வெள்ளிக்கிழமை, ஜூன் 26
Shadow

Author: Kodanki

பட்ஜெட்டுக்கு முன் அல்வா கிண்டிய அருண் ஜெட்லி…!

பட்ஜெட்டுக்கு முன் அல்வா கிண்டிய அருண் ஜெட்லி…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பட்ஜெட்டுக்கு முன் அல்வா கிண்டிய அருண் ஜெட்லி...! ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தயாரிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது பழங்கால சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து, இதுதொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், மத்திய பட்ஜெட்டுக்கு முன் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி முன்னிலையில் இன்று அல்வா தயாரிக்கப்பட்டது.  ...
நிர்வாக சீர்க்கேட்டினால் அரசு கஜானாவை காலி செய்தவர்கள் மக்கள் தலையில் கைவைப்பதா என மு.க.ஸ்டாலின் கண்டனம்

நிர்வாக சீர்க்கேட்டினால் அரசு கஜானாவை காலி செய்தவர்கள் மக்கள் தலையில் கைவைப்பதா என மு.க.ஸ்டாலின் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆடம்பர விழாக்கள், நிர்வாக சீர்க்கேட்டினால் அரசு கஜானாவை காலி செய்தவர்கள் மக்கள் தலையில் கைவைப்பதா என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை: "ஏழை – எளிய, நடுத்தர மக்களை சோதனைக்கும், வேதனைக்கும் தொடர்ந்து ஆளாக்கி, அடிக்குமேல் அடித்துக் கசக்கிக் கந்தலாக்கி வரும் அதிமுக அரசு அடுத்த தாக்குதலாக, திடீரென்று 3600 கோடி ரூபாய்க்கு மேல் பேருந்துக் கட்டணங்களை மிகக் கடுமையாக உயர்த்தியிருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. டீசல் விலை உயர்வு மிக அதிகமாக இருந்த 2006 முதல் 2011 வரையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும், முதியவர்களும், மாணவர்களும் பயன்படுத்தும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல், ஐந்தாண்டு காலம் ஆட்சி செய்தவர் கருணாநிதி என்பதை இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்...
அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு 22-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு 22-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக அரசு சார்பில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனம் பெறுவதற்கான மானியம் அளிக்கப்பட உள்ளது. அதன்படி ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் ஆகியவற்றில் எதுகுறைவோ அது வழங்கப்படும். வாகனத்தை பெற ரிசர்வ் வங்கியால் அதிகாரம் அளிக்கப்பட்ட வங்கிகளிடம் இருந்து கடன் பெறலாம். 125 சி.சி. திறன் வரையிலான வாகனத்தை மட்டுமே வாங்க வேண்டும். பணிபுரியும் பெண்கள், அமைப்பு மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பதிவு பெற்ற பெண்கள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுவோர், சுயமாக தொழில் செய்யும் பெண்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசுத்திட்டங்களில் பணியாற்றும் பெண்கள், மாவட்ட கற்றல் மையம், கிராம வறுமை ஒழிப்பு குழுக்கள் ஆகியவற்றில் பணியாற்றும் பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனங்களை பெற விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வயது வரையில் ஓட்டுனர் உரிமம...
சர்ச்சையில் சிக்குமா விஜய்சேதுபதியின் சீதக்காதி பட தலைப்பு..!

சர்ச்சையில் சிக்குமா விஜய்சேதுபதியின் சீதக்காதி பட தலைப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் புதிய படத்திற்கு சீதக்காதி என்று பெயரிடப் பட்டுள்ளது. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இந்த படத்தினை இயக்குகிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சீதக்காதி திரைப்படத்தின் தலைப்பு தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சீதக்காதி என்ற பெயர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பெரும்வள்ளலாக வாழ்ந்து மறைந்த வள்ளல் சீதக்காதி பெயரால் உள்ளதால் அவரின் வாழ்க்கை தொடர்பான திரைப்படம் என்ற வதந்தி பரவி வருகிறது. குறிப்பாக கீழக்கரை பகுதியில் சீதக்காதி திரைப்பட தலைப்பு குறித்த சர்ச்சை அதிகஅளவில் எழுந்துள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகிம் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடிகர் விஜய்சேதுபதி நடிக்க சீதக்காதி என்ற பெயரிடப்பட்டுள்ள திரைப்படம் படப்பிடிப்...
அமித்ஷா தலை மேல் தொங்கும் கத்தியாக போலி என்கவுண்ட்டர் வழக்கு…  மும்பை ஐகோர்ட்டில் புது வழக்கு..!

அமித்ஷா தலை மேல் தொங்கும் கத்தியாக போலி என்கவுண்ட்டர் வழக்கு… மும்பை ஐகோர்ட்டில் புது வழக்கு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
குஜராத்தில் 2005-ம் ஆண்டு சொராபுதீன் ஷேக், போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி, பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷா உள்ளிட்ட 23 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இருந்து அமித் ஷாவை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விடுவித்து விட்டது. இதேபோன்று, குஜராத், ராஜஸ்தான் போலீஸ் அதிகாரிகளும் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் அமித் ஷாவை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விடுவித்ததை எதிர்த்து சி.பி.ஐ. மேல்முறையீடு செய்யவில்லை. இதன் காரணமாக சி.பி.ஐ. மீது மும்பை ஐகோர்ட்டில் மும்பை வக்கீல்கள் சங்கம் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்து உள்ளது. அதில், “இந்த வழக்கில் விசாரணை நடத்திய சி.பி.ஐ. முன்னணி புலனாய்வு அமைப்பு ஆகும். அப்படி இருக்கிறபோது, சட்டத்தின் ஆட்சியை தனது செயல்கள் மூலம் க...
ஏழுமலையான் பற்றி அவதூறு பேச்சு: கனிமொழி எம்.பி. மீது 6 பிரிவுகளில் வழக்கு

ஏழுமலையான் பற்றி அவதூறு பேச்சு: கனிமொழி எம்.பி. மீது 6 பிரிவுகளில் வழக்கு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் பற்றி அவதூறாக பேசியதாக, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் கனிமொழி எம்.பி. மீது புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன. அந்த புகார்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாமல் உள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி தலைவர் மகேந்திரரெட்டி என்பவர் ஏழுமலையான் பற்றி அவதூறாக பேசிய கனிமொழி எம்.பி. மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி ஹரீம் நகர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஏழுமலையான் பற்றி அவதூறாக பேசிய கனிமொழி எம்.பி. மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஹரீம் நகர் 3-வது டவுன் போலீசாருக்கு உத்தரவிட்டார்....
20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு…  பலம் குறையும் அரவிந்த் கெஜ்ரிவால்..!

20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு… பலம் குறையும் அரவிந்த் கெஜ்ரிவால்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டெல்லியில் 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அரவிந்த் கெஜ்ரிவால், முதல்-மந்திரி ஆனார். அதைத் தொடர்ந்து மார்ச் 13-ந் தேதி, ஆளுங்கட்சியின் 21 எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகளின் பாராளுமன்ற செயலர்களாக நியமிக்கப்பட்டனர். இதற்கு எதிராக காங்கிரசும், பாரதீய ஜனதாவும் போர்க்கொடி தூக்கின. இதனால் இரட்டை ஆதாய பதவி என்ற அடிப்படையில் அவர்களது பதவி பறிபோகும் ஆபத்து எழுந்தது. டெல்லி ஐகோர்ட்டில் ராஷ்ட்ரீய முக்தி மோர்ச்சா என்ற அமைப்பு வழக்கு தொடுத்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பில், கவர்னரின் ஒப்புதலை பெறாமல் 21 எம்.எல்.ஏ.க்களை மந்திரிகளின் பாராளுமன்ற செயலர்களாக நியமித்தது செல்லாது என கூறி, அவர்களது நியமனம் ரத்து செய்யப்பட்...
விமானங்களில் பயணிகள் செல்போன்கள் மற்றும் இணையச் சேவையைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் -டிராய் பரிந்துரை

விமானங்களில் பயணிகள் செல்போன்கள் மற்றும் இணையச் சேவையைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் -டிராய் பரிந்துரை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
விமானங்களில் பயணிகள் செல்போன்கள் மற்றும் இணையச் சேவையைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு டிராய் பரிந்துரைத்துள்ளது. தற்போது விமானங்களில் செல்போன்கள் பயன்படுத்த பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. பல்வேறு பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில், விமானப் பயணங்களின்போது செல்போன் சேவைகளை பயன்படுத்த அனுமதிக்கும் திட்டம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குமாறு, டிராயிடம் மத்திய தொலைத்தொடர்புத் துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோரியிருந்தது. இதையடுத்து, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகளைக் கேட்டறிந்த டிராய், தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மத்திய அரசிடம் அளித்துள்ளது. அதில், விமானப் பயணங்களின்போது செல்லிடப்பேசி மற்றும் இணையச் சேவையை பயன்படுத்த பயணிகளை அனுமதிக்கலாம் என்று பரிந்துர...
அப்துல் கலாம் போல பல கனவுகள் கொண்டவன் நான் -கமல்ஹாசன்

அப்துல் கலாம் போல பல கனவுகள் கொண்டவன் நான் -கமல்ஹாசன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கும் கமல்ஹாசன் நடிகர் கமல்ஹாசன் ஜனவரி 16ந்தேதி நள்ளிரவில் தனது அரசியல் பயணத்தினை பிப்ரவரி 21ந்தேதி தொடங்குகிறேன் என அறிவிப்பு வெளியிட்டார். அவர் பிறந்த ராமநாதபுரத்தில் கட்சியின் பெயரை அறிவிக்கிறார். ஆரம்பகட்ட சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து நடிகர் கமல்ஹாசன் வரும் 21ந்தேதி அரசியல் பயணத்தினை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்துள்ள விளக்கத்தில், கலாமிற்கு பல கனவுகள் இருந்தன. அவரை போல பல கனவுகள் கொண்டவன் நான்.  விமர்சிப்பது மட்டும் என் வேலையன்று.  நான் இறங்கி வேலை செய்ய வந்தவன் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மட்டுமல...
போதைக்கு அடிமையான ரெஜினா..!

போதைக்கு அடிமையான ரெஜினா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘ராஜதந்திரம்’ படம் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ரெஜினா. இவரது நடிப்பில் தற்போது ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘பார்ட்டி’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் கார்த்திக், கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்திலும் நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தற்போது தெலுங்கில் நானி தயாரித்து வரும் படம் ‘அவே’, இந்த படத்தில் ரவி தேஜா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோரிடம் ரெஜினா நடித்து வருகிறார். இதில், போதைக்கு அடிமையான பெண்ணாக நடிக்கிறார் ரெஜினா. இது பற்றி கூறியுள்ள அவர், “எனக்கு பெயர் சொல்லும் படமாகவும், வேடமாகவும் இது அமையும்’ என்றார். மேலும் இந்த வேடம் மிகவும் சவாலாக இருந்ததாகவும் ரெஜினா கூறியிருக்கிறார்....