கமல்ஹாசன் வீட்டில் போலீஸ்..!
கமல்ஹாசன் வீட்டில் போலீஸ்
நடிகர் கமல்ஹாசன் மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகிறார். தான் விரைவில் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் அதற்கு முன்னோட்டமாக மையம் விசில் என்ற செயலியையும் வெளியிட்டுள்ளார். வார இதழ் ஒன்றில் கமல்ஹாசன் எழுதி வரும் தொடரில் இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையை குறிப்பிட்டதற்காக இந்து அமைப்புகள் கமல்ஹாசனை தாக்கிப் பேசி வந்தனர்.
தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக அமைதியாக இருந்த கமல்ஹாசன் நேற்று ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றி குறித்து, சுயமாக வளர்ந்த சுயேச்சை ஒரு ஓட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை பட்டுவாடா செய்துள்ளார். டோக்கனுக்கு விலை போய்விட்டார்கள் ஆர்.கே.நகர் வாக்காளர்கள். இது ஜனநாயகத்துக்கு வீழ்ச்சி என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு தினகரனும் எதிர்வினையாற்றியிருந்தார்.
வாக்காளர்களை பிச்சைக்காரர்கள...









