சினேகா உறுதிமொழி
நடிகை சினேகா சமீபத்தில் நடிகை பாவனாவுக்கு ஏற்பட்ட பாலியல் பலாத்காரம் பற்றி செய்தியாளர்களுக்கு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது :
"என்னுடைய துறையில் பணியாற்றும் என் சக கலைஞர்களான பாவனா மற்றும் வரலக்ஷ்மி ஆகியோருக்கு நடந்த சம்பவங்கள், எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்து இருக்கின்றது. இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாய் இருப்பேன் என்பதைனை உறுதிப்படுத்தி கொள்ள விரும்புகின்றேன். எந்தவித பயமுமின்றி அவர்களுக்கு நடந்ததை வெளிப்படையாக தெரிவித்த அவர்களின் தைரியத்தை பாராட்டுகின்றேன்.
இத்தகைய பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், நம் சமூதாயத்தில் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. பாலியல் துஷ்பிரயோகம், பலாத்காரம் என நாட்டின் ஒவ்வொரு மூலைகளிலும் நடக்கும் கொடுமைகளை அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் பெரும்பாலான பாதிக்கப்பட்ட பெண்கள் அதனை வெளியே சொல...
