தமிழ் பாரம்பரியத்திற்கும் தமிழுக்கும் தலைவணங்குகிறேன் – பிரதமர் மோடி
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளான இன்று, தமிழ்நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்கள் இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் ’அம்மா ஸ்கூட்டர் திட்டம்’ அறிமுக விழாவில் பிரதமர் மோடி பயனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை வழங்கினார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
தமிழுக்கும், தமிழ் பாரம்பரியத்திற்கும் நான் தலைவணங்குகிறேன். அன்புமிக்க சகோதர சகோதரிகளே வணக்கம். மகாகவி பாரதியாரின் மண்ணில் நிற்பதற்கு பெருமைபடுகிறேன். ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதாவின் கனவு திட்டமான மானிய ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழகத்துக்கு காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டதைவிட இப்போது கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஏராளமான நிதி வழங்கப்பட்டுள்ளது. மகளிருக்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செ...








