார் பிரேமா கல்யாணம்” கோடங்கி விமர்சனம் 3/5

“பியார் பிரேமா கல்யாணம்” கோடங்கி விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  “பியார் பிரேமா காதல்”ல காதலை வைத்து விளையாடிய இளன், இப்போ “பியார் பிரேமா கல்யாணம்”ல கல்யாணத்தையே தலைகீழாக நிறுத்தியிருக்கிறார்! வழக்கமாக தமிழ் சினிமாவில் என்ன நடக்கும்? பெண் திருமணம் முடிந்ததும் கணவன் வீட்டுக்குப் போக வேண்டும். இந்தப் படத்தில் இயக்குநர் கேட்கிறார்: “ஏன் பெண் மட்டும் வீட்டை விட்டுப் போகணும்? ஆண் போகக்கூடாதா?” அதோடு முடிந்திருந்தால் இது நல்ல சமூகக் கருத்துள்ள படம். ஆனால் இயக்குநர் சொல்கிறார்: “இல்ல சார்… இதை வைத்து 2 மணி நேரம் காமெடியும் பண்ணணும்!” அங்குதான் பியார் பிரேமா கல்யாணம் ஆரம்பிக்கிறது. கதை என்ன? இளன் நடித்த கதாநாயகன் திருமணத்துக்குத் தயாராகிறார். சான்வி மேக்னா நடிக்கும் பவி, திருமணத்துக்குப் பிறகு தன்னுடைய பெற்றோரை விட்டுப் பிரிந்து கணவன் வீட்டுக்குச் செல்ல மறுக்கிறார். அதனால் என்ன முடிவு? “கணவன் மனைவி வீட்டுக்குப் ...
‘மண்டாடி’ படத்திற்கு U/A சான்றிதழ் செப்டம்பர் 10, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

‘மண்டாடி’ படத்திற்கு U/A சான்றிதழ் செப்டம்பர் 10, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட்டின் ‘மண்டாடி’ படத்திற்கு U/A சான்றிதழ் செப்டம்பர் 10, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது! ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு பின்னணியிலான ஆக்‌ஷன் டிராமா திரைப்படமான ‘மண்டாடி’, தணிக்கை பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து U/A சான்றிதழ் பெற்றுள்ளது. இதன் மூலம், இப்படம் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகத் தயாராகியுள்ளது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். தனித்துவமான கதை உலகம், பாரம்பரிய விளையாட்டை மையமாகக் கொண்ட பின்னணி மற்றும் சூரியின் இதுவரை பார்த்திராத தோற்றம் ஆகியவற்றால் ‘மண்டாடி’ திரைப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எத...