விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் “ஹரா’ படத்தின் டீசர் ஏப்ரல் 14 ரிலீஸ்!
*மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் 'ஹரா' திரைப்படத்தின் டீசர் ஏப்ரல் 14 வெளியீடு*
*பரப்பரப்பான பான் இந்தியா ஆக்ஷன் படமான 'ஹரா' தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது*
இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி-யின் சமீபத்திய படைப்பான 'பவுடர்' ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவரது அடுத்த படமான 'ஹரா'-வின் டீசர் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று வெளியாகிறது.
பதினான்கு வருடங்களுக்கு பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் 'ஹரா' திரைப்படத்தில் அவரது ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார். டீசரை தொடர்ந்து திரைப்படம் விரைவில் திரையரங்களில் வெளியாகவுள்ளது, அதுவும் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறத...









