பிரதமர் மோடி தொடங்கி வைத்த அம்மா ஸ்கூட்டர் திட்டம்..!
பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சென்னை மற்றும் புதுவையில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இன்று மாலை விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மைத்ரேயன் எம்.பி. உள்ளிட்டோர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட மோடி, மெரினா கடற்கரையில் உள்ள ஐ.என்.எஸ். விமானப்படை தளத்தில் வந்து இறங்கினார். அங்கு அவரை தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வரவேற்றார். பிரதமரின் வருகையையொட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் கலைவாணர் அரங்கதுக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்க கலைவாணர் அரங்க வளாகத்தி...








