நிர்வாக சீர்க்கேட்டினால் அரசு கஜானாவை காலி செய்தவர்கள் மக்கள் தலையில் கைவைப்பதா என மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஆடம்பர விழாக்கள், நிர்வாக சீர்க்கேட்டினால் அரசு கஜானாவை காலி செய்தவர்கள் மக்கள் தலையில் கைவைப்பதா என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை:
"ஏழை – எளிய, நடுத்தர மக்களை சோதனைக்கும், வேதனைக்கும் தொடர்ந்து ஆளாக்கி, அடிக்குமேல் அடித்துக் கசக்கிக் கந்தலாக்கி வரும் அதிமுக அரசு அடுத்த தாக்குதலாக, திடீரென்று 3600 கோடி ரூபாய்க்கு மேல் பேருந்துக் கட்டணங்களை மிகக் கடுமையாக உயர்த்தியிருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.
டீசல் விலை உயர்வு மிக அதிகமாக இருந்த 2006 முதல் 2011 வரையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும், முதியவர்களும், மாணவர்களும் பயன்படுத்தும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல், ஐந்தாண்டு காலம் ஆட்சி செய்தவர் கருணாநிதி என்பதை இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்...









