ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28
Shadow

Author: Kodanki

உச்சநீதிமன்றம் இறுதித்தீர்ப்பு வழங்கும் வரை ஆதார் எதற்கும் கட்டாயமில்லை!

உச்சநீதிமன்றம் இறுதித்தீர்ப்பு வழங்கும் வரை ஆதார் எதற்கும் கட்டாயமில்லை!

NEWS, செய்திகள்
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வந்த நிலையில், இனி எதற்கும் ஆதார் கட்டாயமில்லை என உச்ச நீதிமன்ற இன்று (மார்ச் 13) தீர்ப்பளித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வங்கி கணக்கு, பான்கார்டு, செல்பேசி எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. செல்பேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கும், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கும் 31ஆம் தேதி கடைசி நாள் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆதார் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு கடந்த மார்ச் 6ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், “வங்கி கணக்கு உள்ளிட்டவையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மத...
கமலின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்களா பாஜக தமிழிசை & எச். ராஜா?!

கமலின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்களா பாஜக தமிழிசை & எச். ராஜா?!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்தில் சேர்ந்ததாக தனக்கு மெயில் வந்துள்ளதாக பாஜக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பித்துள்ள நடிகர் கமல்ஹாசன், கட்சியின் உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். கட்சியைப் பலப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளார். மக்கள் நீதி மையத்திற்கு இணையதளம் மூலமாகவும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் சேர்க்கை குறித்து விமர்சனம் செய்துள்ளார் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். இதுகுறித்து திருப்பூரில் இன்று (மார்ச் 13) செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், "நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யத்திற்கு உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். சொன்னால் அதிர்ச்சியடைவீர்கள். கமல் கட்சியிலிருந்து எனக்கு மெயில் வந்துள்ளது. அதில்...
அதர்வா  நடிக்கும் ” பூமராங்”  படத்தில் தேசபக்தி பாடலொன்று பிரமாண்டம்!

அதர்வா நடிக்கும் ” பூமராங்” படத்தில் தேசபக்தி பாடலொன்று பிரமாண்டம்!

CINI NEWS, திரைப்படங்கள்
வளர்ந்து வரும் இளம்  நடிகர்களில் அதர்வா திரை வர்த்தகத்தில் தன்னுடைய நிலையை வலுவாக்கி கொண்டு  இருக்கிறார்.இந்த வருடம் வெளி வர இருக்கும் அவரது படங்கள் அவரை இன்னமும் உயரத்தில் கொண்டு போகும் என எதிர்பார்க்க படுகிறது. அந்த வகையில் ஆர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் "பூமராங்"  மிகவும் எதிர்பார்க்க படுகிறது..அவருடன்  மேகா ஆகாஷ் மற்றும் உபன் படேல் நடிப்பில்  உருவாகிவரும்  படம் 'பூமராங்'. இந்த படத்தை R கண்ணனின் 'மசாலா பிக்ஸ்' நிறுவனம் தயாரிக்கி ன்றது. இந்த படத்தின் ஒவ்வொரு அறிவிப்புமே தமிழ் சினிமா ரசிகர்கள்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றது. மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் தயாராகிவருகின்றது. இந்த படத்தின் ஒரு பாடலுக்காக  இப்படத்தின் கலை இயக்குனர் ஷிவா யாதவ் ஒரு கோடி ருபாய் செலவில் ஒரு மிக பிரம்மாண்ட செட்டை எழுப்பியுள்ளார் என்பதே தற்பொழுதைய சுவாரஸ்யமான செய்தி.இந்த பாடல் , பிரம்மாண்டமான செட் மற்...
சாட்சிகள் சொர்க்கத்தில்… அதிர வைக்கும் பாலச்சந்திரன் படுகொலை படத்தின் ட்ரைலர்

சாட்சிகள் சொர்க்கத்தில்… அதிர வைக்கும் பாலச்சந்திரன் படுகொலை படத்தின் ட்ரைலர்

CINI NEWS, திரைப்படங்கள்
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய  'சாட்சிகள் சொர்க்கத்தில்' (Witness in Heaven) படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  ஏராளமான தமிழர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாக அமைந்துவிட்டது. படத்தின் ட்ரைலர் பார்ப்பவர்களை உலுக்கியெடுத்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலையை மையமாக வைத்து ஈழன் இளங்கோ ஒளிப்பதிவு இயக்கியுள்ள படம் இது. அதே நேரம் போரில் நடந்த விஷயங்கள் எதையும் காட்சிப்படுத்தவில்லை. பாலச்சந்திரன் படுகொலையை மட்டுமே பிரதானப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்துக்கு சதீஷ் வர்ஷன் இசை அமைத்துள்ளார். சாட்சிகள் சொர்க்கத்தில் படம் உலகெங்கும் விரைவில் வெளியாகவிருக்கிறது. டிரைலர் காண  க்ளிக்...
திருச்சி காவலரால் உதைக்கப்பட்ட உஷா கர்ப்பிணி அல்ல! – மெடிக்கல் ரிப்போர்ட்

திருச்சி காவலரால் உதைக்கப்பட்ட உஷா கர்ப்பிணி அல்ல! – மெடிக்கல் ரிப்போர்ட்

NEWS, செய்திகள்
திருச்சியில் காவல் ஆய்வாளர் உதைத்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்த உஷா கர்ப்பிணிப் பெண் அல்ல என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி திருவெறும்பூரில் ராஜா - உஷா என்ற தம்பதியர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, வாகனத் தணிக்கைக்கு நிற்காமல் சென்றதாகக் கூறி காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் வாகனத்திலிருந்து விழுந்த உஷா வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது அவர் கணவர், தன் மனைவி உஷா மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி அழுதார். இந்த அழுகுரல் மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தி உஷாவின் மரணத்துக்குக் காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். காவல் ஆய்வாளர் காமராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து விசாரிக்க மனித உரிமை ஆணையமும...
தண்டனைக் கைதியான சசிகலா சிறையில் சீருடை அணியவில்லை: மகளிர் ஆணைய தலைவி தகவல்

தண்டனைக் கைதியான சசிகலா சிறையில் சீருடை அணியவில்லை: மகளிர் ஆணைய தலைவி தகவல்

HOME SLIDER, politics, செய்திகள்
சொத்து குவிப்புவழக்கில் சிறைத்தண்டனை விதிக் கப்பட்ட சசிகலா, பெங்களூரு சிறையில் தொடர்ந்து சிறப்பு சலுகைகள் அனுபவித்து வருவது மீண்டும் தெரிய வந்துள்ளது. சிறையை பார்வையிட்ட தேசிய மகளிர் ஆணைய தலைவியே இதை ஒப்புக்கொண்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகளை மீறி அவருக்கு சிறையில் தனி சமையலறை, சிறப்பு சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கர்நாடக முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கூறியது கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி உயர் மட்ட விசாரணை நடத்தப்பட்டபோதிலும், அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. இந்தநிலையில் முதல்வர் சித்தராமையா உத்தரவின் பேரில் தான் அனைத்து வசதிகளும் சசிகலாவுக்கு செய...
ஹன்சிகா மீது அவரது மேனேஜர் மோசடி புகார்!

ஹன்சிகா மீது அவரது மேனேஜர் மோசடி புகார்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
ஹன்சிகா மீது அவருடைய மேனேஜர் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ‘எங்கேயும் காதல்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஹன்சிகா. தொடர்ந்து ‘மாப்பிள்ளை’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சிங்கம் 2’, ‘ஆம்பள’, ‘குலேபகாவலி’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். ஜெயம் ரவி, தனுஷ், விஜய், உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சித்தார்த், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், சிம்பு, பிரபுதேவா என தமிழின் முன்னணி மற்றும் இளம் நடிகர்கள் பெரும்பாலானோருடன் ஜோடியாக நடித்துவிட்டார். மணிரத்னத்தின் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துவரும் ‘துப்பாக்கி முனை’ மற்றும் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் ஆகியவற்றில் தற்போது நடித்து வருகிறார் ஹன்சிகா. இந்நிலையில், அவரிடம் மேனேஜராகப் பணிபுரிந்த முனுசாமி என்பவ...
சென்னையில் நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி கூட்டம்

சென்னையில் நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி கூட்டம்

CINI NEWS, சினி நிகழ்வுகள்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அஞ்சலிக் கூட்டம் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக போனிகபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் மும்பையில் இருந்து வந்து இருந்தனர். அங்கு ஸ்ரீதேவியின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. பக்தி பாடல்கள் பாடப்பட்டன. பிரார்த்தனையும் நடந்தது. இதில் தமிழ் திரையுலகினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர். தமிழகம் மட்டுமின்றி இந்திய திரைப்பட ரசிகர்களை கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24-ம் தேதி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரின் மரணம் சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. தமிழகத்தின் சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி கிராமம் தான் என்பதாலும், தமிழ் திரையுலகிலும், இந்தி திரையுலகிலும் கொடி கட்டி பறந்தவர் என்பதாலும், அவர் மரணம் அடைந்ததை பலர...
குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை

குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை

NEWS, செய்திகள்
குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களுக்காக கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து வைரமுத்து தனது டிவிட்டர் பதிவில்,  “உயிர் வலிக்கிறது; ஊரே அழுகிறது. காட்டுத்தீயில் கருகிய தங்கங்கள்மீது கண்ணீர் சொரிகிறேன். காயப்பட்டவர்கள் பிழைக்க வேண்டுமே என்று பேராசை கொள்கிறேன். பெற்றோர் நிலையில் நின்று பெருவலி உணர்கிறேன். "சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ; தீயே உனக்கொருநாள் தீமூட்டிப் பாரோமோ" என்ற கண்ணதாசன் வரிகளைக் கடன்வாங்கிக் கலங்குகிறேன். இந்த விபத்தில் இயற்கையின் பங்கு எவ்வளவு, மனிதப் பங்கு எவ்வளவு என்பது ஆய்வுக்குரியது. மரணத்திலிருந்து பாடம் படிப்போம்; புதிய இழப்புகள் நேராமல் காப்போம்” என்று தெரிவித்துள்ளார் தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்காக சென்றவர்களில் 9 பேர் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இவர்களில் 6 பேர் சென்னையையும், 3 ப...
விண்ணப்பித்துவிட்டீர்களா..? நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

NEWS, செய்திகள்
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து இன்று மாலை 5.30க்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தனித் தேர்வர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்ற தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவிட்டது. மேலும் நீட் தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்றும் அதற்கு பதிலாக ரேசன் அட்டை, கடவுச்சீட்டு, வங்கிக் கணக்கு எண், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது அரசு அடையாள அட்டையின் எண்ணைக் குறிப்பிட்டால் போதுமானது. நீட் தேர்வுக்காக வழங்கப்பட்டுள்ள இதர விதிமுறைகள் எதிலும் மாற்றமில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத...