ஸ்ரீ பி.நாகி ரெட்டி அவர்களின் தபால் முத்திரை மற்றும் புத்தக வெளியீட்டு விழா !
விஜயா குழும மருத்துவமனைகள் மற்றும் (விஜயா மருத்துவ பிரிவு & கல்வி அறக்கட்டளை) சார்பில் நேற்று ஒரு மிக பிரம்மாண்டமான விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் இந்தியாவின் துணை ஜனாதிபதி மரியாதைக்குரிய ஸ்ரீ எம்.வெங்கையா நாயுடு, தமிழ்நாட்டின் ஆளுநர் மரியாதைக்குரிய திரு.பன்வரிலால் ப்ரோஹிட் அவர்கள் முன்னிலையில் ஸ்ரீ பி.நாகி ரெட்டி அவர்களின் தபால் முத்திரை வெளியிடப்பட்டது. இந்த மாபெரும் விழாவில் சுகாதார துறை மற்றும் சினிமா துறையின் பல மூத்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஸ்ரீ பி.நாகி ரெட்டி அவர்களை பற்றிய புத்தகமும் வெளியிடப்பட்டது.
தபால் முத்திரை இந்தியாவின் துணை ஜனாதிபதி மரியாதைக்குரிய ஸ்ரீ எம்.வெங்கய்யா நாயுடு அவர்களால் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டின் ஆளுநர் மரியாதைக்குரிய திரு. பன்வரிலால் ப்ரோஹிட் அவர்கள் 'தி லெஜண்ட் - ஸ்ரீ B .நாகி ரெட்டி' என்ற புத்தகத்தை வெள...









