பஸ் ஸ்டிரைக், கவர்னர் ஆய்வு, தினகரன் வருகை உள்ளிட்ட பல பரபரப்புகளுக்கிடையில் சட்டசபை இன்று தொடங்குகிறது..!
பஸ் ஸ்டிரைக், கவர்னர் ஆய்வு, தினகரன் வருகை
உள்ளிட்ட பல பரபரப்புகளுக்கிடையில் சட்டசபை இன்று தொடங்குகிறது..!
தமிழக சட்டசபையின், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. அவை மரபுப்படி, இன்றைய கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். இதற்காக, காலை 9.55 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்திற்கு வரும் அவரை, சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் பூபதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள்.
சட்டசபைக்குள் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. சபாநாயகர் இருக்கைக்கு வரும் அவர், சபாநாயகர், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர் களை பார்த்து வணக்கம் செலுத்துகிறார். அதன்பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுகிறது.
அதன்பிறகு, 10 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆங்...









